Archive for ஆகஸ்ட், 2008
Blogging friends forever award
எனக்கு அவார்ட் கொடுத்த முகுந்தனுக்கு நன்றி.
நானே புதுசு, எனக்கு ரெம்ப நண்பர்கள் எல்லாம் கிடையாது. இருக்கிற நண்பர்கள் எல்லாரும் அவார்ட் வாங்கிட்டாங்க.(சேவியர் அண்ணாச்சி முந்திகிட்டாக) என்ன செய்ய , அதனால அவார்ட் கொடுத்து நண்பர்களை உருவாக்கலாம் என்ற ஐடியாவுடன், நம்ம தெருவுல ஒரு வலம் வந்து கொஞ்ச பேரை பிடித்துவந்திருக்கிறேன்.
1. மோகனின் எண்ணங்கள் - காமடி, நக்கல், யதார்த்தம் எல்லாவற்றையும் கலந்து வைத்திருக்கிறார்.
2.கடகம் -விதவிதமாக படம் போட்டு கலக்குவார்.
3. ரதி மகேஷ்வரன் - நிறைய சமையல் குறிப்புகளுடன் வந்து பசியை கிளப்புகிறார்.
அவார்ட் வாங்கியிருநதாலும், என் கையாலும் இவர்களுக்கு அவார்ட்,
1.சேவியர் - கவிதைகளும், அவசியமான கட்டுரைகளும் நிறைந்து காணப்படும் பகுதி. கவிதையின் அழகிலே மயங்கி நிறைய பேரு அவருடைய பக்கத்தை மொச்சிக்கிட்டிருப்பாய்ங்க.
2. விஜய் கோபால்சுவாமி - நல்ல நகைச்சுவை உணர்வுடைய தம்பி.
எல்லாரும் ஒருக்கா பலம்மா கைதட்டுங்க, பார்க்கலாம்.
ஸ்…..அப்பாடி அவார்ட் கொடுக்கறதுன்னா சும்மாவா …
17 comments ஆகஸ்ட் 31, 2008
ஊசி
கண்மணிக்கு இப்போது இரண்டு வயது எட்டு மாதம் ஆகிறது.
தடுப்பு ஊசி போட மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். கண்மணியைவிட நான் தான் ரெம்ப டென்ஷனாக இருந்தேன்.
போகும் வழியில் “கண்மணி லேசாத்தான் வலிக்கும் பயப்படகூடாது, அழக்கூடாது. இந்த ஊசி போட்டா காச்சல் வராது, சளி பிடிக்காது …..” என்று பெரிய பில்டப் கொடுத்து கொண்டிருந்தேன் .
அவள் வழக்கம் போல் “எல்லாம் எனக்கு தெரியும் சும்மா லொட லொடகாதம்மான்னு ” என்னை ஒரு லுக்விட்டாள்.
நானும் “அங்கே போய் உன்னை எப்படி சமாளிக்க போகிறேனோ ?” என்று மீண்டும் கவலை பட ஆரம்பித்தேன்.
மருத்துவமனையில் , தடுப்புஊசி போடும் இடத்தில் “கிச்….வீசென்று ஒரே சப்தம். கண்மணி ஏதோ ஒரு திகில் படம் பார்க்கிற மாதிரி முகத்தை வைத்து கொண்டாள்.
எங்களுடைய முறையும் வந்தது. நர்ஸ் ஊசியில் மருந்தெடுப்பதை, புருவத்தை நெரித்து சீரியஸாக பார்ப்பதை பார்த்தால் , என்னமோ எல்லாம் சரியாக பண்ணுகிறார்களா என்று செக் பண்ணுவது போல் இருந்தது.
நர்ஸ் ” cute baby” என்று ஒரு அழகாக புன்னகைத்துக்கொண்டே சுருக்கென்று சொருகிவிட்டார்கள். கண்மணியோ, அழாமல் சீரியஸாக குனிந்து ஊசி போட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பஞ்சு வச்சு ஊசி போட்ட இடத்தை துடைத்த பிறகு, நார்மலாகி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நர்சை பார்த்து என்ன சொன்னாள் தெரியுமா?
