Archive for மே, 2008

முட்டையோ முட்டை

சமீபத்தில் நான் முட்டை  பற்றி நிறைய ஊடகங்களில்  படித்ததாலும், கேட்டதாலும்  நானும் எனக்கு தெரிந்ததை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
தினமும் ஒரு ஆய்வு செய்து , அவர்களும் குழம்பி நம்மையும் கதறவைப்பதே இவர்களுக்கு வேலை. அதனால் நானும் என் பங்குக்கு ஏதாவது ஆய்வு முடிவை சொல்லி உங்களை வெறுப்பேற்றபோவதில்லைங்க.

(அதான் நீங்க தோழுக்கமேல வளந்தாச்சே, நீங்களே அதிகமா சாப்பிட்டு அவஸ்தைபடுவதா இல்லை, அளவா சப்பிட்டு  அம்சமாயிருப்பதா என்பதை முடிவுபண்ணிக்கோங்க)

நான் நம்முடைய வருங்கால மன்னர்களுக்கு தான் சொல்லப்போகின்றேன்.
சிறு குழந்தைகளுக்கு  தினமும் முட்டை கொடுப்பது ரெம்ப நல்லதாம். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக நல்ல புரதசத்து முட்டையில் தான் உள்ளது.
தாய்பால்  – நூறு%
முட்டை    – தொண்ணூற்றி மூன்று % நல்ல புரதம் இருக்கின்றதாம். அதற்கு பிறகு தான் பசும் பால், பயிறு எல்லாம்.

Add comment மே 28, 2008

துருதுரு குழந்தையும்……………..

பேசி ரெம்ப நாள் ஆகிவிட்டதே என்று லதாவை தொல்லைபேசியில் அழைத்தேன். வழக்கமான குசலம் விசாரித்தபிறகு
“நான் நேற்று ஒரு தோழி வீட்டிற்க்கு போயிருந்தேன். எப்படி தான் பிள்ளைகளை வளர்த்தார்களோ, ஒரு நிமிடம் அந்த வீட்டிலுள்ள பையன் நடந்ததை நான் பார்க்கவில்லை குரங்காட்டம் ஒரே தாவலும், துள்ளலும், ஓட்டமும் தான்.  என் பையன் அவனை பார்த்து ஒரே அழுகை, எனக்கு எப்படா அங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது” என்று என்னிடம் பொரிந்து தள்ளினார்.

நான் சிரித்துவைத்தேன் (சிறு குழந்தைகளை திட்டுவது எனக்கு பிடிக்காத ஒன்று)  என்ன சொல்வதென்று தெரியாமல்.

” அவ்வளவு சேஷ்டையையும் சோபா மேல் அரங்கேற்றிக்கொண்டிருந்தான். அம்மாவோ, அப்பாவோ அவனை கண்டுக்கொள்ளவேயில்லை. நான் பொறுக்கமுடியாமல் கடைசியில் அவர்களிடம் கேட்டுவிட்டேன். என்னமோ அது ஒரு விஷயமே இல்லாத மாதிரி ‘அவன் அப்படித்தான்’ என்று முடித்துவிட்டார்கள். அதன் பிறகு, என்ன பேசுகிறது என்று நானும் இருந்துவிட்டேன்” என்று லதா ஆதங்கத்துடன் முடித்தார்.

எல்லாவீட்டிலும் சின்ன பிள்ளைகள் இப்படித்தானிருக்கும். பொழுதுபோகவேண்டாமா அவர்களுக்கு?” என்று சிரித்துவிட்டு வைத்துவிட்டேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு,

வெளியே போகவேண்டும் என்று வீட்டில் ரகளை பண்ணிக்கொண்டிருந்தாள் கண்மணி. எங்கு போகலாம் என்று யோசித்து ,பின் லதா வீட்டிற்கு சென்றோம். அவங்க புதல்வனை இப்போது KG-யில் சேர்த்திருந்தார்கள். ஓடி, தாவி, திடீரென்று என் மேலும், கண்மணி மேலும் பாய்ந்தும் விளையாடிக் கொண்டிருந்தான். கண்மணி என் மேல் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டிருந்தாள்.

இவன் எப்போதும் இப்படிதான். ஒரு நிமிடம் சும்மாவே இருக்கமாட்டான். துருதுருவென்று எப்போதும் விளையாட்டு தான், சொன்னாலும் கேட்கமாட்டான்என்று பெருமிதம் பொங்க கூறினார்.

வழக்கம்போல் நானும் “எல்லாவீட்டிலும் சின்ன பிள்ளைகள் இப்படித்தானிருக்கும். பொழுதுபோகவேண்டாமா அவர்களுக்கு?” என்று பதிலளித்தேன்.

