Archive for மே, 2009
டைரி குறிப்பு – 3
இருள் சூழ்ந்த வீட்டினுள் தான் திருடன் நுளைவான். தீபம் ஏற்றிவைத்துள்ள வீட்டினுள் அவன் நுளையான்.
அதுபோல் விவேகம் என்னும் தீபம் உள்ள மனதினுள், கெட்ட இயல்பு என்னும் திருடன் நுளைய மாட்டான்.
17 comments மே 31, 2009
அம்மா வீட்டுக்கு போறேன்……
வெளியூர் அல்லது அம்மா வீட்டிற்கு செல்லும் போது பெண்களுக்கு இருக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் வடிப்பது ரெம்ப கஷ்டமுங்கோ. அவ்வளவு ஏன் சும்மா ஒரு வீட்டிற்கோ அல்லது பூங்காவிற்க்கோ ஒரு இரண்டு மணி நேரம் சென்றாலே புத்தம் புது மலர்களாக மலர்ந்து விடுவார்கள். ஏன்னா….ம்…நிறைய காரணம் உள்ளுக்குள்ள வந்து கும்மியடித்தாலும் ஒரு சிலதை மாத்திரம் சொல்லுகிறேன்.
தங்கமணி ஊருக்கு போயிட்டா எப்படி எல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்று Sriram அவர்கள் எழுதியதால், நானும் நம்ம தாய்குலங்கள் சார்பா எனக்கு தோன்றியதை எழுதுகிறேன். பெண்களுக்கே உரிய தன்னடக்கத்துடன் கொஞ்சமா எழுதியிருக்கேன். தப்புகணக்கு போட்டுராதீங்க.
1. காப்பி போடு , டி போடு, அதை எடுத்திட்டு வாயேன்….. இதை எடுத்த தந்து விடுன்னு….. ஓயாமல் ஏவல் வாக்கியத்தையே கேட்டு இத்து போயிருக்கும் காதுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். கூடவே நமக்கும்.
2. அமிர்தமாக சமைத்தாலும்…. என்ன காரம், உப்பு எல்லாத்தையும் அள்ளி போட்டு இதென்னா சாப்பாடு என்ற கூப்பாடு எல்லாம் கேட்டு நாம் பாடுபடாமல் பட்டாம் பூச்சிபோல் இருக்கலாம்.
3. நாம் இல்லாவிட்டால் லாண்டிரியிலும், நாம் இருந்தால் ” சட்டையை washing machineல் போட்டால் பாலிஷ் போய்விடும்மா அதனால கொஞ்சம் கையால் துவைத்து விடேன்” என்று மிளகாய் அரைக்கும் அம்மிகல்லாய் மாறாமல் நம் தலை தப்பும்.
4. சும்மா டி.வி. ரிமோட்டை வைத்துகொண்டு, சானல் ௦ஒன்றிலிருந்து……. ஐம்பது வரைக்கும் ,,,,, அப்புறம் ஐம்பதிலிருந்து …. ஒன்றிர்க்குமாக வலம் வந்து அவரும் பார்க்காமல்… நம்மையும் பார்க்கவிடாமல் கடுப்படிக்கும் கடியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
5. எப்பாவது கொஞ்சம் தோழியுடன் பேசலாம் என்று தொலைபேசியை எடுத்தவுடனே எப்படித்தான் மூக்கில் வியர்த்து மூளை அதிவேகமாக வேலை செய்து சடுதியில் நியாபகசக்தி பெருகுமோ தெரியாது…”யம்மா… கொஞ்சம் எனக்கு அவசரமா பேசணும்” என்று தொலைபேசியை நம்மிடம் இருந்து பிடுங்கும் அநியாயம் நடக்காது
6. அவங்க வீட்டிலிருந்து யாராவது வந்தால் ஆளுக்கு தகுந்தாற் போல் வளைந்து நெளிந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் கொஞ்சம் நம் இஷ்டம் போல் இருக்கலாம்.
இப்படி இன்னும் நிறைய அடுக்கி கொண்டே போகலாம்.
இப்படி எல்லாம் எனக்கு உண்மையை சொல்ல வாய் வந்தாலும், எனக்கு அப்படி எல்லாம் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துவது பிடிக்காது. ஏன்னா நான் ரெம்ப நல்ல பொண்ணுங்க. அதிலும் பெற்றோர்கள் பரலோக பிரஜைகளாகி விட்டதால் நமக்கு அந்த அனுபவமும் கிடையாது.
சரி, உனக்கு என்ன கஷ்டம்? எதுக்கு இந்த பதிவுன்னு கேள்வி வருதில்ல… அடிப்பதற்க்கும், பிடிப்பதற்கும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஜீவன் என் வீட்டுக்காரர் தான் , அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.
27 comments மே 24, 2009
கடலை…கடலை….
- Calcium – 93 mg
- Carbohydrate – 16.13 gm
- Copper – 11.44 mg
- Fat – 49.24 g
- Fiber – 8.5 gm
- Iron – 4.58 mg
- Magnesium – 168 mg
- Manganese – 1.934 mg
- Phosphorus – 376 mg
- Potassium – 705 mg
- Protein – 25.80 gm
- Sodium – 18 mg
- Water – 6.50 gm
- Zinc – 3.27 mg
சரி இதெல்லாம் எங்கே கிடைக்கும் என்று பார்க்கிறீர்களா. ஒரு 100 கிராம் கடலையில் தானுங்க.

* கடலையை வறுத்து கருப்பட்டியுடன் இடித்து சாப்பிடுவது நல்லது.
* ஆட்டுப்பாலுடன் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
* குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் நல்லது, எலும்புகளும் வலுவடையும்.
* நிறைய வைட்டமின்களும், தாதுக்களும் இருப்பதால் பெண்கள் பேறுகலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* உங்களை இளமையாகவும் வைத்துக்கொள்ளும்.
* கடலை போட்டால் மனது இளமையாக இருக்கும்(அப்படீன்னு ஒருத்தங்க சொன்னாங்க), கடலை சாப்பிட்டால் உடல் இளமையாக இருக்கும்.
அதனால கடலையை மூட்டை மூட்டையா வறுப்பதோடு நிற்காமல் அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க சரிங்களா.
36 comments மே 6, 2009