‘
‘
‘
‘
‘
‘
‘
‘
” Thank you nurse”
10 comments ஆகஸ்ட் 31, 2008
Child Obesity
சிறு குழந்தைகள் புஸ் ..புஸென்று இருந்தால் போதும் எல்லாருக்குமே தூக்கி கொஞ்சவேண்டும் என்று கை பரபரக்கும். ஆனால் இரண்டு மூன்று வயதான பிறகும் புஸ் ..புஸென்று இருந்தால் கவனமாக இருக்கவேண்டும் தாய்மார்களே.
உடல் பருமனை பற்றி நிறைய கட்டுரைகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றது. சமீபத்தில் ஹிண்டு பத்திரிக்கையில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் child obesity ரெம்பவே ஆபத்தானது என்று குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் அது உருப்புகளின் முழு வளர்ச்சிக்கு தடையாகயிருக்கும் என்றும், குணப்படுத்தமுடியாதது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதை பற்றி ஒரு மருத்துவரிடம் பேசி கொண்டிருந்தேன். அவர் ஒரு கூடுதல் தகவலையும் கூறினார்.
சிறு வயதில் தான் குழந்தைகளுக்கு வளர்ச்சி துரிதமாக இருக்கும். செல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். நல்ல சத்துள்ள ஆகாரத்தால், குழந்தைகள் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே நமது ஆசையும். நல்ல சப்பாட்டுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு வசதியாக வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏன்னென்றால் பிரச்சனை அங்கே தான் ஆரம்பிக்கின்றது.
அதிகம் நொறுக்குதீனி சாப்பிடுவது, ஒடி விளையாடாமல் இருப்பது போன்றவற்றால் எக்ஸஸ் கார்போஹைட்ரேட் அளவுக்கதிகமாக செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. அந்த செல்களை எப்படி …போ..போன்னு விரட்டினாலும் பிற்காலத்தில் போகாது. இப்படி சிறு வயதிலே உடல் பருமன் அடையும் குழந்தைகளை, சகலவிதமான நோய்களும் வந்து தஞ்சமடைகின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
Health is Wealth என்று சொல்லுவார்கள். அதனால் வேலைக்கு போய் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்துக்கு உழைப்பவர்கள், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் நேரம் செலவிட தயங்ககூடாது.
சிலர் படிச்சிமுடிச்சப்பிறகு, அல்லது வேலைக்கு போக ஆரம்பித்தவுடன் அக்கடான்னு உக்காந்தே பல்லூன் மாதிரி ஊதிவிடுவார்கள். இவர்களுக்கு உடம்பில் உள்ள செல்கள் பெரிதாவதால் இவர்களும் பெரிதாகிவிடுகிறார்கள். உடனே அலர்ட்டாகி ஓடியாடி விளையாட ஆரம்பித்துவிட்டால் நீங்கள் பிழைத்துவிடுவீர்கள், இல்லையேல் அது உங்களுடைய வாழ்க்கையில் விளையாடிவிடும்.
5 comments ஆகஸ்ட் 24, 2008
விளையாட வெளியே போகணும்
வீட்டில் ரெம்ப போர் அடித்தது எனக்கு, ஒரே சுட்டி பையன் வாசு, அவனும் அவன் பங்குக்கு, சேட்டை பண்ணி என்னை வெறுப்பேற்றிகொண்டிருந்தான். பாவம் அவனும் தான் என்ன பண்ணுவான்.
நான் கொடுத்த சப்பாத்தி மாவை உருண்டு, புரண்டு பிசைந்து வீடெல்லாம் சப்பாத்தி சுட்டு வைத்தான். ஸ்கெட்ச் பென்னை வைத்து கை, கால், ஷோபா என்று பாரபட்சமில்லாமல் எல்லாவற்றிலும் படம் வரைந்து தள்ளினான்.படம் வரைய கொடுத்த தாளை தோரணங்களாக வீடு முளுக்க பறக்கவிட்டான்.
