Archive for ஜனவரி, 2009

தவிப்பு

 குழந்தையை  வீட்டில்  விட்டு  வேலைக்கு செல்லும் பொது நிறைய பேருக்கு மனதிற்குள் அடிக்கடி நடக்கும் பட்டிமன்றத்தின் தலைப்பு வேலையா? குழந்தையா? குழந்தைக்கு நாம் அநியாயம் செய்கிறோமோ என்ற தவிப்பு அப்பப்ப என் மனதிலும் தோன்றும்.

             நேற்று டி.வி பக்கத்தில் உள்ள புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களை அடுக்கி(!)  கொண்டிருந்தேன். கண்மணி டி.வியிடம் பேசிக்கொண்டிருந்தாள்( கேள்வியும் பதிலும் அவளே ).

“உங்க அப்பா எங்க போயிக்காங்க?”

“ஆபிசுக்கா…..”

“உங்க அம்மா எங்க போயிருக்காங்க?”

“ஆபிசுக்கா?..”

“ஒன்பது மணிக்கு வந்திருவாங்க…..” என்றாள் ஆறுதலாக. 

நான் ஒரு நிமிஷம் சிலையாக நின்றேன். என் மனதில் அலையாக எழுந்த உணர்ச்சிகளை என்னவென்று சொல்ல?

14 comments ஜனவரி 26, 2009

வழக்கொழிந்த வார்த்தைகள்.

                  வழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீராம் தம்பிக்கு ரெம்ப நன்றி (ர்ர்ர்ர்ர்ர்ர்….).

                   ரெம்ப நாளா இதை பற்றி யோசித்து எதை எழுதன்னு தெரியாமல், கடைசியில் என் வீட்டுக்காரரிடம் போய் கேட்டேன். அவர் வழக்கம் போல என்னை ஏற இறங்க பார்த்த ஒரு பார்வைல , திரும்பவும் தனியா உருண்டு புரண்டு யோசித்ததில் ஒரு வார்த்தையை கண்டுபிடித்தேன்.

                        ’பரிகாரம்’ என்ற வார்த்தைக்கு வழக்கில் உள்ள அர்த்தம் ‘பிராயச்சித்தம்’ (எனக்கு தெரிந்து) . பொதுவா இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் தான் உபயோகிப்பார்கள். (எ.டு) பாவத்திற்கு பரிகாரம் செய்யவேண்டும்.

                         நான் சமீபத்தில் இந்த ‘பரிகாரம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. அது என்னன்னா ‘வைத்தியம்’ 

             ‘கண்ணுக்கு பரிகாரம் பண்ணபோறேன்னு’ சொன்னால் –> ‘கண்ணுக்கு வைத்தியம் பண்ணப்போறேன்’ என்று அர்த்தம். அர்த்தம் தான் புதுசே தவிர , இது நமக்கு ரெம்ப தெரிந்த வார்த்தை ஆனதால் இதற்கு மேல் விளக்க ஒன்றுமில்லை.         

                   எடுத்துக்காட்டு எல்லாம் சொல்லி முடிந்த அளவு விளக்கியிருக்கிறேன், இருந்தாலும் சந்தேகம் இருந்தால் கேட்டுடுங்க, அப்புறம் தப்பு தப்பாய் பேசாதீங்க.

                   இனிமேல் எதற்காச்சும் பரிகாரம் தெரியனும்ன்னா ஜோசியர் கிட்ட போகாதீங்க வைத்தியர் கிட்ட போங்க சரியா.

                   இதோட நான் முடிக்க கூடாதாம், மூன்று பேரை வேற இழுத்துவிடனுமாம். அதுக்குத் தான் நிறைய அப்பாவி மக்கள் இருக்காங்களே, அதனால

         ௧. ரஜோலன் — புதுசா பதிவு ஆரம்பிச்சிருக்கார். ரெம்ப பொறுப்பா சில கட்டுரைகளையும் எழுதியிருக்கார், அதனால இந்த விஷயத்திலேயும் பொறுப்பா இருந்து நமக்கு சில வழக்கில் இல்லாத வார்த்தைகளை அறிமுகபடுத்துவார் என்று அழைப்பு விடுக்கிறேன்.

         ௨. அடலேறு — இவருக்கு அறிமுகம் வேண்டாம். நிறைய கவிதைகள் எல்லாம் எழுதி புல்லரிக்க வைப்பவர் . கொஞ்ச நாளா அவரை காணோம், (ரெம்ப பிசியோ என்னமோ). இருந்தாலும் பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன்.

              ௩. விஜய் — எதைப்பற்றி எழுதினாலும் சுவராஸ்யமா எழுதுபவர். நமக்கும் கண்டிப்பா சுவராஸ்யமா ஒரு புது வார்த்தையை அறிமுகப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

             இந்த தொடரை உங்க கையில ஒப்படைத்து விட்டேன் நண்பர்களே , இனிமேல் அதன் வாழ்நாள் உங்க கையில் தான் இருக்கு வரட்டா.

