Archive for அக்டோபர், 2008

வலையிலிருந்து சுட்டது

While visiting England, George Bush is invited to tea with the Queen. He asks her what her leadership philosophy is. She says that it is to surround herself with intelligent people.

Bush asks how she knows if they’re intelligent.

“I do so by asking them the right questions,” says the Queen. “Allow me to demonstrate.”

Bush watches as the Queen phones Tony Blair and says, “Mr. Prime Minister, please answer this question: your mother has a child, and your father has a child, and this child is not your brother or sister. Who is it?”

Tony Blair responds, “It’s me, ma’am.”

“Correct. Thank you and good-bye, sir,” says the Queen. She hangs up and says, “Did you get that, Mr. Bush?”

Bush nods: “Yes ma’am. Thanks a lot. I’ll definitely be using that!”

Bush, upon returning to Washington, decides he’d better put the Chairman of the Senate Foreign Relations Committee to the test. Bush summons Jesse Helms to the White House and says, “Senator Helms, I wonder if you can answer a question for me.”

“Why, of course, sir. What’s on your mind?”

Bush poses the question: “Uhh, your mother has a child, and your father has a child, and this child is not your brother or your sister. Who is it?”

Helms hems and haws and finally asks, “Can I think about it and get back to you?”

Bush agrees, and Helms leaves. He immediately calls a meeting of other senior Republican senators, and they puzzle over the question for several hours, but nobody can come up with an answer. Finally, in desperation, Helms calls Colin Powell at the State Department and explains his problem.

“Now look here, son, your mother has a child, and your father has a child, and this child is not your brother or your sister. Who is it?”

Powell answers immediately, “It’s me, of course.”

Much relieved, Helms rushes back to the White House, finds George Bush, and exclaims, “I know the answer, sir! I know who it is! It’s Colin Powell!”

And Bush replies in disgust, “Wrong, you dumb shit, it’s Tony Blair!”

8 comments அக்டோபர் 29, 2008

டைரி குறிப்பிலிருந்து —-1

எங்கோ படித்து எப்பவோ எழுதிய டைரி குறிப்பிலிருந்து……………..

துன்ப பறவைகள் உங்கள் தலை மேல்
வட்டமிடுவதை தடுக்க முடியாது,
ஆனால் அது உங்கள் தலை மேல்
கூடு கட்டாதபடி தடுத்து கொள்ள முடியும்.

———–சீன பழமொழி.

அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.

10 comments அக்டோபர் 27, 2008

கண்மணியின் வால்

கண்மணி ரெம்ப சேட்டை பண்ணி என்னுடைய பொறுமையை சோதித்து கொண்டிருந்தாள். கடுப்பாகி போன நான்

“கண்மணி உனக்கு ரெம்பவெ வால் கூடிப்போயிருச்சி, இரு ரெண்டு அடி போட்டாத்தான் நீ வழிக்கு வருவா ” என்று காச்மூசென்று கத்த ஆரம்பித்தேன்.

” அம்மா இங்க பாரு, எனக்கு வாலே இல்லம்மா ” என்று முகத்தை பாவமாக வைத்து, திரும்பி நின்னு காட்டினாள்.

———————————————–

கண்மணி அப்பா கடைக்கு கிளம்பிக்கொண்டிருந்தார்கள். கண்மணி ” நானும் வருவேன்” என்று அடம்பிடிக்க , “சரி சீக்கிரம் வேறு ட்ரெஸ் மாத்திக்கிட்டு வா” என்று கூறியது தான், பட படவென்று புதுசா ஒண்ண மாட்டிக்கிட்டு ரெடியாகிவிட்டாள்.

” கண்மணி செருப்பு போடலையா?”

