முட்டையோ முட்டை
மே 28, 2008
சமீபத்தில் நான் முட்டை பற்றி நிறைய ஊடகங்களில் படித்ததாலும், கேட்டதாலும் நானும் எனக்கு தெரிந்ததை எழுதலாம் என்று நினைக்கிறேன்.
தினமும் ஒரு ஆய்வு செய்து , அவர்களும் குழம்பி நம்மையும் கதறவைப்பதே இவர்களுக்கு வேலை. அதனால் நானும் என் பங்குக்கு ஏதாவது ஆய்வு முடிவை சொல்லி உங்களை வெறுப்பேற்றபோவதில்லைங்க.
(அதான் நீங்க தோழுக்கமேல வளந்தாச்சே, நீங்களே அதிகமா சாப்பிட்டு அவஸ்தைபடுவதா இல்லை, அளவா சப்பிட்டு அம்சமாயிருப்பதா என்பதை முடிவுபண்ணிக்கோங்க)
நான் நம்முடைய வருங்கால மன்னர்களுக்கு தான் சொல்லப்போகின்றேன்.
சிறு குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுப்பது ரெம்ப நல்லதாம். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக நல்ல புரதசத்து முட்டையில் தான் உள்ளது.
தாய்பால் – நூறு%
முட்டை – தொண்ணூற்றி மூன்று % நல்ல புரதம் இருக்கின்றதாம். அதற்கு பிறகு தான் பசும் பால், பயிறு எல்லாம்.
Entry Filed under: ஆரோக்கியம். குறிச்சொற்கள்: Add new tag, ஆரோக்கியம்.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed