Archive for மே 19th, 2008
ருசியான தேங்காய் சட்னி.
“நந்தினீஈஈஈஈ….. நேரமாயிடுச்சு. எனக்கு தோசை வேண்டாம்” என்று குதித்துக்கொண்டிருந்தார்
“தோ வந்துட்டேன்” ஆறு மாத பாலகனை இடுப்பில் சமாளித்தபடி சட்னியை தாளித்து கொண்டிருந்தேன் நான்.
அவசரமாக சட்னியை எடுத்து கொண்டுபோவதற்குள்
“ஷொய்ங்……..”ன்னு சட்னி பாதி, கை பாதி என்று பாரபட்சமில்லாமல் இடுப்பிலிருந்த என் ராஜகுமாரன் நனைக்க
, ஒரு நிமிஷம் எனக்கு என்ன செய்வதென்றே புரியாமல் சட்னியோடு , அவருக்கு முன்னால் போய் நின்றேன் நான்.
“என்ன நீ , என் அவசரம் தெரியாமல்” என்று முனங்கியபடி பட்டென்று கையிலிருந்த சட்னியை பறித்து , தோசையில் ஊற்றி சப்பிட ஆரம்பித்தார்.
” என்ன இன்றைக்கு சட்னி தண்ணியா இருக்கு. அனாலும் டேஸ்டா இருக்கு”
உரமேற்றிய சட்னி அல்லவா கண்டிப்பாக நல்லாதானிருக்கும் என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டேன் நான்.
(என் தோழியின் அனுபவம்)
Add comment மே 19, 2008