சுவாரசியமா எழுதுவாங்களே…….
அக்டோபர் 7, 2009
நான் ஊருக்கு போயிருந்த கேப்புல , டுபுக்கு அண்ணா என்னிய சுவாரஸ்யபதிவர் பட்டியல்ல பெரிய மனசு பண்ணி கோத்துவிட்டிருந்தார். அண்ணாச்சிக்கு ரெம்ப நன்றி. இப்ப நானும் நல்ல பிள்ளையா (எனக்கு ரெம்ப அறிமுகம் இல்லாத ) நாலு பேரை அறிமுகபடுத்தனும் இல்ல, தேடிப் பார்த்தா நிறைய பேரு அநியாயத்துக்கு அழகா எழுதி தள்ளி இருக்காங்க. மேலும் எல்லோரும் என்னை விட பதிவுலகிற்க்கு ரெம்பவே பழக்கமானவங்க தான்.
1. இளவஞ்சி : இவருடைய பதிவுகளை படித்து கொண்டிருந்த போது, என்னுடன் வேலை பார்ப்பவர், ‘நீங்க தனியா சிரிக்கவேயில்லை’ என்று கிண்டல் பண்ணுகிற அளவுக்கு சிரித்துவிட்டேன். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிக்கும் படியான கமெண்டுடன் கலக்கி இருக்கிறார்.
2. ஜவகர் : இவருடைய பதிவுகளை நான் நிறைய வாசித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். எப்படி தினமும் இவரால் எழுத முடிகிறது என்பது தான் எனக்கு புரியாத புதிர். ம… அதுக்கெல்லாம் ‘இது’ வேணும்.
இவங்க ரெண்டுபேரும் எனக்கு ரெம்ப அறிமுகம் தான்:
1. ஜானு : கதை, கவிதை, சமையல், ஆன்மீகம் என்று எதையும் விட்டுவைக்காமல் ரவுண்ட் கட்டி எழுதுபவர். படிச்சிபாருங்க.
2. நெஜம்மாவே நல்லவன் : நெஜமாவே நல்லவரோ இல்லியோ.. ஆனா நெஜமாவே சுவாரஸ்யமாக எழுதுபவர்.
சரி நீங்களும் மறக்காம நிறைய பேரை அறிமுகபடுத்துங்க.
Entry Filed under: ரசித்தவை. .
5 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
அடலேறு | அக்டோபர் 7, 2009 at 6:50 மு.பகல்
சரியான தேர்வு குந்தவை. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
2.
--புவனேஷ்-- | அக்டோபர் 10, 2009 at 4:09 பிற்பகல்
சூப்பர் கா!! ரெண்டுபேர் ஏற்கனவே தெரியும்.. மீதி ரெண்டு பேர எனக்கு அறிமுகம் செஞ்சதுக்கு நன்றி!!
3.
குந்தவை | அக்டோபர் 13, 2009 at 10:07 மு.பகல்
//ரெண்டு பேர எனக்கு அறிமுகம் செஞ்சதுக்கு நன்றி!!
நன்றி
4.
Jawahar | நவம்பர் 16, 2009 at 7:52 மு.பகல்
மன்னிக்கணும், ரொம்ப லேட்டாத்தான் என்னைப்பத்தி எழுதி இருக்கிறதை பார்க்க நேர்ந்தது. ரொம்பப் பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு! நன்றி.
http://kgjawarlal.wordpress.com
5.
குந்தவை | நவம்பர் 16, 2009 at 11:20 மு.பகல்
//ரொம்பப் பெருமையாவும், சந்தோஷமாவும் இருக்கு!
Thank U Thank U.