Archive for ஏப்ரல், 2009
திருட்டுதனமா ஒரு சீடி
இந்த சீடி கையில் கிடைத்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் நான் இன்னும் இதை பார்க்கவில்லை. நேரமே கிடைக்கவில்லை , அப்படியே கிடைத்தாலும் யாராவது வந்து வந்து விடுகிறார்கள்… ம் … இன்னைக்கு எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று என் அறையின் கதவை அடைத்தேன்.
என் அறையில் கட்டில் அருகே வைத்திருந்த கணனியை உயிர்ப்பித்தேன். பாப்பா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
நான் என்னிடமிருந்த குறுந்தகடை வைத்த சப்தத்தில் , என் மனைவியிடமிருந்து மெல்லிய குரல் வந்தது,
“என்னப்பா பண்ணுறீங்க தூங்கலையா?”
“தூங்குறேன்…… நீ தூங்கு”
“தூங்கவிட்டாதானே… அதை முதல்ல அங்கிட்டாம தூக்கி போடுங்க சதா சர்வ காலாமும் அதோட என்ன தான் செய்வீங்களோ” தூக்கம் கலைந்த எரிச்சல் அதில் ஒட்டி இருந்தது.
“பேசாம படு தாயி… நான் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு தூங்குகிறேன்”
“என்ன பார்க்கப்போறீங்க”
“ஆங்… அதெல்லாம் உனக்கு எதுக்கு… நீ அதை பார்க்க வேண்டாம்”
“என்ன… நான் பார்க்கவேண்டாமா? அது என்ன சீடி?”
“வேண்டுமென்றால் உனக்கு அப்புறம் சொல்லித் தருகிறேன்” என்றேன் நமட்டு சிரிப்புடன்.
“சொல்லித் தருவீங்களா….? “ பட்டென்று உறக்கம் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.
“அப்படி என்ன சீடிப்பா பாக்கப்போறீங்க சொல்லுங்க”
“உனக்கு தேவையில்லாததை பற்றி நினைக்காம தூங்குமா” . இந்த பேச்சு ரெம்பவே அவளை உசுப்பேற்றி விட்டது என்று , அவள் விடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்த வேகத்திலே தெரிந்தது.
நான் வேறு வழியில்லாமல் கணனி மானிட்டரை அமர்த்திவிட்டு , எழுந்து அவளை அங்கிருந்து நகர விடாமல் ,
“போய் தூங்கும்மா..”
“எனக்கு இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னு தெரியணும்..” என்று என்னை பிடித்து தள்ளிவிட்டு , வேகமாக முன்னேற… நான் தடுக்க.. ஒரு மினி சர்க்கஸ் பண்ணிவிட்டு தவ்வி கணனி திரையை உயிர்ப்பித்து விட்டாள். ஒரு நிமிடத்தில் நான் பார்த்துகொண்டிருந்ததை தெரிந்து கொண்டு கொலை வெறியுடன், அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு நின்ற என்னை நோக்கி ………………………….
’
’
’
சரி அப்படி என்ன சீடி பார்த்தேன் என்று கேட்கிறீங்களா… ஒண்ணுமில்லைங்க என் பாப்பாவோட பிறந்த நாள் சீடி தான் பார்த்தேன்.
41 comments ஏப்ரல் 20, 2009
குழந்தை சொன்ன உண்மை.
கண்மணி இப்பவெல்லாம் அடிக்கடி குய்யா குய்யான்னு அழுவதற்கு தொடங்கி இருக்கிறாள். உப்பு பெறாத விஷயத்திற்க்கு அழுததால் கடுப்பாகி
“கண்மணி வரவர naughty girl ஆயிட்டா”
அவ்வளவு தான் பெரிய சண்டை கோழியாட்டம் சிலிர்த்து கொண்டு… மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க,
“me? naughty? naughty girl? you say naughty girl? hm… only boys are naughty…. girls are good girls….”
ம்… குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே.. எப்படி தப்பா பேசுவாங்க…
31 comments ஏப்ரல் 15, 2009