Archive for ஆகஸ்ட், 2009

தண்ணீர்…. தண்ணீர்…….

                   தண்ணியப் பார்த்தாலே கண்மணிக்கு முகமெல்லாம் பளிச்சிடும்(எனக்கும் தான்). சிறு வயதில் சம்மர் லீவு முழுவதையும் தண்ணீரில் மேய்ந்தே அம்மாவை வெறுப்பேத்துவோம். அதனால் கண்மணியை பார்க்க எனக்கு ரெம்பவே பாவமாக இருக்கும். இந்தத்தடவை ஏதாவது நீர்வீழ்ச்சிக்கு கண்டிப்பாக அழைத்து செல்ல வெண்டும் என்று ஒரு முடிவோட தான் ஊருக்கு சென்றேன்.

              ஒரு வழியா கொஞ்சம் டிக்கெட்டுகளை பிடித்து சென்றுவிட்டோம். குளிக்க போனா அழகான அறிவிப்பு கண்ணில் பட்டு மெய்சிலிர்க்க வைத்து விட்டது. என்ன இருந்தாலும் நாங்க எல்லாம்  rules and regulations  ஐ அப்படியே follow பண்ணுவோம்ல. சரி பிற்காலத்தில் உங்களுக்கும் பயன்படும் என்று உங்களுக்காக…

            ஜோர இருந்தது அருவி. தண்ணி தட தடன்னு விழும் போது எனக்கு தண்ணி கமகமண்ணு மணக்குற மாதிரி தெரிந்தது. குளிச்சிட்டு மேல வந்து பாத்தபிறகு தான் வாசனையின் ரகசியம் தெரிந்தது , அங்கயும்    நிறைய பேரு குளிக்கிறாங்க. அப்புறம் ஜாலியான ஒரு போட்டிங் என்று கண்மணிக்கு ஒரே கொண்டாட்டம்.

19 comments ஆகஸ்ட் 29, 2009


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

ஆகஸ்ட் 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

மேல்