Archive for ஜூன், 2008
நான் படிக்கணும்னு நினைக்கிறேன்
கண்மணி(two+years) படு சீரியஸாக கலர் பண்ணிக்கொண்டிருந்தாள்.
”கண்மணி உன்னோட புக்கை படிக்கபோகிறேன்” என்றேன்.
தலையை தூக்கி என்னை பார்த்து,
“பார்த்து படிம்மா. புக்க கிழிச்சிடாதம்மா“
(எனக்கேவா மகளே)
————————
நாய்குட்டி பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள்.
“அம்மா இது என்ன?“
“மூக்கு“
“இது?“
“வாய்“
“வாய்க்குள்ள என்ன இருக்கு“
“நாக்கு“
“பல்லு எங்கம்மா?“
“அது உன்னை கடிச்சிடகூடாது இல்ல அதனால கழட்டிவச்சுட்டாங்க. நீயும் யாரையாவது கடிச்சா உன்னோட பல்லையும் கழட்டிடுவாங்க. அதனால யாரையும் கடிக்ககூடாது சரியா?” (ரெம்ப கோபம் வந்தால் கடித்துவிடுவாள்)
“நானு என்னோட பல்லை கழட்டி ஒளிச்சுவச்சிருவேனே” என்றாள் .
“அப்படி இஷ்டத்துக்கு பல்லை கழட்டின பிறகு மாட்டமுடியாது கண்மணி. ஒருதடவை கழட்டினா அப்புறம் நீ பல்லில்லாமத்தான் திரியணும். அப்புறம் எல்லோரும் உன்னை பாட்டீன்னு தான் கூப்பிடுவாங்க தெரியுமா?“
“அப்போ இது குட்டி நாய் இல்ல , பாட்டி நாய்” என்று சிரித்தாள்.
(இவங்ககிட்ட பேசுறதுக்கு தனியா நான் படிக்கணும்னு நினைக்கிறேன்)
4 comments ஜூன் 22, 2008
Relax
One Saturday afternoon the grasshopper, the snail, and the centipede were sitting around the grasshopper’s house drinking beer.
They ran out of beer before they were ready to quit drinking, so they decided one of them should go out for more beer.
The snail said, “I’d go, but I’m kind of slow. Besides, Grasshopper, this is your neighbourhood so you know where to go.”
The grasshopper said, “I don’t mind going, but my hopping will shake up the beer and we’ll get sprayed every time we open one.”
So they decided to send the centipede; and the grasshopper explained how to get to the nearest liquor store.
An hour or so passed and still the centipede hadn’t returned, so the snail and the grasshopper decided to go look for him.
They got as far as the the front door and found the centipede sitting there putting on his shoes.
****************************
Did you hear that a baby was fed on elephant’s milk and gained twenty pounds in a week.
B: That’s impossible. Whose baby?
A: An elephant’s.
Add comment ஜூன் 19, 2008
பையன் யாரு?
நான் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் எனக்கு அந்த குறைபாடு இருப்பது தெரிந்தது. போர்டை பார்த்தால் ஏதோ வெள்ளை எறும்பு அணிவகுத்து நிற்பது மாதிரி தெரியும். கண்ணை எத்தனை வாட்டி கசக்கி விரித்து பார்தாலும் வேறு ஒன்றும்தெரியவில்லை. ஐயோ இந்த வயசிலேயே கண்ணாடி போடுவதா! ம் … வேண்டாம் என்று முடிவெடுத்து , என் தோழிகளின் நோட்ஸை படித்து, அடுத்த ஆண்டையும் கஷ்டப்பட்டு தள்ளிவிட்டேன்.
