அரபி பாட்டு..

ஜூன் 17, 2009

             அஞ்சி வருசமாயிடுச்சி நான் இந்த  வேலையில் சேர்ந்து. என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் தான் நான் தினமும் வருவதும் போவதும். இதென்ன பெரிய விஷேசம் என்று ஈசியா நினைக்காதீங்க. அவருக்கு(Egyptian) பிரெஞ்சும், அரபிக்கும் தான் தெரியும். எனக்கு பிரெஞ்சி சுத்தமா தெரியாது அரபியில் ‘சலாமலைக்கும்’ மாத்திரம் தான் தெரியும்.

           காலையில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வெளியே வருவேன். ஆபீஸ் விட்டு வெளியெ வரும்போது இன்னொரு மிஸ்டு கால் கொடுத்தால் , நானும் வெளியே வருவேன்.இப்படி என் வாழ்க்கையில்  ‘மிஸ்டு கால்’   பெரிய கம்யூனிக்கேஷன் டூலாயிடுச்சி. 

             அவசரத்து ஏதாவது சொல்லணும்ன்னா என்ன செய்வ கொஞ்சம் அரபி படிச்சிக்கோ என்று என் வீட்டுக்காரர்  ரெம்ப வற்புறுத்தும் போது , படிக்கணும்ன்னு ஒரு வெறி வரும்… ஆனா என்ன பண்ண ‘சலாமலைக்கும்’  ஒன்று தான் கடைசியில் நிக்குது. அதனால் நான் அதை தண்ணி தெளிச்சி விட்டுட்டேன்.

       எப்பவும் காரில் ஏறியவுடன் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது கனவுலகிற்க்கு போய்விடுவேன். அப்படியே இன்றும் , கண்களை மூடிக்கொண்டு ஏதேதோ நினைத்து கொண்டிருந்தேன். திடீரென்று அவருடைய ரேடியோவில்  ஒரு பாட்டு ரெம்ப மியூசிக்கில்லாமல், கட்டை குரலில் ஆரம்பித்தது. வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவரும் அதே மாதிரி பேச(பாட) ஆரம்பித்தார். நான் இவருக்கு இதென்னா புது ஆசை என்று  கண்ணை மூடிவைத்து கொண்டே சிரித்துவிட்டு,  கண்ணை திறந்து பார்த்தால்….. அவர் முன்னாடி போனக் காரை பார்த்து அப்படி முகம் சிவக்க காரசாரமாக திட்டிக்கொண்டிருந்தார். அதிலும் என்னுடைய சிரிப்பை பார்த்த பிறகு……….

  ச்ச…. எப்படியாவது கொஞ்சம் சீக்கிரம் அரபி படிக்க வேண்டும்.
 
*************************************************

           கண்மணியோட முதல் பேவரைட் சினிமா ‘திருவிளையாடல்’ ( நடிகர் திலகம் சிவாஜி நடித்தது).
அதில் சாவித்திரி அவர்கள் பாடும் பாட்டு ‘ஏலேலோ…’ என்ற பாட்டு ரெம்ப பிடிக்கும்.
  அந்த பாட்டு வரும்போது நான் கூட சேர்ந்து மெல்ல பாடினா,
  “அம்மா சும்மா சத்தம் போடாதீங்க, அக்கா பாடுறாங்கயில்ல” என்கிறாள்.

         அப்புறம்,  சக்தே,  பென்கரில் குதிரை பந்தயம், தெரசா என்ற பட்டியலில் இப்போது சேர்ந்த படம் ‘பசங்க’. அதில் என்ன புரியுதோ தெரியல ஆனா விழிந்து விழுந்து சிரிக்கிறா. அவளுக்கு நான் அந்தப் படத்தை போட்டுவிட்டு அவள் முகத்தில் வரும் சிரிப்பையும்,  expression யும் ரசிப்பதே என்னுடைய பொழுது போக்கு.

Entry Filed under: அனுபவம். .

26 Comments Add your own

  • 1. Anand  |  ஜூன் 17, 2009 at 11:50 மு.பகல்

    //அவசரத்து ஏதாவது சொல்லணும்ன்னா என்ன செய்வ//

    நான் எப்பவுமே சுண்டு விரல் தான்… கண்மணி எப்படி…?

