Archive for அக்டோபர், 2009
கோபப்படாதீங்க …..ப்ளீஸ்….
மனிதர்கள் பலவிதம், பதிவர்கள் பலவிதம்… ஏன் பேய்கள் பலவிதம் என்று கூட நிறைய பதிவுகள் வரும்போது நாமும் இப்படி ஏதாவது எழுதலாமா என்று ஒரு ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தபோது.. திடீரென்று நிலநடுக்கம் வந்த மாதிரி நான் இருந்த அறையே கிடுகிடுத்து விட்டது. என் எதிரில் இருந்த அரபி அம்மா படா கோபத்தில் (என்னிடம் அல்ல) கிறீச்சிட்டது தான் காரணம்.
ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்தால் நமக்கு தான் கோபம் வரும். சின்ன விஷயத்துக்கும் அப்படி ஒரு காட்டு கத்தல், எனக்கு ரெம்ப அநியாயமாகப்படும். இங்கு அடிப்படை உதவிகளை செய்ய இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேஷியா முதலிய நாடுகளிலிருந்து தான் நிறைய பேர் வருவார்கள். அந்த ப்ளாக்கில் நான் மட்டும் தான் இந்தியா என்பதாலோ என்னவோ, அந்த பணிப்பெண்கள், அரபி பெண்களிடம் நன்றாக வாங்கிவிட்டு என்னை பார்த்து ஒரு சோகமான புன்னகையை உதிர்த்து விட்டு போவார்கள். எனக்கு ரெம்பவே கஷ்டமாகயிருக்கும்.
எனக்கு தெரிந்து , இவர்கள் புகார் கொடுத்து , பணிப்பெண்களை மாற்றுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. அதிலும் எதுவும் செய்யாமலே திருட்டு பட்டம் கொடுக்கும் போது…. அழும் பணிப்பெண்களை பார்த்தால் சகிக்காது.
இவ்வளவு எழுதிவிட்டு கண்மணி எனக்கு தந்த பாடத்தை சொல்லாமல் எப்படி முடிப்பது.
ஒரு நாள் , தூங்குவதற்க்கு முன்னால் பல் விளக்க பயங்கரமாக அடம்பிடித்தாள். என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. கடைசியில் பொறுமை இழந்து நான் கொஞ்சம் கோபத்தில் அரட்டி, பிடித்து வைத்து பல் விளக்கி விட்டேன். பொதுவாக அப்படி கோபப்பட்டால், சிறிது நேரம் கழித்து மெள்ள அவளுக்கு புரிய வைத்து, அவளை சமாதானபடுத்திவிடுவேன். அவளும் புரிந்து கொள்ளுவாள். ஆனால் அன்று எனக்கு மகா கோபம் வந்து விட்டதால், அப்படியே படுக்கைக்கும் சென்று…. துங்குவதற்க்கு முன்னால் சொல்லும் ஒரு செபத்தை ஆரம்பித்தேன்.
“இயேசப்பா உமக்கு நன்றி”
கண்மணி உம்மென்று முகத்தை வைத்து கொண்டு “இயேசப்பா உமக்கு நன்றி”.
”இயேசப்பா எனக்கு நல்ல ஞானத்தை தாரும்”
கண்மணியின் கண்ணில் கண்ணீரூம் , முகத்தில் கோபமும் கொப்பளிக்க, ” இயேசப்பா எனக்கு நல்ல அறிவை தந்திருக்காரு அதனாலத்தான் நான் நல்ல பிள்ளையா படிக்கிறேன், எழுதுறேன்(இப்பவெல்லாம் கண்மணி சமத்தா எழுதுறா) , உங்களிடம் தான் அது இல்லை அதனாலத்தான் நீங்க கோபப்படுறீங்க“
14 comments அக்டோபர் 29, 2009
கண்மணி ரெம்ப அலர்ட் தான்.
“கண்மணி உங்க தாத்தாவோட சூட்கேச பாரு …. ரெம்ப பழசாயிடுச்சி”
“ஆமா… சீ…. ரெம்ப அசிங்கமாயிருக்கு” என்றாள் முகத்தை சுழித்துவிட்டு.
“ஒண்ணு செய்….. உங்க அப்பாகிட்ட சொல்லி புதுசா ஒரு சூட்கேஸ் தாத்தாவுக்கு வாங்கி விடலாம்.”
கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு, ” வந்து….. நீங்க இப்ப சும்மா தானே இருக்கீங்க… ஒரு துணியை எடுத்து சூட்கேஸை நல்லா துடைங்க .. அப்போ அழகாயிடும்“
*************************************
“பெரியம்மா.. இந்த பெட்டி கவர் கிழிஞ்சிருக்கு .. புதுசா ஒண்ணு வாங்கி போடுங்க”
“கண்மணி, பெரியம்மா கிட்ட காசே இல்லம்மா. நீ அப்பாகிட்ட கொஞ்சம் வாங்கி தர்றியா…. புதுசா வாங்கிக்கிறேன்”
“ம்.. எங்க அப்பாகிட்டயெல்லாம் வாங்கவேண்டாம்…… நீங்க இந்த ஊசி நூலு இருக்கு பாத்தீங்களா … அத வச்சி தைங்க அப்போ சரியாயிடும்“.