அப்புறமா சென்னை அடையாறில் வேலை கிடைத்தது. நம்ம ஊரில் என்றைக்கு பஸ்ஸை பேருந்து நிறுத்தத்தில் நிப்பாட்டுனாங்க. நானு பேருந்து பக்கத்தில் ஓடி எழுத்துக்கூட்டி வாசித்து முடிப்பதற்கு முன்னால் பேருந்து கிளம்பி விடும்.இப்படி குருட்டு கோழிமாதிரி அல்லல்பட்டபோதும், என்னுள் இருந்த சாத்தான் ‘என்ன ஆனாலும் சரி கண்ணாடி மட்டும் போட்டுடாதே’ என்று சொன்னதை கேட்தால் வந்தது வினை.
ஐந்து நாள் விடுப்பிற்கு ஊருக்கு சென்றிருந்தேன். சித்தி வீட்டிற்கு போகலாம் என்று கிளம்பினேன். தூரத்தில் யாரோ என்ணைப்பார்த்து சிரிப்பது தெரிந்தது, உத்து உத்து பார்த்தாலும் யாரென்று பிடிபடாததால் சிரிக்காமல் நடந்துகொண்டிருந்தேன். பக்கத்தில் வந்தபிறகு பார்த்தால் நம்ம ரத்தினம் அண்ணாச்சி. எனக்கு ரெம்ப சங்கடமாகிவிட்டது.
“என்னம்மா ஏன் என்னை பார்த்து முறைச்சுகிட்டு வர்ர?” என்றார் .
“இல்ல அண்ணாச்சி ஏதோ யோசனையில் இருந்தேன்” என்று சமாளித்து வைத்தேன்.
அடுத்த நாள் அம்மாவுடன் கடைக்கு கிளம்பினேன். அன்றும் யாரோ என்னை பார்த்து சிரிப்பது தெரிந்தது. நமக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நானும் ஈயென்று சிரித்தேன். பக்கத்தில் வந்தபிறகு தான் தெரிந்தது, அந்த பையனை நான் முன்னபின்ன பார்த்ததில்லையென்று. அடப்பாவி தெரியாத பொண்ணகூட பார்த்து இப்படி சிரிப்பியா? என்று மனதிற்குள் சபித்துவிட்டு, இஞ்சி தின்ன குரங்காட்டம் நான் அம்மாவை பார்த்தேன்.
“பையன் யாரு?” என்று கேட்டார்கள்.
“தெரியாதும்மா“
என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
“தெரியும் என்று நினைத்தேன்” என்று வழிந்தேன்.
ஏதோ லூஸை பார்ப்பதுபோல் என்னிய திரும்பவும் பாத்தாங்க அம்மா.
“அம்மா கடைக்கெல்லாம் இன்னொரு நாள் போகலாம் .இன்றைக்கு கண் டாக்டரை பார்க்கபோவோம்” .
Add comment ஜூன் 18, 2008
கைபேசியும், பெட்ரோல் பங்கும்.
கைபேசியின் நன்மை தீமைகளை ஆராய்ந்து நிறைய கட்டுரைகள் , பயமுருத்தல்கள் வந்தாலும், அது சட்டை பையிலோ, தோள் பையிலோ, கால் சட்டைலோ ஒரு நிரந்தரயிடத்தை பிடித்துக்கொண்டு அசய மாட்டேன் என்கிறது.
வாகனம் ஓட்டும் போது அதை இடுக்கிகொண்டே போவது எவ்வளவு ஆபத்து என்று தெரிந்தபின்னும் அழிச்சாட்டியமாக ஆபத்தில் விழுகின்றனர் பலர்.
நம்ம விஷயத்திற்க்கு வருவோம்.
கைபேசியினால் மூளை புற்றுநோய், காதுக்கேளாமை , வயற்றில் வளரும் பிள்ளைக்கு ஆபத்து என்ற கூக்குரலை எல்லாம் குப்பையாக தூக்கிபோடுபவர்கள் கூட பெட்ரோல் பங்கில் , கைபேசியை அமர்த்திவிடுவார்கள்.