  • 2. Anand  |  ஜூன் 17, 2009 at 11:52 மு.பகல்

    //அவளுக்கு நான் அந்தப் படத்தை போட்டுவிட்டு அவள் முகத்தில் வரும் சிரிப்பையும், expression யும் ரசிப்பதே என்னுடைய பொழுது போக்கு. //

    :)

  • 3. குந்தவை  |  ஜூன் 17, 2009 at 2:37 பிற்பகல்

    // :)
    :)

  • 4. குந்தவை  |  ஜூன் 17, 2009 at 2:38 பிற்பகல்

    //நான் எப்பவுமே சுண்டு விரல் தான்… கண்மணி எப்படி…?

    ராசா முடியல….

  • 5. Anand  |  ஜூன் 17, 2009 at 11:56 பிற்பகல்

    அரபி ல திட்டுனதியும் [பாடுனதியும்], கண்மணி யோட பாட்டு ரசனையையும் எப்படியோ relate பண்றிங்கோ… ஆனா எனக்கு தான் புரியல…

  • 6. Anand  |  ஜூன் 18, 2009 at 12:01 மு.பகல்

    பிரெஞ்சு ல திட்டுனா கூட நல்லா soothing ஆ இருக்குமுங்க அக்கா… அவ்ளோ மிருதுவான மொழி அது… [sexy ன்னும் கேள்வி பட்டேன்... :p ] … பேசாம பிரெஞ்சு கத்துங்கோங்க…

  • 7. பிரியமுடன் பிரபு  |  ஜூன் 18, 2009 at 2:50 மு.பகல்

    ////
    அரபியில் ‘சலாமலைக்கும்’ மாத்திரம் தான் தெரியும்.
    ///

    ஹி ஹி

  • 8. பிரியமுடன் பிரபு  |  ஜூன் 18, 2009 at 2:51 மு.பகல்

    அவர் முன்னாடி போனக் காரை பார்த்து அப்படி முகம் சிவக்க காரசாரமாக திட்டிக்கொண்டிருந்தார். அதிலும் என்னுடைய சிரிப்பை பார்த்த பிறகு……….
    /////

    aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • 9. பிரியமுடன் பிரபு  |  ஜூன் 18, 2009 at 2:53 மு.பகல்

    ////
    இப்போது சேர்ந்த படம் ‘பசங்க’. அதில் என்ன புரியுதோ தெரியல ஆனா விழிந்து விழுந்து சிரிக்கிறா. அவளுக்கு நான் அந்தப் படத்தை போட்டுவிட்டு அவள் முகத்தில் வரும் சிரிப்பையும், expression யும் ரசிப்பதே என்னுடைய பொழுது போக்கு.
    ////

    ஹை என்னை போலவே

  • 10. Bhuvanesh  |  ஜூன் 18, 2009 at 7:27 மு.பகல்

    //‘பசங்க’. அதில் என்ன புரியுதோ தெரியல ஆனா விழிந்து விழுந்து சிரிக்கிறா. அவளுக்கு நான் அந்தப் படத்தை போட்டுவிட்டு அவள் முகத்தில் வரும் சிரிப்பையும், expression யும் ரசிப்பதே என்னுடைய பொழுது //

    நான் சொல்லல பசங்க நல்ல படம்னு.. :)

  • 11. Bhuvanesh  |  ஜூன் 18, 2009 at 7:28 மு.பகல்

    //அதிலும் என்னுடைய சிரிப்பை பார்த்த பிறகு……….

    ச்ச…. எப்படியாவது கொஞ்சம் சீக்கிரம் அரபி படிக்க வேண்டும்.//

    அக்கா .. இதுக்காகவே அரபி கத்துக்க கூடாது.. அப்புறம் அவன் திட்டறது எல்லாம் புரியும்.. வீண் மனகஷ்டம் :)

  • 12. குந்தவை  |  ஜூன் 18, 2009 at 11:41 மு.பகல்

    //அரபி ல திட்டுனதியும் [பாடுனதியும்], கண்மணி யோட பாட்டு ரசனையையும் எப்படியோ relate பண்றிங்கோ… ஆனா எனக்கு தான் புரியல…

    நான் சொன்னேனா ஏம்பா… எங்கிருந்துப்பா உங்களுக்கு இப்படி தோணுது.

