Archive for செப்டம்பர் 2, 2010

வந்திட்டோம்ல….

“ஊரு எப்படி இருக்கு?”

 ”நல்லாயிருக்கு”

 ”ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க?”

 ”நல்லாயிருக்காங்க”

 ”மழை எல்லாம் பெய்ததா? “

“ம்”

                      ஊருக்கு போயிட்டு வந்ததுலேயிருந்து இந்த மூன்று கேள்விக்கு தான் பதில் சொல்லிட்டு இருக்கேன். (என்ன தான் ஊருக்கு தொலைபேசியில் பேசிக் சிரித்து கொண்டாலும் நேரில் பாத்து பல்பு வாங்குகிற மாதிரி வருமா என்ன.)

 —————————————————————

                               கோவில்பட்டிக்கு போனவுடனே கண்மணி தினமும் அவங்க பெரியம்மா கூட பள்ளிக்கூடத்துக்கு செல்ல ஆரம்பித்து விட்டாங்க. என்ன தான் டயர்டா இருந்தாலும் பள்ளிக்கூடத்தை மட்டம் போடமாட்டாங்க. எனக்கு அவங்க கடமை உணர்ச்சியை பார்த்து புல்லரித்துவிட்டது என்னமோ உண்மை.

 ”கண்மணி பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் போற கொஞ்சம் அ, ஆ, இ, ஈயும் படிச்சிட்டு வாங்க” என்றேன்.

 ”அம்மா  அதெல்லாம் uniform  போட்ட பிள்ளைங்க தான் படிக்கணும். நான் எல்லாம் படிக்க வேன்டாம்

என்ற பதிலை கேட்ட பிறகு தான் எனக்கு நிம்மதியா இருந்தது.

   இந்த பதிலாவது பரவாயில்லை. ஒரு வாரம் களித்து அவங்கப்பாவுடன் தொலை பேசியில் படு அமர்களமாக பள்ளிக்கூடத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாங்க. திடீரென்று என்னிடம் “அம்மா… அப்பா பேசுறது என் காதுக்கு புரியவேயில்லை ” என்று சிணிங்கியபடியே ரிசீவரை என்னிடம் தந்து விட்டு ஓடிட்டாங்க.

நானும்  அவங்க அப்பாகிட்ட ” என்னப்பா சொன்னீங்க கண்மணிக்கு சரியா கேட்கலையாம்?”
 
   அவர் ” கண்மணி விளையாட்டும் இருக்கணும்.. ஆனா வரும்போது கொஞ்சம் தமிழையும் படிச்சிட்டு வரணும் சரியா? என்று கேட்டேன்” என்றார்.

   சரி அப்ப இந்தம்மா எதுக்கு இப்படி நாள் விடாம பள்ளிக்கூடத்துக்கு அடிச்சி புரண்டு போனாங்க தெரியுமா? கீழப்பாருங்க 

                  ஊருக்கு போயிட்டு வந்துட்டேன்னு சொல்றதுக்கு தான் இந்த பதிவு.

செப்டம்பர் 2, 2010 at 6:44 மு.பகல் 36 பின்னூட்டங்கள்


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blog Stats

  • 32,763 hits

 

செப்டம்பர் 2010
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   அக் »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Follow

Get every new post delivered to your Inbox.