சரி அப்படி என்ன ஆபத்து வந்துவிடும் என்று எனக்கு நீண்ட நாள் சந்தேகம்.
முதலாவதாக அது ஆபத்தான இடத்தில் உபயோகிப்பதற்கு வடிவமைக்கபடவில்லை.
இரண்டாவதாக, அதில் இருந்து வரும் தீப்பொறி , தீ விபத்தை ஏற்படுத்திவிடும் என்பது. தீப்பொறி வருவதற்கு வாய்ப்பு ரெம்பவே கம்மி. அப்படி தீவிபத்து இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.
இருந்தாலும் அங்கேயாவது கைபேசியை ஓரங்கட்டி வைக்கின்றார்களே அதுவரைக்கும் சந்தோஷம்.
Add comment ஜூன் 11, 2008
வேலைக்கு போகின்றீர்களா
பெண்கள் வேலைக்கு போவது இப்போது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. கூட்டுக்குடும்பம் இல்லாவிட்டால் பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்கு, தனியாக ஆயாவை வைத்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களை தேர்ந்தெடுக்கும் போது சிறிது கவனம் எடுத்துக்கொண்டால் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அவர்களிடம் சிறிது மனதாபிமானத்தோடு பழகுவது ரெம்பவே அவசியம் ஏனென்றால் நாம் இல்லாத நேரத்தில் அவர்கள் தான் நம் குழந்தையின் தாய். அதை மனதில் நிறுத்தி நல்ல நம்பிக்கையுடன் கூடிய பாசமுள்ள உறவை வளர்த்துக்கொள்வது நம் குழந்தைக்கு நல்லது.
எனக்கு தெரிந்த ஒருவர் , வீட்டு வேலை செய்யும் பெண்ணையும், தன் குழந்தையையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு தான் வேலைக்கு போவார். அவ்வளவு நம்பிக்கை அந்த பெண்மேல். ஆனால் ஏதாவது விபத்து நடந்தால் நம் குழந்தையின் கதி என்னவாகும்? என்பதை யோசிக்கவில்லை.
ஒரு தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் ஒரு மருத்துவர், கணவரும் மருத்துவரே. அவர்களுடைய ஒரு வயது குழந்தைக்கு ஆயா சாப்பாடு கொடுத்துகொண்டிருந்தார். அந்தம்மா முகத்தில் ஒரு சிரிப்போ, பாசமோ இல்லை. ஏதோ கொத்தனார் சிமென்ட் கலவையை எடுத்து சுவரில் பூசுவது போல், கரண்டியில் சிரியல் கலவையை எடுப்பதும் வாயில் அடைப்பதுமாக இருந்தார். இப்படி ஒரு சூழலில் வளரும் குழந்தை எப்படி சந்தோஷமாக இருக்கும்?
இன்னொரு ரகம் இருக்கின்றார்கள், கைகுழந்தை பொழுதுக்கும் தூங்கிகொண்டுதானே இருக்கும், ஆயாவுக்கு வேலையே இருக்காது அதனால , கொடுக்கிற காசுக்கு ஈடுசெய்வதற்கென்று பெரிய லிஸ்டு கொடுத்துவிட்டுபோவார்கள். எனக்கு தெரிந்த இன்னொரு பெண்மணி இந்த ரகம். அதனால் ஆயாவுக்கு பிள்ளையை பார்க்க நேரம் கிடைப்பதில்லை. பால் கொடுத்தபிறகு ஏப்பம் விடும்வரை தோளில் வைத்து தட்டி கொடுக்காததால் வந்தது ஆபத்து.
நம் குழந்தைக்கு நாம் தான் பொறுப்பு, அதை அறிவுடன் செயல்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
1. சிரித்த முகத்தோடு இருங்கள். அவர்களையும் இருக்க சொல்லுங்கள்.
2. அவர்களுக்கு தேவையான சிறு உதவிகளை தயங்காமல் செய்யுங்கள்.