**************************************
கண்மணி அப்பா: ” அம்மாடி நீ சாதாரண ஆளு கிடையாது… கடையேழு வள்ளல்களில்… பாரி வள்ளல் பக்கத்தில் கண்டிப்பா உனக்கு ஒரு இடம் உண்டு. “
22 comments அக்டோபர் 14, 2009
நீங்க ரெடியா?
பன்றிக் காய்ச்சல் இப்படி என் வாழ்க்கையில் விளையாடும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. உடனே பன்றி காய்ச்சல் எனக்கு வந்துவிட்டதோ என்று பயந்துவிடாதீர்கள்.
கண்மணிக்கு மூன்று மாதம் கூடுதலாக விடுமுறை கொடுத்து, மூன்று புத்தகத்தையும் கையில் கொடுத்து ‘முடிச்சிருங்க’ என்று அனுப்பிவிட்டார்கள். என்ன ஒரு ‘வில்லத்தனம்’ என்று நினைத்தாலும்…. இப்போது உள்ள வில்லன்களை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது. கதாநாயகர்கள் அடிக்கிற பஞ்ச் டயலாக்கை நம்மளாலே தாங்கமுடியவில்லை… பாவம் அவர்கள்…….. ‘ தெரிச்சிடுவே….. நொறுங்கிடுவா…. தாங்கமாட்ட…சுருண்டிருவ… ‘ என்று பேசுவதை கேட்டு பரிதாபமாக முழிப்பவர்களை பார்த்து பரிதாப்படாமல் என்ன செய்ய.
நம்ம கதைக்கு வருவோம்…வாரத்திற்க்கு ஒருமுறை எழுதவைப்பதற்க்கே , எங்களை தலை கீழாக நிற்கவைப்பாள். இப்போ தினமும் எழுதவைப்பதற்க்கு…… நினைக்கவே பயமாகயிருக்கிறது. இப்பதான் சிறு வயதில், வீட்டில் படிக்காம அப்பாவை எரிச்சல்படுத்தியது அநியாயத்துக்கு நியாபகம் வந்துதொலைக்கிறது.
கெஞ்சி…. கொஞ்சி அவளை ஒரு பக்கம் எழுத வைப்பதற்க்குள் ஒருவழியாகிவிட்டோம். அப்ப தான் எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க தொலைபேசினாங்க. அவங்களுக்கு நான் ஆரக்கிள் சொல்லிக்கொடுக்க வேண்டுமாம். நான் கைவேலையாக இருந்ததால், எனக்கு பதிலாக கண்மணி அப்பா தான் பேசினார் ,”சரி , அதெற்கென்ன கண்டிப்பா தரோவா சொல்லி கொடுத்துவிடலாம். ஆனா நான் கேட்கிற பீஸை கரெக்டா தந்துடனும்” என்றார்.
அவங்களும் ,” கண்டிப்பா….. எவ்வளவு தரணும்”
கண்மணி அப்பா , ” பெரிசா ஒண்ணுமில்ல , கண்மணியை …. அவளோட வீட்டு பாடத்தை எழுத வச்சிடணும் அவ்வுளவுதான்“
அப்பதைக்கு அங்கிருந்து ஒரு சிரிப்பு கேட்டது தான், அப்புறம் அங்கிருந்து போனே வரவில்லை. நீங்க யாராவது ரெடியா?
10 comments அக்டோபர் 8, 2009
சுவாரசியமா எழுதுவாங்களே…….
நான் ஊருக்கு போயிருந்த கேப்புல , டுபுக்கு அண்ணா என்னிய சுவாரஸ்யபதிவர் பட்டியல்ல பெரிய மனசு பண்ணி கோத்துவிட்டிருந்தார். அண்ணாச்சிக்கு ரெம்ப நன்றி. இப்ப நானும் நல்ல பிள்ளையா (எனக்கு ரெம்ப அறிமுகம் இல்லாத ) நாலு பேரை அறிமுகபடுத்தனும் இல்ல, தேடிப் பார்த்தா நிறைய பேரு அநியாயத்துக்கு அழகா எழுதி தள்ளி இருக்காங்க. மேலும் எல்லோரும் என்னை விட பதிவுலகிற்க்கு ரெம்பவே பழக்கமானவங்க தான்.
1. இளவஞ்சி : இவருடைய பதிவுகளை படித்து கொண்டிருந்த போது, என்னுடன் வேலை பார்ப்பவர், ‘நீங்க தனியா சிரிக்கவேயில்லை’ என்று கிண்டல் பண்ணுகிற அளவுக்கு சிரித்துவிட்டேன். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிக்கும் படியான கமெண்டுடன் கலக்கி இருக்கிறார்.