20 comments ஜனவரி 15, 2009

எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு

                    கண்மணி மான் படத்துக்கு கலர் அடித்து கொண்டிருந்தாள். நானும் அருகே உக்காந்து “கண்மணி மெதுவா அடி அப்பத்தான் ஒரே சீராக அடிக்க முடியும், கலர் வெளியே வராமல் அழகா இருக்கும்” என்று அடிக்கடி நியாபகபடுத்தி கொண்டிருந்தேன்.

            அழகாக கலர் பண்ணிக் கொண்டிருந்தாள், ஆனால் கடைசியில் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாள். அதனால் மானுடைய வாயின் மேலும் கீழும் ரெண்டு கோடுகள் வெளியே நீட்டி கொண்டிருந்தது.

அழகா பண்ணியிருக்கே, அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் மெதுவா பண்ணு, இந்த மாதிரி கோடு எல்லாம் வராது சரியா ” என்றேன்.

கண்மணிக்கு தான் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதே, அதனால உடனே எப்படி சமாளித்தாள் பாருங்கள்,
இல்லம்மா நான் மானுக்கு மீசையும், தாடியும் வரைந்தேன்“.
(இந்த அம்மா இதெல்லாம் என்னிக்குத்தான் படிக்க போறாளோ)

            நானும் அம்பது பதிவு எழுதிட்டேன் :)

20 comments ஜனவரி 12, 2009

குழந்தை வளர்ப்பு

குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.

அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக் கொள்கிறது.

கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.

அவமானப் படுத்தப்படும் குழந்தை பொறாமையை கடைபிடிக்கிறது.

புகழப்படும் குழந்தை மெச்ச கற்றுக் கொள்கிறது.

பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.

நட்போடு வளர்க்கப்படும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.

வேதத்தை  தினமும்  வாசிக்க  கற்று  கொடுக்கப்படும்  குழந்தை  உலகத்தை  ஜெயிக்க  கற்று  கொள்கிறது

எப்பவோ டைரியில் எழுதிவைத்தது. வாசிக்க நல்லாத்தான் இருக்குது.  நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம் தான்.

14 comments ஜனவரி 11, 2009

பட்டாம்பூச்சி விருது.

bf

 

“Coolest Blog I ever Know”  அவார்ட் கொடுத்த மோகனுக்கு நன்றி.  (என்ன தகுதி? என்று  கேள்வி கேட்பவர்கள் வன்மையாக கண்டிக்கபடுவார்கள். )
 இந்த அவார்டை நான் பெட்டிக்குள்ள வச்சி பூட்டிவைக்காம  மூன்று பேருக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி.

1. ஸ்ரீராம் :  பேருதான் இங்கிலீஸ்காரன். மற்றபடி நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். நல்ல சிரிக்கலாம்.பொழுது போக்கிற்காக எழுதினாலும், உருப்படியான பதிவுகளையும் எழுதுவார்.

2. பிரபு : ரெம்ப நல்லா கவிதை எல்லாம் எழுதி கலக்கிகொண்டிருக்கிறார்.  எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் இன்னும் பல கவிதைகளை எழுத  வாழ்த்தி இந்த விருதை வழங்குகிறேன். எனக்கு ரெம்ப பிடித்த இந்த கவிதையை (காலெண்டர் முருகனும் காதல் மனைவியும் ) நீங்களும் படித்து பாருங்களேன்.

3. புவனேஷ் .  என்ன எழுதினாலும் ஓடி வந்து பாராட்டி என்னை தொடர்ந்து எழுத வைத்த பாசமுள்ள தம்பி .  அதனால என்னை திட்டவேண்டும் என்றால் புவனேஷை திட்டிக்கொள்ளுங்கள். (பாசக்கார தம்பியில்ல அதனால எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிகொள்வார்)

எல்லோரும் மொக்கை பதிவு தான் எழுதுவாங்க, ஆனா நம்ம புவனேஷ் தம்பி ப்ளாகே என் ப்ளாக் மாதிரி மொக்கை பிளாக் தான். இது விருதை வழங்குவதற்குள்ள கூடுதல் தகுதி.

 

எல்லோரும் கைதட்டுங்கப்பா. விருது வாங்கினவங்க  அதை துருபிடிக்க வைக்காமலும், தூக்கிபோடாமலும் மூணு பேருக்கு பகிர்ந்து கொடுங்கப்பா.

 

சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.

குந்தவை <—–

மோகனின் எண்ணங்கள் <—-

அணிமா <—-

ராகவன் <—-

ரம்யா <—-

பூர்ணிமா <—-

விஜய் <—–

திவ்ய பிரியா <——

G3(பிரவாகம் )—>

கார்த்தி/mgnithi—>

Gils/Shanki—->

பிரியா –>

Kartz—->

Tusharmargal—>

Akansha—->

Infinity—->

Simple Elegant Girl —- >

Chronic Chick Talk —–>

Empty Streets—–>

The Blog Reviewer
—>

biotecK—->

KisAhberuang—->

blogscope >>>>>>

39 comments ஜனவரி 6, 2009


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

ஜனவரி 2009
தி செ பு வி வெ ஞா
« டிச   பெப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

மேல்