Archive for நவம்பர் 22, 2010

யாருகிட்ட?

                            கண்மணி கொஞ்ச நாளாவே கொஞ்சம் ஓவரா சேட்டை பண்ணிட்டிருக்கா. அன்றும் அப்படித்தான் சாயங்காலமே பால் குடிப்பதிலிருந்து ஆரம்பித்து எதற்கெடுத்தாலும் ஒரே  அட்டகாசம்…. அப்புறமென்ன, இப்படி ரெண்டுபேரும் மல்லுக்கட்டிய சப்தத்தில் கடுப்பாகி …  கண்மணி அப்பா ரெண்டு அரட்டு போட்டபிறகு தான் அம்மையார் கொஞ்சம் நார்மலுக்கு வந்தாங்க..

                           திட்டிவிட்டோமேன்னு அவங்க அப்பாவுக்கு வருத்தம்,  திட்டிட்டாங்களேன்னு கண்மணிக்கு வருத்தம்,  வீடே திடீர்ன்னு அமைதியாயிடிச்சேன்னு எனக்கு வருத்தம். இப்படி ஆளுக்கொரு வருத்தத்தையும் தூக்க முடியாம தூக்கிட்டு தூங்க போனோம்.

                தூங்குவதற்க்கு முன்னால் கண்மணி ஒரு சின்ன செபத்தை பாவம் போல் சொல்லிமுடித்தவுடன், அவங்கப்பா,

 ”கண்மணி… அம்மா அப்பா சொல் பேச்சையும்  கேட்கணும்ன்னு கொஞ்சம்  prayer பண்ணு ” என்று சொல்ல..

                         கண்மணியும் இன்னும் கொஞ்சம் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு அதையும் கூறிவிட்டு படுத்து கொண்டாள்.

                       எனக்கே ரெம்ப பரிதாபமாக இருந்தது. அப்புறம் நாங்களும் சிறிது prayer பண்ணி முடித்தவுடன்,

                      என்னிடமும் “நீயும் ஒரு சொல் பேச்சையும் கேட்கிறது கிடையாது, அதனால நீயும் கண்மணி மாதிரி prayer பண்ணு. ” (கண்மணியை அரட்டுற மாதிரி)

                          நானும் ரெம்ப பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு , “கடவுளே நானும் எங்கம்மா, அப்பா பேச்சை கேட்டு ஒழுங்கா இருக்கணும்“  என்றேன் மகா சீரியஸாக .

                        தங்கபாண்டியர் (he…he… எல்லாம் ஒரு மரியாதை தான்) என்னை சிங்க பாண்டியர் மாதிரி ஒரு பார்வை பார்த்து முறைத்ததை பார்த்துவிட்டு,

                        “He..he… இப்ப எனக்கு நீங்க தானே அம்மாவும் அப்பாவும்.. அதான் அப்படி சொன்னேன்” ( paint அடிக்கிறதில நாங்க தான் பயங்கர expert  ஆச்சே)

                       ”இந்த ஜால்ஜாப்பு எல்லாம் வேண்டாம் ஒழுங்கா நான் சொல்லறதை எல்லாம்  கேட்கணும்ன்னு prayer பண்ணு

                        நான் சிரிப்பை அடக்கிவிட்டு, மறுபடியும் முகத்தை அப்பாவியா வைத்துவிட்டு,

                  “கடவுளே  என் வீட்டுகாரர் நான் சொல்லறதை எல்லாம்  கேட்கணும்“  மகா சின்சியராக வேண்டிகொண்டேன்.

                      அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.. ஆனாலும் சிரிக்ககூடாது என்று சீரியஸாக ஏதோ பேச வாயெடுக்கும் போது, கண்மணி விசுக்கென்று படுக்கையில் இருந்து எழுந்தாள்.

                                        நான்…. என்னாச்சி தூங்கிட்டு தானே இருந்தாள் என்று யோசித்துகொண்டிருக்கும் போதே … கைகளை கூப்பி , கண்ணை மூடி “யேசப்பா நான் சொல்றபடியும் அப்பா கேட்கணும்” என்று சொல்ல…. வழக்கம் போல கலகலப்பாகி விட்டது வீடு.

நவம்பர் 22, 2010 at 6:55 மு.பகல் 42 பின்னூட்டங்கள்


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blog Stats

  • 32,763 hits

 

நவம்பர் 2010
தி செ பு வி வெ ஞா
« அக்   Dec »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Follow

Get every new post delivered to your Inbox.