Archive for அக்டோபர், 2011
கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.
திருச்சியில் நான் கண்மணியிடம் “நான் படித்த காலேஜ் கண்மணி இது”
“ம்… இப்ப உங்க டீச்சர் எல்லாரும் உள்ள இருப்பாங்களாம்மா”
“ஆமா”
“அப்ப நாம உள்ள போலாமா?”
“எதுக்குதும்மா?”
என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான் “
**************************
கண்மணி என்னிடம் தீவிரமாக வழக்கடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் கேட்டுவிட்டு “கொஞ்ச நேரம் அமைதியா வரம்மாட்டியா நீ. தக்னூண்டு இருந்து கொண்டு என்ன பேச்சு பேசிற ” என்று அதட்டினேன்.
“அப்ப நான் பேசக்கூடாதா? நீங்க மாத்திரம் தான் பேசலாமோ”
“ஆமா”
“ஏன் நீங்க மாத்திரம் என்ன பெரிய வீராங்கனையோ?”
“ஆமா”
திடுதிடுன்னு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மரத்தின் பக்கத்தில் போய் உற்று பார்த்துவிட்டு , ” இங்க பாரும்மா… தக்னூண்டு இருக்கிற எறும்பு எப்படி குடுகுடுன்னு மரத்தில் ஏறுதுன்னு………. அது மாதிரி நீங்க ஏறுங்க பாப்பம்“
கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.

அண்மைய மறுமொழிகள்