Child Obesity

ஆகஸ்ட் 24, 2008

     சிறு குழந்தைகள் புஸ் ..புஸென்று இருந்தால் போதும் எல்லாருக்குமே தூக்கி கொஞ்சவேண்டும் என்று கை பரபரக்கும். ஆனால் இரண்டு மூன்று வயதான பிறகும் புஸ் ..புஸென்று இருந்தால் கவனமாக இருக்கவேண்டும் தாய்மார்களே.

  உடல் பருமனை பற்றி நிறைய கட்டுரைகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றது.  சமீபத்தில் ஹிண்டு பத்திரிக்கையில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் child obesity ரெம்பவே ஆபத்தானது என்று குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் அது  உருப்புகளின் முழு வளர்ச்சிக்கு  தடையாகயிருக்கும் என்றும், குணப்படுத்தமுடியாதது என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

    அதை பற்றி ஒரு மருத்துவரிடம் பேசி கொண்டிருந்தேன். அவர் ஒரு கூடுதல் தகவலையும் கூறினார்.
    சிறு வயதில் தான் குழந்தைகளுக்கு வளர்ச்சி துரிதமாக இருக்கும். செல்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். நல்ல சத்துள்ள ஆகாரத்தால், குழந்தைகள் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே நமது ஆசையும். நல்ல சப்பாட்டுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு வசதியாக வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏன்னென்றால் பிரச்சனை அங்கே தான் ஆரம்பிக்கின்றது.

    அதிகம் நொறுக்குதீனி சாப்பிடுவது, ஒடி விளையாடாமல் இருப்பது போன்றவற்றால் எக்ஸஸ் கார்போஹைட்ரேட் அளவுக்கதிகமாக  செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. அந்த செல்களை எப்படி …போ..போன்னு விரட்டினாலும் பிற்காலத்தில் போகாது. இப்படி சிறு வயதிலே உடல் பருமன் அடையும் குழந்தைகளை, சகலவிதமான நோய்களும் வந்து தஞ்சமடைகின்றன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

     Health is Wealth என்று சொல்லுவார்கள். அதனால் வேலைக்கு போய் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்துக்கு உழைப்பவர்கள், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் நேரம் செலவிட தயங்ககூடாது.

     சிலர் படிச்சிமுடிச்சப்பிறகு, அல்லது வேலைக்கு போக ஆரம்பித்தவுடன் அக்கடான்னு உக்காந்தே பல்லூன் மாதிரி ஊதிவிடுவார்கள். இவர்களுக்கு உடம்பில் உள்ள செல்கள் பெரிதாவதால் இவர்களும் பெரிதாகிவிடுகிறார்கள். உடனே அலர்ட்டாகி  ஓடியாடி விளையாட ஆரம்பித்துவிட்டால் நீங்கள் பிழைத்துவிடுவீர்கள், இல்லையேல் அது உங்களுடைய வாழ்க்கையில் விளையாடிவிடும்.

Entry Filed under: ஆரோக்கியம். .

5 Comments Add your own

  • 1. carter  |  ஆகஸ்ட் 24, 2008 at 7:23 மு.பகல்

    ஆஹா குந்தவையின் பக்கத்தில் மருத்துவ இத்ளுமா மிக்க நன்றி தொடந்து உங்கள் சேவை தொடரட்டும்

  • 2. kunthavai  |  ஆகஸ்ட் 24, 2008 at 7:39 மு.பகல்

    மிக்க நன்றி.
    ஏதோ கொஞ்சம் கேள்விப்பட்டதை எழுதுரேனுங்கோ.

  • 3. Mukundan  |  ஆகஸ்ட் 24, 2008 at 9:27 மு.பகல்

    மிக அவசியமான, அற்புதமான பதிவு.

  • 4. குந்தவை  |  ஆகஸ்ட் 25, 2008 at 4:12 மு.பகல்

    Thank U Mukundan.

  • 5. சேவியர்  |  ஆகஸ்ட் 25, 2008 at 3:00 பிற்பகல்

    சரியா சொன்னீங்க. ரொம்ப தேவையான ஒரு பதிவு. குழந்தைகளை பாதுகாக்கணும்ன்னா ஊடகங்கள் பிரபலப்படுத்தும் குர்குரே, பர்குரே போன்ற ஜங்க் பொருட்களை உதாசீனப்படுத்தியே ஆகவேண்டும். டிவி சொல்றதை கேக்காம பாட்டிங்க சொல்றதைக் கேட்டா குழந்தைங்க ஆரோக்கியமா வளரும்.

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

அண்மைய மறுமொழிகள்

ரசித்தவை

Blog Stats

Blogroll

 

ஆகஸ்ட் 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

மேல்