Archive for செப்டம்பர் 28, 2010
கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் கோபம்….
என்னுடைய நீண்ட நாள் (நான்காம் வகுப்பிலிருந்தே)
தோழி என்னை பார்க்க வந்திருந்தாங்க. எப்போதும் போல் உற்சாகமாக எல்லா விஷயங்களையும் பற்றி மனசுவிட்டு பேசி மகிழ்ந்தாலும், வாழ்க்கையில் சில சமயங்களில் சில வருத்தமான சம்பவங்களும் கடந்துபோகத்தானே நேரிடும். அப்படி சில நிகழ்ச்சிகளையும் மிகவும் வருத்தப்பட்டு கூறிவிட்டு, ‘ஒரு சிலர் தான் சின்ன வயதில் எப்படி இருந்தார்களோ அதே குணனலன்களுடன் இருக்கிறார்கள். பலர் வளர்ந்த பிறகு முற்றிலுமாக மாறிவிடுகிறார்கள்’ என்று கூறினார்.
இதை என்னுடன் கேட்டு கொண்டிருந்த கண்மணி, ‘ Aunty… சின்ன பிள்ளையா இருக்கும் போது ரெம்ப fatஆ இருந்தேன். இப்ப பாருங்க நானு ஒல்லியாயிட்டேன்… நானும் மாறிவிட்டேன்’ என்று மகாகவலையுடன் சொல்ல… கவலை எல்லாம் மறந்து கலகலவென்று சிரித்து விட்டாள் என் தோழி.
****************************************************************
ரெம்ப நாளா என் மனதில் இருந்த விஷயம் என்றாலும்… முதன் முதலில் இதை வெறுக்க ஆரம்பித்தது ஈராக் போரின் போது தான். அதிலும் பிபிசி இருக்கின்றதே.. அப்பப்பா முழுநேரமும் அங்கு டென்ட் போட்டு உக்கார்ந்து கொண்டு … உலக வரலாற்றிலே முதன் முறையாக இவ்வளவு சக்தி வாய்ந்த… என்று ஏவுகணையை பற்றி ஒரு பெரிய புறாணத்தையே பாடுவதும்… அதன் பிறகு எங்கு… எப்படி… விழுந்தது என்றும், அதன் பாதிப்புகளை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்ந்து வழங்குவதுமாக ஆரம்பித்தது.
அங்கு நடக்கும் அவலங்களையும் கொடுமைகளையும் ஒரு உணர்ச்சியுமேயில்லாமல் ஒரு பரபரப்பை மக்களுக்கு அளிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக விறுவிறுப்பாக செய்திகளை வழங்குவது ஒரு நோயாக மாறிவிட்டது. அந்த நோய் நம் நாட்டினர்க்கும் அதி வேகமாக பரவிவிட்டது அருவருப்பாக இருக்கிறது.
சும்மா பிரபலங்கள் பின்னாடி போய் அவர்களை துரத்தி துரத்தி புகைப்படம் எடுப்பதும், அவர்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு கதை அளப்பதும்…மீடியாக்கள் கோள் மூட்டி கொடுக்கும் குண்டணிகளின் வேலையைத்தான் செய்கிறது. அடுத்த வீட்டில் நடக்கு விஷயங்களை அரை குறையாக கேட்டு கதை பரப்பும் வம்பர்களே இதற்க்கு பரவாயில்லை.

அண்மைய மறுமொழிகள்