காலையில் வீட்டுக்காரரை அனுப்பிவிட்டு தினமும் இருவரும் மல்லுகட்டுவதிலேயெ பொழுது போகிறது. சில நேரம் கோபமாகவும், அழுகையாகவும் வரும், பேசாமல் இந்தியாவுக்கு ஓடிப்போய்விடலாம என்று தோன்றும். வெளிநாட்டு வாழ்க்கை இப்படி கொடுமையாக இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சரி இன்றைக்கு அவர் வந்தவுடன் வாசுவை எப்படியாவது வெளியே அழைத்து போகவேண்டும் என்று வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
வாசுவை ரெடி பண்ணி, நானும் ரெடியாகி அவருடைய வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு எட்டு மணிக்கு சோர்வாக வந்தவரை பார்க்க பாவமாக இருந்தது, இனிமேல் வெளியே எங்கு போவது என்று கோபமும் வந்தது.
“ரெண்டு ஜீவன் வீட்டில் உங்களுக்காக உக்காந்திருக்கு என்று கொஞ்சமாச்சும் நினைப்பிருக்கா?” என்றேன் கடுப்புடன்.
“இருப்பதினால் தான் அம்மணி வீட்டிற்க்கு வந்தேன்” என்றார் அமைதியுடன்.
“வந்தா மட்டும் போதுமாக்கும். இவனிடம் நாள் முழுக்க மல்யுத்தம் செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”
“கஷ்டமா….. அச்சச்சோ… மஸாஜ் ஏதாவது
பண்ணிவிடவேண்டுமா அம்மணி? கட்டளையிடுங்கள், காத்திருக்கிறேன்” என்று பவ்வியமாக குறுஞ்சிரிப்புடன் நின்றவரை பார்த்து சிரிப்பு வந்தாலும், இப்படியே இன்னும் எத்தனை நாள் ஏமாறுவது என்று, சிரிப்பை அடக்கி, முகத்தில் கஷ்டப்பட்டு கோபத்தை தங்கவைத்துகொண்டேன்.
முகத்தை இறுக்கி வைத்துகொண்டே வளைய வந்தேன். சாப்பாடு எல்லாம் முடித்து, வாசுவிடம் வழக்கம் போல் மல்லுக்கட்டி தூங்க வைத்த பிறகு, நானும் அவனுடன் படுத்துக்கொண்டேன்.
பக்கத்தில் வந்து படுத்தவர் ” என்னம்மா முகத்தை ஏன் இப்படி ரெண்டு அடிக்கு தூக்கி வைத்திருக்கின்றாய். கொஞ்சம் சிரியேன்“
“எனக்கு சிரிப்பு ஒன்றும் வரவில்லை“
முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு
“ஆங்… அப்படியா…. அப்படீனா கண்டிப்பாக சிரிக்ககூடாதுதான். “
“எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கொண்டேன் என்றிருக்கிறது“
சிரித்துவிட்டு “It’s too late”
இந்த நக்கல் விக்கலுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை என்று மனதில் திட்டிக்கொண்டே
“எவ்வளவு நேரமா இந்த ரெண்டு ரூமுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் ஒடிப்பிடித்து விளையாடுவதாம், கொஞ்ச நேரம் வெளியே போனாததான் அவனுக்கும் நல்லாயிருக்கும் ….” என்று நான் என் உள்ள குமுறலை எல்லாம் அவரிடம் கொட்டித்தீர்த்தேன். “என்ன பதிலையே காணும் ” என்று எட்டிப்பார்த்தால் மனுஷன் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில், வழக்கம் போல் ஆபீஸ் கிளம்புவதற்க்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டிருந்தேன். ஒன்றுமே நடக்காதது போல் ஆபீஸுக்கு கிளம்பியவரிடம் ,” இது உங்களுக்கே நல்லாயிருக்கா, நான் எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு நேற்றைக்கு உங்களிடம் பேசிக்கொண்டிருந்தேன், நீங்க என்னன்னா நல்ல குறட்டை விட்டு தூங்கிக்கொண்டுருந்தீய. எனக்கு எப்படி இருந்திச்சு தெரியுமா?” என்றேன்.
