Archive for ஆகஸ்ட் 31, 2008

Blogging friends forever award

எனக்கு அவார்ட் கொடுத்த முகுந்தனுக்கு நன்றி.

நானே புதுசு, எனக்கு ரெம்ப நண்பர்கள்  எல்லாம் கிடையாது. இருக்கிற நண்பர்கள் எல்லாரும் அவார்ட் வாங்கிட்டாங்க.(சேவியர் அண்ணாச்சி முந்திகிட்டாக)  என்ன செய்ய , அதனால அவார்ட் கொடுத்து நண்பர்களை உருவாக்கலாம் என்ற ஐடியாவுடன், நம்ம தெருவுல ஒரு வலம் வந்து கொஞ்ச பேரை பிடித்துவந்திருக்கிறேன்.

1. மோகனின் எண்ணங்கள் - காமடி, நக்கல், யதார்த்தம் எல்லாவற்றையும் கலந்து வைத்திருக்கிறார்.

2.கடகம் -விதவிதமாக படம் போட்டு கலக்குவார்.

3. ரதி மகேஷ்வரன் - நிறைய  சமையல் குறிப்புகளுடன் வந்து பசியை கிளப்புகிறார். 

அவார்ட் வாங்கியிருநதாலும், என் கையாலும் இவர்களுக்கு அவார்ட்,

1.சேவியர் -  கவிதைகளும், அவசியமான கட்டுரைகளும் நிறைந்து காணப்படும் பகுதி. கவிதையின் அழகிலே மயங்கி நிறைய பேரு அவருடைய பக்கத்தை  மொச்சிக்கிட்டிருப்பாய்ங்க.

2. விஜய் கோபால்சுவாமி - நல்ல நகைச்சுவை உணர்வுடைய தம்பி.

எல்லாரும் ஒருக்கா பலம்மா கைதட்டுங்க, பார்க்கலாம்.

ஸ்…..அப்பாடி அவார்ட் கொடுக்கறதுன்னா சும்மாவா …

ஆகஸ்ட் 31, 2008 at 9:05 மு.பகல் 17 பின்னூட்டங்கள்

ஊசி

      கண்மணிக்கு இப்போது இரண்டு வயது எட்டு மாதம் ஆகிறது.
தடுப்பு ஊசி போட மருத்துவமனைக்கு சென்றிருந்தோம். கண்மணியைவிட  நான் தான் ரெம்ப டென்ஷனாக இருந்தேன். 

     போகும்   வழியில்  “கண்மணி லேசாத்தான் வலிக்கும் பயப்படகூடாது, அழக்கூடாது.  இந்த ஊசி போட்டா காச்சல் வராது, சளி பிடிக்காது …..” என்று பெரிய பில்டப் கொடுத்து கொண்டிருந்தேன் .

    அவள் வழக்கம் போல் “எல்லாம் எனக்கு தெரியும் சும்மா  லொட  லொடகாதம்மான்னு ” என்னை ஒரு லுக்விட்டாள். 
நானும் “அங்கே போய் உன்னை எப்படி சமாளிக்க  போகிறேனோ ?” என்று  மீண்டும் கவலை பட ஆரம்பித்தேன்.

மருத்துவமனையில் , தடுப்புஊசி  போடும் இடத்தில் “கிச்….வீசென்று ஒரே சப்தம். கண்மணி ஏதோ ஒரு திகில்  படம் பார்க்கிற மாதிரி முகத்தை வைத்து கொண்டாள். 

     எங்களுடைய முறையும் வந்தது.  நர்ஸ் ஊசியில் மருந்தெடுப்பதை, புருவத்தை நெரித்து சீரியஸாக  பார்ப்பதை  பார்த்தால் , என்னமோ எல்லாம் சரியாக பண்ணுகிறார்களா என்று செக் பண்ணுவது போல் இருந்தது.  

   நர்ஸ்  ” cute baby” என்று  ஒரு  அழகாக  புன்னகைத்துக்கொண்டே சுருக்கென்று சொருகிவிட்டார்கள்.  கண்மணியோ,  அழாமல்      சீரியஸாக குனிந்து ஊசி போட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். பஞ்சு வச்சு ஊசி போட்ட இடத்தை துடைத்த பிறகு,  நார்மலாகி ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு நர்சை பார்த்து என்ன சொன்னாள் தெரியுமா?








” Thank you nurse”

ஆகஸ்ட் 31, 2008 at 5:10 மு.பகல் 10 பின்னூட்டங்கள்


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blog Stats

  • 32,763 hits

 

ஆகஸ்ட் 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Follow

Get every new post delivered to your Inbox.