2. ஜவகர் : இவருடைய பதிவுகளை நான் நிறைய வாசித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். எப்படி தினமும் இவரால் எழுத முடிகிறது என்பது தான் எனக்கு புரியாத புதிர். ம… அதுக்கெல்லாம் ‘இது’ வேணும்.
இவங்க ரெண்டுபேரும் எனக்கு ரெம்ப அறிமுகம் தான்:
1. ஜானு : கதை, கவிதை, சமையல், ஆன்மீகம் என்று எதையும் விட்டுவைக்காமல் ரவுண்ட் கட்டி எழுதுபவர். படிச்சிபாருங்க.
2. நெஜம்மாவே நல்லவன் : நெஜமாவே நல்லவரோ இல்லியோ.. ஆனா நெஜமாவே சுவாரஸ்யமாக எழுதுபவர்.
சரி நீங்களும் மறக்காம நிறைய பேரை அறிமுகபடுத்துங்க.
5 comments அக்டோபர் 7, 2009
காதல், கடவுள், பணம் , அழகு – நான்
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க. இந்த தலைப்பில் எழுத அழைப்பு விடுத்த புவனேஷுக்கு இது சமர்ப்பணம்.
காதல்-
காதல் இல்லாவிட்டால் அது என்ன வாழ்க்கைங்க. ஒவ்வொரு மனிதர்களையும் காதல் தானே வாழ வைத்துகொண்டிருக்கிறது. சிலருக்கு பணத்தின் மீது காதல், சிலருக்கு சமுதாய நலன் மீது காதல், அரசியல்வாதிகளுக்கு பதவியின் மேல் காதல், நடிகர்களுக்கு நடிப்பின் மேல் காதல், எனக்கு என் காணவரிடம் கொள்ளும் ஊடல்( இதை ‘சண்டை’ன்னு இன்டீசென்ட சொல்லுவாங்க) மீது காதல், புவனேஷுக்கு ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லார் மீதும் காதல்( எம்மாம்…. பெரிய்ய்ய்ய்ய மனசு) …. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்ப சொல்லுங்க காதல் இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்.
கடவுள்-
கடவுள் நம்முடைய மனதிற்க்குள் மனசாட்சி வடிவமாக இருக்கிறார். ரெம்ப ஓவராக அவருடைய பேச்சை கேட்காவிட்டாலும், ஓரளவுக்காவது கேட்டு கொஞ்சமாச்சும் நல்ல பிள்ளையா இருக்கணும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசை என்னைக்கு நிறைவேறப்போகுதோ தெரியவில்லை.
பணம்-
’ மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர்உயர்ச்சி தாளாமை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போம்’
என்று ஒவையார் ‘நல்வழி’ யில் சொல்லியிருக்கிறார். மனிதனை மனிதனாக நிலைக்க செய்வதற்க்கும், நம்மையும் நம் சுற்றத்தாரையும் சந்தோஷமாக வாழவைப்பதற்க்கும் பணம் கண்டிப்பாக தேவைதான்.
பணம் அதற்க்கு மேல் சேர்த்து வைத்திருப்பவர்கள் தான் , அதிகமாக பணம் வைத்திருந்தால் என்னசெய்யவேண்டும் என்று ஐடியா தருவார்கள்..
அழகு –
அழகு என்பதற்க்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தம் இருக்கும். சிலருக்கு புத்திசாலித்தனம் தான் அழகு, சிலருக்கு அமைதி தான் அழகு, சிலருக்கு வீரம் தான் அழகு, …… இருந்தாலும் அழகு இல்லாத உயிர்களே கிடையாது. அந்த அழகுதான் நமக்கு அவர்கள் மேல் ஒரு பிடிப்பை உருவாக்கும். வேறு என்ன சொல்ல என்று எனக்கு தெரியவில்லை. ம்… எனக்கு பிடித்தமானவர்கள் எல்லாருமே என்னை பொறுத்தவரையில் மிக மிக அழகானவர்கள்.
அப்பாடி ஒரு வழியா எழுதிட்டேன். இப்ப யாரை எல்லாம் கோத்துவிடலாம்…..
1. ஷ்யாமா, இவரை நான் எந்த தொடர்லேயும் கோத்து விடாமல் எவ்வளவு பெரிய கொடுமை செய்திருக்கிறேன். அதற்க்கு மன்னிப்பை கேட்டு அழைப்புவிடுக்கிறேன்.
2. முகுந்தன் ஐயா, எப்படி நீங்கள் எங்களை எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கலாம். வாங்க வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டு போங்க.
3. விஜய், காயத்திரி மந்திரம் தான் இவருக்கு ரெம்ப பிடிக்கும் இருந்தாலும், எந்த தலைப்பை கொடுத்தாலும் இவர் ரெம்ப சுவாரஸ்யமாக எழுதுவார்.
4. பிரபு - அடிக்கடி காணாம போயிடுவார். அப்பப்ப பிடிச்சி இப்படி ஏதாவது வேலை குடுத்தாதான் சரிபட்டுவருவார்.
5 comments அக்டோபர் 3, 2009