” அம்மா வெளியில காரெல்லாம் பாஸ்ட் பாஸ்டா வரும் அப்புறம் பூனையெல்லாம் வரும், கண்மணி சின்ன பிள்ளை இல்லியாமா, அதனால அப்பா என்னிய தூக்கிகிட்டு போவாங்க…..அதான் செருப்பு போடல”

—————————————-

தினமும் என்னை ஆபீஸ் அனுப்பிவிடும் போது கண்மணி கூறுவது

” அம்மா ஆபீஸுக்கு நல்ல பிள்ளையா போயிட்டு வாங்க. கண்மணி ஸ்கூலுக்கு போயிட்டு வந்தவுடன் ஒரு missed call கொடுப்பேன் , உடனே ஓடீ வந்துடனும் என்ன”

13 comments அக்டோபர் 20, 2008

ஒரு நாள் டீச்சர்

கண்மணி, அவள் பெரியம்மாவுடன் தினமும் கோவில்பட்டியிலிருந்து சுமார் பதினாறு கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தாள். காலையில் ஏழு மணி பேருந்தை பிடித்து சென்று விட்டு மாலை ஆறு மணிக்குத்தான் திரும்பி வருவாள். வீட்டுக்கு வந்தவுடன் , கண்களை விரித்து அந்த அக்காவை பாத்தேன், மயில் பாத்தேன், ஆடு , கோழி பாத்தேன், என்று சந்தோஷமாக சொல்லி கொண்டு திரிவதை பார்த்து எனக்கும் அவளுடன் பள்ளிக் கூடம் செல்ல ஆசை வந்தது

நான் சென்ற தினத்தில் , ஊரில் இரண்டு கல்யாணம், அப்புறம் என்ன, உங்களுக்கு புரித்திருக்கும், பள்ளிக்கூடத்தில் பாதி மாணாக்கர்களை காணோம். மொத்தம் நாலு வாத்தியார்கள் , எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் அது. அன்றைக்கு இரண்டு ஆசிரியர்கள் விடுப்பு எடுத்திருந்ததால், நானும் ஒரு நாள் ஆசிரியை ஆக பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. (நிஜமாலுமே பாவம் பிள்ளைங்க)

ஒருத்தங்க ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு வரையிலும், நான் நான்காம், ஐந்தாம் வகுப்பும், கண்மணி பெரியம்மா ஆறிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலும் நடத்தி கொண்டிருந்தோம்.

தற்போது உள்ள கல்வி முறை அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். நிஜமாகவே ரெம்ப நன்றாக இருந்தது. அவர்களாகவே , அட்டவணைப்படி பாடங்களை படித்தார்கள். சந்தேகங்களை வந்து கேட்டார்கள். படிக்கிற பிள்ளைங்க கிரீடத்துக்கு போட்டி போட்டு படித்துவிடுகிறார்கள். ஆனால் சிலர், ஓரமாக உக்காந்து அரட்டை அடித்து கொண்டு தானிருந்தார்கள். ஆசிரியர்களை சுற்றி சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, எழுதியதை காண்பிக்க, படித்ததை சொல்ல என்று மாணவர்கள் கும்பலாக நிற்கும்போது , ஓரமாக இருக்கும் மாணவர்களை கவனிப்பது கொஞ்சம் சிரமம் தான்.

அப்படியே எட்டி பார்த்தாலும் , “டீச்சர் ஒண்ணுக்கு ” அல்லது “டீச்சர் தண்ணி குடிக்கணும் ” என்று நான் அரட்டும் முன்பு என்னை முந்திக்கொள்கிறார்கள்.புதுசா தெரிந்ததாலோ என்னமோ, சேட்டைக்கு குறையே வைக்கவில்லை. மத்தியான இடைவேளை, முழுவதும் கண்மணி ராஜ்யம் தான், மேலும் எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்கூடத்திர்க்கு வந்திருந்ததால் அவளை கையிலே பிடிக்க முடியவில்லை. இடைவேளையில் மாத்திரமே கண்மணிக்கு விளையாட அனுமதி(மீறினால் பள்ளிக்கூடம் கட்), அதனால் மற்ற நேரங்களில் ஒன்றாம் வகுப்பில் சமத்தாக ஒக்காந்திருந்தாள்.

