Archive for டிசம்பர், 2008

இனிய புத்தாண்டு

நீ காலில் செருப்பு  போட்டிருந்தால் 

முள்ளின்  மேலும் எளிதாக  நடக்கலாம்,

ஞானமாகிய செருப்பை போட்டுக்கொண்டால்,

உலகமெனும் முள் நிறைந்த வனத்தில்

 பயமின்றி திரியலாம்.
                              ———ஸ்ரீ இராமகிருஷ்ணர்.

புத்தாண்டை ஞானத்தோடு எதிர்கொண்டு, மேன்மேலும் அன்பிலும் பண்பிலும்  வளர  வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

24 comments டிசம்பர் 28, 2008

வாழ்த்து

Greetings

words1

11 comments டிசம்பர் 23, 2008

நாங்களும் ஸ்கூலுக்கு கட்டடிச்சோம்ல…..

காலையில் எழுந்தவுடன்  , நேற்று வகுப்பில் தோழிகளிடம் பேசியது நியாபகம் வர, சமையலில் தீவிரமாயிருந்த அம்மாவிடம் சென்றேன்.

“யம்மா”
“என்ன?”

“ஸ்கூலில் எல்லா டீச்சர்ஸ்சும் பனிரெண்டாம் வகுப்பை விட்டு வரமாட்டேன் என்று  அடம்பிடிக்கிறார்கள்   அம்மா. யாருமே எங்களை கண்டுகிரதில்ல . பதினொன்றாம் வகுப்பே இல்லாதது மாதிரி நடந்துக்கிறாங்க.  எங்களுக்கா பயங்கர போர்.   ” என்று முகத்தில் பயங்கர ரியாக்ஷனோடு சொன்னேன்.

“படிக்க வேண்டியது தானே”

சும்மா யாரும்மா உக்காந்து படிப்பா? அதனால……”

“அதனால?”

அதான் என் வகுப்பில் எல்லோரும் பேசி இன்னைக்கு யாருமே ஸ்கூலுக்கு  போகவேண்டாம் என்று நேற்றே முடிவுபண்ணிட்டோம்” என்றேன் சிறிது   தயக்கத்துடனும் சந்தோஷத்துடனும்.

அம்மா பதில் பேசவில்லை. மொளனம் சம்மதம் என்று முடிவு செய்து,  அம்மாவுக்கு நானும் கூட மாட வேலை செய்துகொடுத்தேன். காலையில் ஏழரைக்கு அம்மாவுக்கு பஸ் வந்துவிடும். வேகவேகமாக கிளம்பும் போது என்னை அழைத்தார்.

நீ அப்போ இன்னைக்கு ஸ்கூலுக்கு  போகலை?”

ம…..போகல

சரி, போன வாரம் ரெண்டு பெட்ஷீட் துவைக்காமல் இருந்தது அத துவச்சிடு

“சரிம்மா”

இந்த சனிக்கிழைமையும் கல்யாணவீட்டிற்கு போகவேண்டியது இருப்பதால் வீட்டை கழுவமுடியாது, அதனால  வீட்டையும் கழுவிவிடு”

சரிம்மா”  என் முகத்தில் இருந்த சிரிப்பு மெல்ல மறைந்தது.

அப்புறம் மீன் வாங்கி ரெம்ப நாள் ஆயிற்று, அதனால மத்தியானம் நல்ல மீனா பாத்து வாங்கி குழம்பு வச்சிடு “

அம்மா….” எனக்கு மயக்கம் வர ஆரம்பித்தது.
என்ன?”
ஒண்ணுமில்ல வச்சிர்றேன்” மென்று முழுங்கினேன்.

அப்புறம் வத்தலையும், மல்லியையும் போன வாரம் வாங்கியது , இன்னும் காயவைக்கவில்லை, மாடியில் காயவைத்து,  மூணு மணிக்குள்ள அள்ளிவிடு”

சரி“  கட்டடிக்க   ஐடியா சொன்ன பாதகியை பழிக்க ஆரம்பித்தேன்.

இப்போது அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்தால்  மத்தியானம்  மாவாட்டி விடலாம், அரச்சி வை சரியா?”

சரிம்மா

அன்னிக்கு டெரர் ஆனவதான் , எம்.சி.ஏ படிக்கற வரைக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் என் கனவில் கூட வந்ததில்லை.