  • 13. குந்தவை  |  ஜூன் 18, 2009 at 11:46 மு.பகல்

    //பிரெஞ்சு ல திட்டுனா கூட நல்லா soothing ஆ இருக்குமுங்க அக்கா… அவ்ளோ மிருதுவான மொழி அது… [sexy ன்னும் கேள்வி பட்டேன்... :p ] … பேசாம பிரெஞ்சு கத்துங்கோங்க…

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…………………………..

  • 14. குந்தவை  |  ஜூன் 18, 2009 at 11:47 மு.பகல்

    //ஹி ஹி
    //aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    எதுக்கு இந்த ஹி…ஹி…
    எதுக்கு இத்தன aaaaaaaaaaaaaaaaaaaa

  • 15. குந்தவை  |  ஜூன் 18, 2009 at 11:49 மு.பகல்

    //அக்கா .. இதுக்காகவே அரபி கத்துக்க கூடாது.. அப்புறம் அவன் திட்டறது எல்லாம் புரியும்.. வீண் மனகஷ்டம்

    அப்படி வேற இருக்குதோ? யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

  • 16. குந்தவை  |  ஜூன் 18, 2009 at 11:51 மு.பகல்

    //நான் சொல்லல பசங்க நல்ல படம்னு..

    ம்… எனக்கும் ரெம்ப பிடிச்சிருந்தது.

  • 17. coolzKarthi  |  ஜூன் 19, 2009 at 4:30 மு.பகல்

    ஹிஹி ஹி ….நல்ல வேலை உங்களுக்கு arabi தெரியல….

  • 18. Sriram  |  ஜூன் 19, 2009 at 5:49 மு.பகல்

    அந்த பாட்டு வரும்போது நான் கூட சேர்ந்து மெல்ல பாடினா,
    “அம்மா சும்மா சத்தம் போடாதீங்க, அக்கா பாடுறாங்கயில்ல” என்கிறாள்.//

    Very good Kanmani…Keep it up…

  • 19. குந்தவை  |  ஜூன் 19, 2009 at 4:49 பிற்பகல்

    //ஹிஹி ஹி ….நல்ல வேலை உங்களுக்கு arabi தெரியல….

    ம்…..ஒரு விதத்தில் நல்லதுதான்… இல்லன்னா காலங்காத்தால என் காதுல ரத்தம் வந்திருக்கும்.

  • 20. குந்தவை  |  ஜூன் 19, 2009 at 4:54 பிற்பகல்

    //Very good Kanmani…Keep it up…

    என்ன செய்ய…. அம்மா big lady.. அப்பா boy யாம்.

  • 21. Krishna  |  ஜூன் 21, 2009 at 2:50 பிற்பகல்

    //எப்படியாவது கொஞ்சம் சீக்கிரம் அரபி படிக்க வேண்டும்.//

    பிரெஞ்சு என்னங்க பாவம் பண்ணிச்சு ?? அத மட்டும் விட்டுடீங்க …

  • 22. kunthavai  |  ஜூன் 22, 2009 at 4:15 மு.பகல்

    //பிரெஞ்சு என்னங்க பாவம் பண்ணிச்சு ?? அத மட்டும் விட்டுடீங்க

    எனக்கு கூட வேலைபார்ப்பவர்கள் எல்லோரும் அரேபியர்கள். அதனால் அரபிக் படித்தால் இன்னும் நல்லது.

  • 23. அடலேறு  |  ஜூன் 22, 2009 at 8:33 மு.பகல்

    எனக்கும் இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்குங்க குந்தவை. உங்க பதிவ படிச்சது அது தான் நினைவிற்கு வந்தது :-)

  • 24. குந்தவை  |  ஜூன் 22, 2009 at 11:11 மு.பகல்

    //எனக்கும் இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்குங்க :)

  • 25. ராஜ்  |  ஜூன் 24, 2009 at 5:24 மு.பகல்

    ஆக நம்மூர்காரங்க குசும்பு எங்கே போனாலும் தொடருது?

  • 26. குந்தவை  |  ஜூன் 24, 2009 at 6:14 மு.பகல்

    //குசும்பு எங்கே போனாலும் தொடருது?

    குசும்பு- அப்படீன்னா என்னண்ணா?

Leave a Comment

hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

ஜூன் 2009
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

மேல்