3 comments மே 26, 2008

பொய் சொல்லாதீங்க……..

Three men were waiting at Heaven’s Gate. St. Peter says, “OK, guys, pretty much thing goes up here, but whatever you do, never lie, or you will spend the rest of eternity with the ugliest women in the universe.”

So they all agree and are admitted in. The first guy makes it a week before he lies about how rich he was on Earth. Bam! Right at his side appears the ugliest woman he had ever seen.

The second guy makes it another couple weeks before he lies about how smart he is. Bam! At his side appears the second ugliest woman in the universe.

So the first two guys are walking around with their monsters of women when they see their third friend walking with the hottest woman ever conceived by man. The first two guys say in unison, “How did you land with that babe when we get stuck with these nasty women?”

He nudges the babe and says, “Tell them.” She says to the first two guys, “I lied.”

Add comment மே 25, 2008

மளிகைக்கடை விஜயம்

வேலை: PWDயில் , உப தொழில்: அரசியலை அலசி காயபோடுவது
இவைகளை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்றிருந்த அப்பவை, ஒரு போதாதவேளையில்,
“இந்த வீட்டில் எல்லாவேலையும் நான் தான் பார்க்கவேண்டும். ஒருத்தருக்காவது பொருப்பு இருக்குதா? நானும் வேலைக்கு தான் போகிறேனென்று சும்மாயிருந்தால் வீட்டை யார் கவனிப்பார்கள்?” என்று அம்மா கடுகையும், அப்பாவையும் சேர்த்து தாளித்தால், வேறு வழியில்லாமல்

ஏதச்சும் சொல்லு முடிந்தால் செய்கிறேன்” என்றார் .

சந்தோஷத்தில் முகம் டாலடிக்க யோசனை செய்து,
லிஸ்டு தருகிறேன் ,மளிகை கடைக்கு போரீங்களா?”

சரி

எல்லாவற்றிலும் பொடி தான் வாங்கணும். சரியா?”

அதெல்லாம் கவலைப்படாதே எல்லாவற்றிலும் பொடி வாங்கிவிடுகிறேன்” என்று கிளம்பினார்.

மாலையில், ஒரு பெரிய சாதனை செய்த பூரிப்பில் “புஷ்(புஷ்பம்) இங்க வந்து எல்லாவற்றையும் சரி பாத்துக்கோ
என்றபடி லிஸ்டில் உள்ளதை அவரே வாசித்து , பையிலிருந்து வெளியே எடுத்தார்.

“மல்லிப்பொடி………ம்”
“சீரகப்பொடி………ம்”
கடுகு………..ம்..இதுக்கு பொடி தரமாட்டேனுட்டான். வேறு கடையிலாவது வாங்கி கொடுப்பான்னு கேட்டேன். எங்கேயும் கிடைக்காதுன்னு சொல்லிட்டான். சரின்னு கடுகை முழுசா வங்கிட்டேன் ” என்று பரிதாபமாக சொன்னார் (எங்களுக்கு இது போதாதா ?).

Add comment மே 21, 2008

ருசியான தேங்காய் சட்னி.

“நந்தினீஈஈஈஈ….. நேரமாயிடுச்சு. எனக்கு தோசை வேண்டாம்” என்று குதித்துக்கொண்டிருந்தார்

தோ வந்துட்டேன்” ஆறு மாத பாலகனை இடுப்பில் சமாளித்தபடி சட்னியை தாளித்து கொண்டிருந்தேன் நான். 
அவசரமாக சட்னியை எடுத்து கொண்டுபோவதற்குள்
ஷொய்ங்……..”ன்னு சட்னி பாதி, கை பாதி என்று பாரபட்சமில்லாமல்  இடுப்பிலிருந்த என் ராஜகுமாரன் நனைக்க
 , ஒரு நிமிஷம் எனக்கு என்ன செய்வதென்றே புரியாமல் சட்னியோடு , அவருக்கு முன்னால் போய் நின்றேன் நான்.