3. அவசரத்தேவைக்கு உங்கள் தொலைபேசி எண்ணையும், அருகில் இருப்பவர் தொலைபேசி எண்ணையும் கொடுத்து செல்லுங்கள்.
4. அடிக்கடி வீட்டிற்கு தொலைபேசியில் பேசுங்கள்.
5. எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தையின் நடவடிக்கையும் கவனியுங்கள். பயம், அடிக்கடி நோய் போன்ற அறிகுறி இருந்தால்,காரணத்தை ஆராய்ந்து, தேவையானால் உடனே ஆயாவை மாற்ற தயங்காதீர்கள்.
2 comments ஜூன் 10, 2008
வெற்றி ரெம்ப சுலபமாமே!
சமீபத்தில் படித்தது இது
“Success is simple, Do what’s right, the right way, at the right time”
Do what is right by discovering your true purpose in life.
Do it the right way by learning from the best.
Do it at the right time by taking small actions and preparing yourself to seize opportunity when it presents itself.
அப்படீன்னு வெற்றிக்கு ரகசியத்தை எழுதியிருக்கார்.
Can success be that simple?
He has written as though we can discover the purpose of life in discovery channel.நமக்கு, நம் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு.. சாப்பிடுவதற்கு சொத்து சேர்ப்பதற்கே நேரம் பத்தல்ல.அதுக்கெல்லாம் எங்க நேரம்…ம். ஆரம்பமே கஷ்டமாயிருக்கு.
2 comments ஜூன் 9, 2008
ஆரோக்கியமான, பாதுகாப்பான, அமைதியான வாழ்வுக்கு பத்து கட்டளை.
ஆரோக்கியமாக வாழ்வது எவ்ளோ சுலபம் பாருங்களேன்.
1. Eat foods in their natural states – or as close to their natural states as possible.
2. Plan your daily around the official USDA food pyramid.
3. Exercise moderately at least 20 minutes every other day.
4. Limits fats and sweets in your daily diet.
5. Keep stress at a minimum.
6. Observe safety rules such as buckling seatbelt and avoiding use of cell phone while driving and follow rules while walking in Road.
7. Wash hands frequently and avoid touching eyes and nose.
8. Avoid drugs in all forms.
9. Visit your doctor on a regular basis.
10. Walk and talk with God.
3 comments ஜூன் 5, 2008
நேரத்தை வீணாக்காதோர் சங்கம்
நான் சமீபத்தில் படித்து ரசித்தது இது:
உலகம் என்ன சொல்லும் என்று கவலைபடாதே
உன் மனதிற்கு சரி என்று பட்டால் மட்டும் ………..குளி.
இப்படிக்கு
குளித்து நேரத்தை வீணாக்காதோர் சங்கம்.
இப்படி நிஜத்தில் இருப்பார்கள் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது, இந்த மாம்பழ சோம்பேறிகள் (எத்தனை நாட்களுக்குத்தான் வாழைபழத்தை இழுப்பது) அறிமுகம்கிடைக்கும் வரை.
ஒரு அறையில் நாலு நபர்கள் குடியிருந்தார்கள். அதனால் நாலு மெத்தை கீழே (கட்டில் கிடையாது) இருக்கும். அதன் மேல் ஒவ்வொரு தலையணையும், போர்வையும் எப்போதும் விரித்து வைக்கபட்டிருக்கும். வேலை முடிந்து வந்தவுடன் அதிலே உண்டு, அப்படியே படுத்துக்கலாம் என்றுதான்.
படுக்கையை காலை எழுந்ததவுடன் சுருட்டி வைக்கவும், மாலை வந்தவுடன் விரிக்கவும், எதற்காக நேரத்தை செலவிடவேண்டும்? என்பது அவர்களுடைய கேள்வி. எல்லாம் நம்ம நேரம் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டுமென்று.
2 comments ஜூன் 1, 2008