அங்குள்ள குழந்தைகள் கண்மணியிடம் காட்டிய அன்பையும், அவளுக்கு மயில், ஆடு, கோழி, காடு, கரை என்று எல்லாவற்றையும் சுற்றி காட்டி மகிழ்ந்ததையும் காண கண்கள் கோடி வேண்டும். அவள் பள்ளிக்கூடத்திற்க்கு போகணும் என்று அடம் பிடித்ததன் காரணம் அப்போது தான் தெரிந்தது.

நான் அன்று ரெம்பவே சந்தோஷப்பட்டாலும், சில விஷயங்களை கேட்டு மனது கனக்கத்தான் செய்தது. படிப்பிலும், சேட்டையிலும் படு சுட்டியான குமாருடைய அப்பாவோ மொடாக்குடிகாரர். அதனால் அவன் அடுத்த வருஷத்திலிருந்து வேலைக்கு தான் போவானாம் . மற்றொரு குழந்தையோ, தாயை இழந்த சிறுமி , ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அப்பா டவுனில் வேலை, அதனால் சொந்தக்காரங்க வீட்டில் அத்தனை வேலையும்( நாலைந்து மாடுகளை பராமரித்து, தண்ணி எடுப்பது எல்லாம் சின்ன வேலை கிடையாது) செய்துவிட்டு தான் வருவாள். இப்படி பலருக்கு படிப்பை கேள்விக்குறியாக்கும் பலவிதமான சங்கடங்கள்.

இவ்வளவு தங்கமான பிள்ளைகளுக்கு தொடர்ந்து நல்ல கல்வியும் வாழ்க்கையும் கிடைத்தால் , இந்தியா எப்படி இருக்கும்? இன்னும் எவ்வளவோ குழந்தைகள் இப்படி இருக்கிறார்களே! , நினைத்தால் என்னை அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு தான் வந்தது.

16 comments அக்டோபர் 19, 2008

கண்மணி எப்படி இப்படி?

ஊரிலிருந்து திரும்பிய கண்மணியை பார்த்தவுடன் கண்மணி அப்பாவுக்கு பயங்கர அதிர்ச்சி, அப்படி மெலிந்திருந்தாள். தாங்கமாட்டாமல், குழம்புக்கு, கோழி எடுத்து ஊட்டியும் விட்டு , அவரே அவளை தூங்கவும் வைக்கும் போது, தலையைக்கோதிய படியே,

” கண்மணி ஏம்மா இப்படி எலும்பா போயிட்ட? சரியா சாப்பிடலியா?” என்று சோகத்துடன் கேட்டார்.

அவளோ வேகமாக, ” இல்லப்பா, கண்மணி எலும்பு சப்பினேன் இல்லியா , அதான் எலும்பாயிட்டேன்” என்று படு சீரியசாக சொன்னதை கேட்டு , அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.

இப்படி ஒரு பதிலை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.

8 comments அக்டோபர் 7, 2008

வீடா? குட்டி சுவரா?

சமீபத்தில் படித்தது……

வாரியார் நெற்றியில் திருநீறு இடுவதை பார்த்த ஒரு சிறுவன்
” சாமியார் நெற்றியில வெள்ளை அடிக்கிறாரு டோய் ” என்று கேலி செய்தான்.

அதை கேட்ட வாரியார், ” தம்பி இங்கே வா. வெள்ளை, வீட்டுக்கு அடிப்பாங்களா அல்லது குட்டி சுவருக்கு அடிப்பாங்களா? ” என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.

” வீட்டுக்கு தான் அடிப்பாங்க. “

நான் என்னுடய உடம்பை கடவுள் குடியிருக்கும் வீடாக நினைப்பதால் , வெள்ளை அடிக்கிறேன் . நீயும் அப்படி நினைத்தால் வெள்ளை அடித்துக்கொள் . எப்படி ?” என்றார்.

” நானும் கடவுள் குடியிருக்கும் வீடு தான் ” என்று திருநீறு பூசிக் கொண்டானாம் அந்த சிறுவன்.

25 comments அக்டோபர் 6, 2008


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

அக்டோபர் 2008
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

மேல்