என்ன நீ , என் அவசரம் தெரியாமல்” என்று முனங்கியபடி பட்டென்று கையிலிருந்த சட்னியை பறித்து , தோசையில் ஊற்றி சப்பிட ஆரம்பித்தார்.
” என்ன இன்றைக்கு சட்னி தண்ணியா இருக்கு. அனாலும் டேஸ்டா இருக்கு”

உரமேற்றிய சட்னி அல்லவா கண்டிப்பாக நல்லாதானிருக்கும் என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டேன் நான். 
(என் தோழியின் அனுபவம்)

Add comment மே 19, 2008

அரசியல்வாதிகளின் பொய்

அரசியல்வாதிகளை எற்றி கொண்டு, ஒரு அழகிய மலையடிவாரத்தில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. ஓட்டுனர் இயற்கை அழகில் சற்று அதிகமாக மயங்க, பேருந்து நிலை தடுமாறி ஒரு பள்ளதாக்கில் விழுந்து நொறுங்கியது. அதை கவனித்த விவசாயி ஒருவர் விரைந்து வந்தார். அனைவரும் அரசியல்வாதிகள் என்பதை தெரிந்துகொண்டு, மிக மரியாதையோடு  அடக்கம் செய்தார். மறுநாள் சில காவல்துறையினர் வந்து

” எல்லோரையும் அடக்கம் செய்துவிட்டீரா?”

“ஆம் ஐயா”

“எல்லோரும் இறந்துவிட்டார்களா?”

“சிலர் இல்லை எற்று தான் சொன்னார்கள். ஆனால் உங்களுக்குதான் தெரியுமே அவர்கள் எப்போதும் பொய் சொல்வார்கள் என்று. அதனால் நான் ஏமாறாமல் எல்லோரையும் அடக்கம் செய்துவிட்டேன்.” என்றார் விவசாயி.

2 comments மே 18, 2008

ஈரமான ரோஜா (கதையில்லை நிஜம்)

நான் சென்னையின் ஒரமாக ஒட்டிக் கொண்டிருந்த இந்த ஊருக்கு மாற்றலாகி வந்து மூன்று மாதமே ஆகின்றது. அதற்க்குள், அத்தனை மாணவர்களையும் எனக்கு நன்பர்களாக மாற்றியிருந்தேன் .
“டிங்.டிங்.டிங்.டிங்.”
அட்டென்டன்ஸ் நோட்டை திறந்து ஒவ்வொரு பெயராக அழைக்க ஆரம்பித்தேன்.
” அம்பிகா”
” உள்ளேன் டீச்சர்”
“அழகேசன்”
” உள்ளேன் டீச்சர்”
“பாலகணேஷ்”
“இன்னும் வரவில்லை டீச்சர்”
கோபத்தை அடக்கிக் கொண்டு  தொடர்ந்தேன். இந்த மூன்று மாதத்தில் ஒரு நாள் கூட பாலகணேஷ் நேரத்திற்கு வந்ததுகிடையாது. ஆனால் படிப்பிலும், குணத்திலும்  படு சுட்டி. அதனால் கோபிக்கவே மனது வராது. இன்றைக்கு எப்படியாவது கேட்டுவிடவேண்டும் என்று மனதிற்குள் குறித்துக்கொண்டேன். வழக்கம் போல் அரைமணி நேரம் தாமதமாக வந்தான்.வகுப்பு முடிந்தபிறகு தனியே அழைத்து,
“என்ன பாலகணேஷ் எப்படி இருக்க?”
“நல்லாயிக்கேன் டீச்சர்”
“வீட்டில் அம்மா, அப்பா எல்லாரும் நல்லாயிருக்காங்களா?
“நல்லாயிருக்காங்க டீச்சர்”
“பின்ன எதுக்கு தினமும் லேட்டா வர்றீங்க சார்” -கோபத்தோடு கேட்டேன்.
“   “
“ம்… என்ன பதில் சொல்லமாட்டீங்களா?” கடுப்புடன் கேட்டேன்.
அப்படியெல்லாம் இல்ல டீச்சர்….

எங்க வீடு , அந்த சாக்கடை ஆத்துக்க அந்தப்பக்கம் இருக்குது டீச்சர். பாலம் ரெம்ப தூரமாக இருப்பதால் நான் ஆத்துக்குள்ள இறங்கி தான் கடந்து வருவேன். துணியெல்லாம் சாக்கடையில் நனைந்துவிடும், அதனால பைப்பு தண்ணியில அலசி போட்டுக்குவேன். துணி காயரதுக்கு நேரமாயிடும் டீச்சர். பசங்க கிண்டல் பண்ணுவாங்கன்னு யாரிடமும் சொன்னதுகிடையாது. யாரிடமும் சொல்லிடாதீங்க டீச்சர்…” குற்றவுணர்வோடு  சொன்னான்.
எனக்கு என்ன சொல்லுவது என்றெ தெரியவில்லை. மனசெல்லாம் கனத்தது.
“தினமும் இப்படி தண்ணியில் நனைந்து உடம்புக்கு ஏதாவது வந்தால் என்ன பண்ணுவ?. தூரமென்றாலும் பாலம் வழியாக வா சரியா?”
என்னோடு குட்டி தங்கச்சியும் வருவா டீச்சர். அவ்ளோ தூரம் நடந்துகிட மாட்டாள்”
“அவளும் சாக்கடையில் நடந்தா வருவா?” அதிர்ச்சியுடன் கேட்டேன்.
இல்ல டீச்சர் அப்படி விடுவேனா?
நாலைந்து பலகை சேர்த்து கட்டி, அதன் மேல் அவளை ராணி மாதிரி உட்கார வைத்து இழுத்துகிட்டு வருவேன்.
என்று பெருமையுடன் கூறினான்.
நான் மெய்சிலிர்த்து நின்றேன்.