“ஓ.. ஆனா பாரும்மா , துங்கியதுக்கு என்னை குற்றம் சொல்லாதே அது உன்னுடைய தவறு ” என்று நமட்டு சிரிப்புடன் கூற, எனக்கு மறுபடியும் பி.பி எகிற தொடங்கியது.
“ஆங்.. அதுக்குள்ள கோபப்பட்டா எப்படி. காரணத்தை சொல்றேன் , தேன் போன்ற உன்னுடய இனிய குரலில் நீ பேச ஆரம்பித்தாலே போதும் எனக்கு தாலாட்டு பாடுற மாதிரி இருக்குது, அதனால தூங்கி விடுகிறேன் இப்ப சொல்லு அது என்னுடைய குற்றமா” .
நான் என்னத்த சொல்லறது. நல்லா பேசப் படிச்சிருக்காங்கய்யா என்றபடி அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்தேன் நான்.
***************
இந்த ஊருக்கு வந்து இரன்டு மாதம் ஆகிவிட்டது. இன்று காலையிலே எனக்கு தாங்கமுடியாத தலைவலியும், காய்ச்சலுமாக பொழுது ஆரம்பித்தது. நல்ல வேளை இன்று அவருக்கு விடுமுறை ஆகையால், அவரும் வழக்கம் போல் ஒரு டயலாக் அடித்துவிட்டு “இன்னைக்கு நீ கட்டிலை விட்டு எழுந்திருக்ககூடாதும்மா. யாம் இருக்க பயம் ஏன். நானே எல்லாவற்றையும் பார்த்துகொள்கிறேன்” என்று களத்தில் குதித்தார்.
நேற்றுள்ள சாம்பார், ரசம், பொரியல் இருந்ததால், வாசுவைத்தான் கொஞ்சம் கவனித்துகொள்ள வேண்டும் என்றேன். நீ கவலையே படமல் போய் படு என்று என்னை படுத்துக்க அனுப்பிவிட்டார்.
தூக்கம் வரவில்லை, ஆனால் கண்ணை மூடி படுத்திருந்தேன். சிறிது நேரத்தில் இருவரும் பிஸியாக விளையாட ஆரம்பித்தார்கள். பின் டி.வி. பார்க்கும் சப்தம் கேட்டது. எல்லாமுமாக ஒரு மணி நேரம் கழிந்தபிறகு , ரகளை ஆரம்பித்தது.
“ஏன்டா ஒயரை பிடிச்சி இழுகிறா. இங்க வந்து ஒக்காரு”
“டேபிள் மீது ஏறாத விழுந்திடுவாய்”
“பட் பட்” என்று அடிவிழும் சப்தம், தொடர்ந்து “அம்மா… அம்மா..” என்று அழும் சப்தமும் கேட்டது. கொஞ்சம் நேர தாஜாவிற்கு பின் அமைதி நிலவியது.
சிறிது நேரத்தில் திரும்பவும் ஹிஸ்டீரியா வந்த மாதிரி கத்த ஆரம்பித்தார்.
“இந்தா ஒன்னோட டாய்ஸ் வச்சு விளையாடு , டெலிபோனை எதுக்கு எடுக்கிற”
“ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற. கொஞ்சம் தண்ணி குடிச்சா என்னவாம்”
கத்துவதும், அடிவிழும் சப்தமும், அழும் சப்தமுமாக மாலை வரை தொடர்ந்தது. எனக்கு தலைவலி அதிகமாகியதே ஒழிய குறைந்தபாடில்லை.
மெள்ள எழும்பி ஹாலுக்கு வந்தேன் . காத்து போன பல்லூன் போல இருந்த அவருடைய முகத்தை பார்த்து பாவமாக இருந்தது.
