Archive for மே 27, 2011

இனி ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும்

                                ஒருவழியா நாங்களும் குவைத்துக்கு குட்பை சொல்லிவிட்டு  இந்தியா வந்தாச்சி. நானும் செட்டில் ஆனப்பிறகு எழுத ஆரம்பிக்கலாம் என்று நினைத்தால்… அது ஆகிற கதையா தெரியவில்லை.. அதனால் நீங்க என்னை மறக்கிறதுக்கு (ஆமா நீங்க யாரு?) முன்னால ஒரு ஆஜர் போட்டுவிட்டு போகலாம்ன்னு வந்தேன்.
   

     அங்கு இருக்கும் போது எதற்கெடுத்தாலும் அவர் வாலை பிடித்து கொண்டு பின்னாடி திரிந்தே காலத்தை கடத்திவிட்டேன்,  இங்கோ… எல்லாம் தலை கீழ் வீடு பார்க்கணுமா .. பாப்பாவுக்கு அட்மிஷனா… எல்லாவற்றிர்க்கும் நான் தான் அலைய வேண்டியதாக இருக்கிறது :( .  இருந்தாலும்   இந்தியா இந்தியா தான் .

      இப்போது மலையாள நாட்டில் இருப்பதால் இனிமேல் ஆரஞ்சு இல்ல… ஓரஞ்சாக்கும்  . கண்மணி தான் பாவம் இங்கு மலையாளம் கட்டாயம் படிக்கவேண்டும் என்பதால்…மலையாள எழுதுக்களை(எழுத்தா அது? ஏதோ  படம் மாதிரி இருக்கு)  வரைந்து தள்ளிகொண்டிருக்கிறாள் அழுதபடி.

      குவைத்தை நான் மிஸ் பண்ணாவிட்டாலும் …  என்னை இத்தனை வருடங்களாக சகித்து கொண்டிருந்த நண்பர்களை  கண்டிப்பாக மிஸ் பண்ணுகிறேன்.  எனக்கு அங்கு ஒரு ராசி இருந்தது ..ஒருத்தருடன் நன்றாக பழகிவிட்டால் போதும் உடனே அவங்க ஊரை காலிபண்ணிவிடுவார்கள். அதையும் மீறி இரண்டு தெய்வபிறவிகள்   எனக்கு நல்ல தோழிகளாக இருந்து காப்பாத்தினாங்கண்ணா அவங்கள எப்படி மறக்க முடியும்.

கிரேஸ்  : குவைத்தில் காலடி வைத்த தினத்தில் இருந்து எனக்கு இவங்க பழக்கம். ரெம்பவும் கடவுள் பக்தி உள்ளவங்க. ரெம்ப நல்ல குணமும் , பாசமும் உள்ளவங்க .. இப்படி எனக்கு இல்லாத அத்தனை குணத்துடன் எப்படி எனக்கு தோழியா இருந்தாங்கன்னு எனக்கு இப்பவும் ஒரு சந்தேகம் தான். சந்தோஷாமோ துக்கமோ எதுனடந்தாலும் எனக்கு நல்ல moral supportஆ இருந்தவங்க.I miss you Akka.

Jeno : எனக்கு கால் வலி வந்து கஷ்டப்பட்ட காலத்தில் தான் இந்த அம்மா கூட பழக்கம் ஏற்ப்பட்டது. வலியாவது புலியாவது என்று என்னை மிரட்டி சிரி சிரி என்று சிரிக்க வைத்து என்னை பாடாய் படுத்தியவர்கள். முக்கியமாக எனக்கு ஒரு பதிவையும்   ( தியேட்டர் கலாட்டா  ) எழுதி தந்தவங்க  . சும்மாவே கெக்கே பிக்கேன்னு சிரித்து கொண்டிருக்கும் எனக்கு .. இப்படி ஒரு ஆள் கிடைத்தால் சொல்லவா வேண்டும். I miss your happy face Jeno.

மே 27, 2011 at 6:26 பிற்பகல் 25 பின்னூட்டங்கள்


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blog Stats

  • 32,763 hits

 

மே 2011
தி செ பு வி வெ ஞா
« Dec   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Follow

Get every new post delivered to your Inbox.