கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.
அக்டோபர் 27, 2011 at 6:34 மு.பகல் 18 பின்னூட்டங்கள்
திருச்சியில் நான் கண்மணியிடம் “நான் படித்த காலேஜ் கண்மணி இது”
“ம்… இப்ப உங்க டீச்சர் எல்லாரும் உள்ள இருப்பாங்களாம்மா”
“ஆமா”
“அப்ப நாம உள்ள போலாமா?”
“எதுக்குதும்மா?”
என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான் “
**************************
கண்மணி என்னிடம் தீவிரமாக வழக்கடித்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் கேட்டுவிட்டு “கொஞ்ச நேரம் அமைதியா வரம்மாட்டியா நீ. தக்னூண்டு இருந்து கொண்டு என்ன பேச்சு பேசிற ” என்று அதட்டினேன்.
“அப்ப நான் பேசக்கூடாதா? நீங்க மாத்திரம் தான் பேசலாமோ”
“ஆமா”
“ஏன் நீங்க மாத்திரம் என்ன பெரிய வீராங்கனையோ?”
“ஆமா”
திடுதிடுன்னு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மரத்தின் பக்கத்தில் போய் உற்று பார்த்துவிட்டு , ” இங்க பாரும்மா… தக்னூண்டு இருக்கிற எறும்பு எப்படி குடுகுடுன்னு மரத்தில் ஏறுதுன்னு………. அது மாதிரி நீங்க ஏறுங்க பாப்பம்“
கடவுள் தான் என்னை காப்பாத்தணும்.
Entry filed under: கண்மணியின் பூங்கா, ரசித்தவை. Tags: .
18 மறுமொழிகள் Add your own
மறுமொழி இடுக
Trackback this post | Subscribe to the comments via RSS Feed

1.
Karthikthik | 6:36 மு.பகல் இல் அக்டோபர் 27, 2011
hahahah
2.
குந்தவை | 6:43 மு.பகல் இல் அக்டோபர் 27, 2011
Thanks for ur smile Karthik.
3.
skulandaiswamy | 7:32 மு.பகல் இல் அக்டோபர் 27, 2011
akka… kanamani irukkum varai engalukku kavalai illai… niraya post varum…. vazga kanmani vakarga aval kurumbu
4.
குந்தவை | 4:16 பிற்பகல் இல் அக்டோபர் 27, 2011
//vazga kanmani vakarga aval kurumbu
ஆகா.. அதுக்காக இப்படியா உசுப்பேத்தி விடுவாங்க.
5.
kanagu | 7:24 பிற்பகல் இல் அக்டோபர் 27, 2011
/*இங்க பாரும்மா… தக்னூண்டு இருக்கிற எறும்பு எப்படி குடுகுடுன்னு மரத்தில் ஏறுதுன்னு………. அது மாதிரி நீங்க ஏறுங்க பாப்பம்*/
எப்படி க்ரக்டா கேட்டாங்க பாருங்க கண்மணி
அருமை
அப்பப்ப எழுதுங்க அக்கா
6.
குந்தவை | 3:43 மு.பகல் இல் அக்டோபர் 28, 2011
//எப்படி க்ரக்டா கேட்டாங்க பாருங்க கண்மணி
ஒண்ணுமே பேசமுடியல
//அப்பப்ப எழுதுங்க அக்கா
ஏகப்பட்ட சோம்பேறித்தனம் வந்திடுச்சி
7.
Priyamudan Prabu | 11:20 மு.பகல் இல் அக்டோபர் 31, 2011
8.
குந்தவை | 1:25 பிற்பகல் இல் அக்டோபர் 31, 2011
Thanku Prabhu
9.
priya | 5:48 பிற்பகல் இல் அக்டோபர் 31, 2011
//என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான் //
கண்மணி ! அடுத்த தடவை போகும் போது எங்களுக்கு சொல்றியா ! நாங்களும் டீச்சர் கிட்டே உன்ற அம்மாவை பத்தி சொல்ல வேண்டியது நிறையாவே இருக்கு
10.
அப்பாவி தங்கமணி | 2:23 பிற்பகல் இல் நவம்பர் 1, 2011
ha ha ha…super…sabaash sariyaana potti…;))))
11.
kathirmuruga | 11:46 மு.பகல் இல் நவம்பர் 2, 2011
ஒரு நிமிடம் என்னை
குழந்தைகள் உலகில்
நனைந்தூற வைத்துவிட்டீர்கள்.
நன்றி
12.
குந்தவை | 12:36 பிற்பகல் இல் நவம்பர் 2, 2011
வாங்க பிரியா…
//நாங்களும் டீச்சர் கிட்டே உன்ற அம்மாவை பத்தி சொல்ல வேண்டியது நிறையாவே இருக்கு
அடேங்கப்பா…. ஒரு முடிவோடதான் இருக்கீங்க…
13.
குந்தவை | 12:39 பிற்பகல் இல் நவம்பர் 2, 2011
//ha ha ha…
Super smile
சிரிக்கும் போது என்னமா அழகாயிருக்கீங்க!
14.
குந்தவை | 12:40 பிற்பகல் இல் நவம்பர் 2, 2011
//ஒரு நிமிடம் என்னை
குழந்தைகள் உலகில்
நனைந்தூற வைத்துவிட்டீர்கள்.
ரசித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி.
15.
Anbu | 5:15 பிற்பகல் இல் December 8, 2011
ஹீ ஹீ ஹீ.. உண்மையிலேயே கண்மணி செம cute..
///என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு ” நீங்க பண்ணுற சேட்டையெல்லாம் உங்க டீச்சர் கிட்ட சொல்லி கொடுக்கதான்
அவ்வளவு சேட்டையா பண்ணறீங்க??
//ஏகப்பட்ட சோம்பேறித்தனம் வந்திடுச்சி
same blood..
16.
வியபதி | 3:53 மு.பகல் இல் December 14, 2011
ரசிக்கும் படியாக எழுதும் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் படிக்க நாங்க இருக்கோம்
17.
குந்தவை | 6:20 மு.பகல் இல் December 14, 2011
வாங்க தம்பி.
//ஹீ ஹீ ஹீ.. உண்மையிலேயே கண்மணி செம cute..
நன்றி.
உங்களுக்கே தெரியும் நான் ரெம்ப நல்ல பொண்ணுன்னு. அப்புறமும் இப்படி கேள்வி கேட்கலாமா?
18.
குந்தவை | 6:21 மு.பகல் இல் December 14, 2011
//தொடர்ந்து எழுதுங்கள் படிக்க நாங்க இருக்கோம்
அநியாயத்துக்கு நல்வங்களா இருக்கீங்களே?