“ வாசுவை முடிந்தால் கொஞ்சம் வெளியே கூட்டி செல்லுங்கள்”
அவ்வளவு தான் அவுத்து விட்ட கன்று குட்டியாட்டம் குதித்தான் வாசு. இரண்டு பேரும் இரண்டு மணி நேரம் கழித்து புத்துணர்ச்சியுடன் வந்தார்கள்.
*****************
இப்பயெல்லாம் தினமும் மாலையில் எங்களை பக்கத்தில் உள்ள பார்க்கில் காணலாம்.
9 comments ஆகஸ்ட் 17, 2008
தியேட்டர் கலாட்டா
நாங்கள் தோழிகளுடன் சேர்ந்து ஒரு பிரபல இளம் நடிகரின் திரைப்படத்தை பார்க்க சென்றோம். படம் முழுவதும் ஒரே சத்தம். யாரு டெசிபெல்லில் கத்துவது என்று ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே யுத்தம். அதன் நிமித்தம் எங்களுக்கு பிடித்தது பித்தம். யார் மீது குத்தம்? சே, என்ன இது எழுத வந்தது போய் ஒரே டி.ஆர் வசனமா வருது. சரி விஷயத்துக்கு வருவோம்.
படம் இப்படி எங்களை வில்லன் கம் ஹீரோவின் யுத்தம் ப்ளஸ் சத்தங்களால் அறுத்து கொண்டிருக்க, நாங்கள் படம் பார்ப்பதை நிப்பாட்டி விட்டு, அரங்கத்துக்குள் நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினோம்.
எங்கள் முன் வரிசையில் இருந்த சில நண்பர்கள் பேசிகொண்டு இருந்தனர். அதை கவனித்த போது அவர்களும் அந்த திரைப்படத்தால் மிகவும் பாதிக்க பட்டிருப்பது தெரிந்தது. அதில் ஒருவன் அந்த நடிகரின் தீவிர காத்தாடி போல. அவன் மட்டும் அமைதியாக இருக்க மற்ற நண்பர்கள் படத்தில் தாங்கமுடியாத காட்சிகள் வரும்பொது எல்லாம் அந்த காத்தாடியின் மண்டையில் தட்டிகொன்டே ‘உன்னாலதானல இத எல்லாம் பாக்க வேண்டிருக்கு’, ‘என்னலாம் பேசுறான் (ஹீரொ)’, ‘எங்களால முடியவில்லைடா வா போவோம்’ இப்படி அந்த காத்தாடியிடம் கோபத்தை கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
நாங்கள் அதை கேட்டு சிரித்து கொண்டே இருந்தோம். நாங்கள்தான் படம் பார்ப்பதை நிப்பாட்டி விட்டோமே.
அப்பொழூது அந்த நண்பர்கள் அருகில் இருந்த சிறுவன் எதையோ கீழே விட்டு விட, கீழே குனிந்து தேட ஆரம்பித்தான் . சிறிது நேரத்தில் அவன் அம்மாவும் குனிந்து தேட பின், அப்பாவும் தேட இப்படி குடும்பமா அந்த இருட்டில் எதையொ தேட, இருக்கைகளும், தலைகளும் அசைய தொடங்கியது. ஏற்க்கனவே படத்தின் போக்கால் நொந்து வெந்து நூடுல்ஸ் ஆகி இருந்த கூட்டம்
அதை கவனிக்க தொடங்கியது. அப்பொழுது அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன்
“என்னடா மாப்பி, என்ன நடக்குது இங்க? “
” பாவம்டா, ரெம்ப நேரமா தேடுராவ , படத்தோட கதையையா தேடுராவ……, இன்னும் கிடைக்காம இருக்க….?” என்று வடிவேல் பாணியில் கூற, அரங்கமே கலகலத்தது.
டிக்கெட் காசை தொலைத்த வேதனையில் இருந்த நாங்களும், இதை கேட்டு வேதனையும் மறந்து சிரித்துவிட்டோம்.
(என் தோழியின் அனுபவம்)
9 comments ஆகஸ்ட் 11, 2008