Archive for December, 2010

பாயாசம் 13/12/10

                                குளிர் காலம் ஆரம்பித்துவிட்டது இங்கு. எப்போதுமே climate change ஆகும்போது அழையா விருந்தாளியா சளி காய்ச்சல் எல்லாம் கூடவே வருவது வாடிக்கை. ஆனா அடிக்கடி antibiotic எடுத்து கொள்வதும் உடம்புக்கு நல்லதல்ல என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதனால் கொஞ்சம் precaution எடுத்து கொண்டால் சளி காய்ச்சல் வருவதை நாம் ஓரளவுக்கு தடுக்கலாம்.

   புதினா , மல்லி இலை, சிறிது இஞ்சி (குழந்தைக்களுக்கு ரெம்ப காரம் வேண்டாம்)  மூன்றையும் மிக்ஸியில் போட்டு அடித்து juice எடுத்து, தேவைக்கு சிறிது தேனும் கலந்து கொடுத்தால் , சளி காய்ச்சல் எல்லாம் கொஞ்சம் தூரமாக நிற்கும். சாதாரணமாக வாரத்தில் மூன்று நாட்கள் இந்த மாதிரி சீசனில் கொடுப்பது நலம்.

   தேன் என்று சொல்லும் போது ஒரு விஷயம் நியாபகத்திற்க்கு வருகிறது. விளம்பரம் எல்லாம் தேனாக தான் கொடுக்கிறார்கள். ஆனால் சில விஷயங்களை செய்தி தாள்களில் படிக்கும் போது பயமாக இருக்கிறது.
 
    நிறைய நல்ல பிராண்டு தேன்களில் அளவுக்கதிகமாக harmfull antibiotic கலந்திருக்கிறதாம். தேனீக்களின் வளர்ச்சிக்காகவும், தேன் உற்பத்தியை பெருக்குவதற்காகவும் இதை தேனீக்களுக்கு கொடுக்கபடுகிறது. இதை தொடர்ந்து அருந்தினால் லிவர் கிட்ணி எல்லம் பாதிக்கப்படும் என்று நிருபித்திருக்கிறார்கள்.  சுத்தமானதை தேர்வு செய்வதோடு அளவாகவும் உபயோகிப்பது நமக்கு நலம்.

************************

  அடிக்கடி சுற்றுலா செல்லும் மாணவர்கள் ஏரியிலோ, கடலிலோ அல்லது ஆற்றிலோ விழுந்துவிட்டார்கள் என்ற செய்தி வரும் போது மனதிற்க்கு ரெம்ப கஷ்டமாக இருக்கும். நல்லா நீச்சல் தெரிந்திருந்தாலும் பழக்கமில்லாத ஆற்றிலோ குளத்திலோ  குளிக்க நேர்ந்தால் , முதலில் அங்குள்ளவர்களிடம் அதை விசாரிப்பது நல்லது. டைவ் அடிகும் போது, அதன் ஆளத்தோடு அங்கு  பாறை, கல் அல்லது கான்கிரீட் ப்ளாக் என்று ஏதாவது இருக்கின்றதா என்று ஒரு தடவை உறுதி படுத்திகொள்வதும் நல்லது.

*****************************

எங்களுக்கு வருஷத்தில் நான்கு நாள் அவசர விடுப்பு எடுத்து கொள்ளலாம்.ஏற்கனவே மூன்று நாட்கள் எடுத்து விட்டதால் , ஒரு நாளை பத்திரமாக மூன்று மாதங்களாக பூதம் காப்பது போல் காத்து வைத்திருந்தேன். சரி இந்த வருஷம் தான் முடிய போகுதே.. அதை எடுக்கலாம் என்று போய் கேட்டால்.. என்னுடைய papersஐ பார்த்துவிட்டு ” உங்களுக்கு நான்கு நாட்கள் இருக்கிறதே… ஏன் ஒரு நாளும் எடுக்கவில்லையா? ” என்று கேள்வி பதிலாக வந்தது. ( இப்படி தான் வேலை பார்க்க வேண்டும் என்று மனதிற்க்குள் பாராட்டி கொண்டேன்) நோ பொறாமை please :)

December 13, 2010 at 10:51 மு.பகல் 41 பின்னூட்டங்கள்


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blog Stats

  • 32,763 hits

 

December 2010
தி செ பு வி வெ ஞா
« நவ   மே »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Follow

Get every new post delivered to your Inbox.