25 comments டிசம்பர் 21, 2008

பிறந்த நாள்

நண்பர்களே, என் கண்மணி தன்னுடைய மூன்றாவது பிறந்த நாளை நவம்பர் 28(இருபத்தி எட்டு)  கொண்டாடினாள் . லேட்டா  சொல்றேன்னு  கோபிக்காமல்  ஆசீர்வாதம்  பண்ணுங்க . (நிறைய எழுதணும்ன்னு நினைத்திருந்தேன், புகைப்படத்தை இன்னொரு நாள் போடுகிறேன் )
***************************************************

கண்மணி பெரிய ஆளாகி விட்டாள்(மூன்று வயது ஆகிவிட்டதல்லவா).
பால் குடித்துக் கொண்டிருந்தேன்,

கண்மணி “அம்மா பாலை மடமடன்னு குடிக்கணும் அப்பத்தான் நீங்க  strong  பேபி ஆகமுடியும்

“சரிம்மா குடிக்கிறேன்”

மெதுவா குடிக்கிற, மடமடன்னு கண்ணா மூடிற்று  குடிம்மா”

தொடர்ந்து வற்புறுத்தியதால் படபடவென்று குடித்து முடித்தேன். வேற வழி?

*******************************************************

நேற்று லைட்டா தும்மிவிட்டேன் , உடனே ஆஜராகிவிட்டாள் அம்மையார்
அம்மா உனக்கு சளி பிடிச்சிருக்கும்மா, போய் இஞ்சியும் புதினாவையும் சாப்பிடு”

“சரி சாப்பிடுறேன்”

இப்ப சாப்பிடும்மா போ

வலுக்கட்டாயமாக என்னை கிச்சனுக்குள் தள்ளி விட்டாள். அவள் கண்முன்னாடி இஞ்சியும் புதினாவையும் சாப்பிட்ட பிறகு தான் விட்டாள்.
*********************************************************

வெளியே கிளம்பும் போது கொஞ்சம் குளிர் இருந்ததால், அவளுக்கு மாத்திரம் ஸ்வெட்டர் போட்டேன். ஆனால் வெளியே வந்த பிறகு பாத்தால் நல்ல குளிர்ந்த காற்று வீசியது.

” இன்னைக்கு கொஞ்சம் குளிர் அதிகமாகத்தான் தெரிகிறது ” என்றேன்.
அவ்வளவு தான் வந்து பிடித்துகொண்டாள்.

அம்மா பயங்கரமா குளிருது போ போய் ஸ்வெட்டர் போட்டுட்டு வாம்மா”

“ஸ்வெட்டர் போடுற அளவுக்கு எனக்கு குளிரவில்லை, கண்மணி”

இல்லம்மா குளிரடிக்குது, அப்புறம் உனக்கு சளி பிடிச்சிரம், போ போய் ஸ்வெட்டர் மாட்டிட்டு வாங்க”


அப்புறம் என்ன, மாட்டிட்டு வந்த பிறகு தான் என்னை வெளியே விட்டாள்.
*************************************************************

இதுவரை ஒருவருக்குத்தான் தலையாட்டிட்டு இருந்தேன் , இப்ப முழுநேரமும் தலையாட்ட ஆரம்பித்துவிட்டேன்.

32 comments டிசம்பர் 3, 2008

பேசினால் யாருக்கு நன்மை?

காது கொடுத்து மற்றவர்கள்   பேசுவதை கேட்டால் உங்களுக்கு  நன்மை அதிகம் .
நீங்கள்  பேசுவதை அடுத்தவர் கேட்டால் அவர்களுக்கு நன்மை அதிகம் .
                                                           ———அரபு பழமொழி.

டைரியில் எப்பவோ எழுதி வைத்தது. ம்…..கல்யாணத்திற்கு பிறகு நான் எப்படி நல்ல பிள்ளையாகிவிட்டேன் என்று புரியாத புதிராக இருந்தது. இந்த பழமொழிய படிச்ச பிறகு தான் என்னோட வீட்டுக்காரர் எவ்வளவு உதவியிருக்கிறார் என்ற உண்மை புரிந்தது.

12 comments டிசம்பர் 2, 2008


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

டிசம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
« நவ   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

மேல்