 

 

6 comments மே 13, 2008

ஜவ்வரிசி வடை

எனக்கு சமையல் பண்ணுவதற்க்கு எப்பவாவது பிடிக்கும். என் வயசில் உள்ளவங்க எல்லாம் விதவிதமாக சமையல் பண்ணி அசத்த, நான் மட்டும் அதே சாம்பாரும், ரசமும், பொரியலும் செய்து தலைவரோட நாக்கை பாலைவனமாக்கியிருந்தேன்.

இன்றைக்கு ஏதாவது புதுசா பண்ணலாமேன்னு அடுப்பங்கரையில் சமையல் புத்தகத்தோடு நுளைந்து, வீட்டில் இருந்த பொருட்களையும், தேவையானவற்றையும் சரிபார்த்து கடைசியில் ஜவ்வரிசி வடை செய்யலாம் என்று முடிவுசெய்தேன்.

வேகவேகமாக அரைத்து, நறுக்கி வடையை ஒருவழியாக தட்டி, வாணலியில் மூன்று  வடையை போடவும் அழைப்பு மணியோசை  கேட்டது. தலைவருக்கு  ஸர்ப்ரைஸ் கொடுக்கபோகிறோம் என்று சந்தோஷத்தில் ஒடிப்போய் கதவை திரந்ததுதான்,

“டாம்…. டொப்….ட்ஷ்யூம்………”ன்னு சத்தம்.

என் முகம் பயத்தில் இருண்டு போனது.

தலைவர் சப்தத்தில் கலவரமாகி “என்ன சத்தம்? அடுப்பில் ஏதாவது வைத்தாயா?”

“ம்ம்…..ஒண்ணுமில்ல.. சும்மா….வடை தான் சுட்டு பார்த்தேன்….”
என்னை ஒரு முறை முறைத்துவிட்டு , அடுப்பை அணைத்துவிட்டு வந்து என்னை உள்ளே போகச்சொன்னார்.

அடுப்பங்கரையே எண்ணையால் அபிஷேகம் பண்ணபட்டிருந்தது.
உள்ள்ப்போய் சட்டிய பாத்தா மூணையும் காணவில்லை.
அண்ணாந்து பாத்தா, மூலைக்கொண்ணா ஒக்காந்து என்னிய பார்த்து சிரிச்சிக்கிட்டுருக்கு.

அப்புறம் என்ன வழக்கம் போல் எனக்கு ரெம்ப பாராட்டுகிடைத்தது(?).

4 comments மே 8, 2008

பழிக்குப்பழி

The revenge of the mouse

வலையிலிருந்து தான் பிடித்தேனுங்கோ. (தமிழ் சீரியல் பார்த்து ரெம்ப கெட்டுப்போச்சு)

3 comments மே 7, 2008

சு. மாமா

நானும் என் அண்ணாவும் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தோம். என் அண்ணா இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.அம்மாவும், அப்பாவும் பக்கத்தில் ஒரு வீட்டிற்கு போயிருந்தார்கள்.

அப்போது எங்களுடைய மாமா வந்தார். அவர் பெயர் தெரியாது ஆனால் பட்டப்பெயர் ‘சுண்டெலி’ என்று தெரியும்.

“தம்பி அப்பா எங்கடா”

“அப்பா வெளியில போயிருக்காங்க “

“எப்போ வருவாருன்னு தெரியுமா?”

“தெரியாது… வருவாங்க…”

சிறிது நேரம் காத்திருந்தார். பின்
“சரி எனக்கு வேலயிருக்கு. அப்பா வந்தா நான் வந்துவிட்டு போனேன்னு சொல்லுவியா?”

“சரி”

“ம்ம்… எப்படி சொல்லுவ.. சொல்லுபாப்பம்”

அப்பா சுண்டெலி வந்திட்டு போனாருன்னு சொல்லுவேன்

“திருட்டுபயல்லா இருக்கான். ஒழுங்கா மாமான்னு சொல்லுடா”ன்னு சிரித்துவிட்டு சென்றார்.

2 comments மே 7, 2008

Previous Posts


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

மே 2008
தி செ பு வி வெ ஞா
    ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

மேல்