Posts filed under ‘சமையலாம் …’

குணியாரம்

                  கண்மணி திடீரென்று எதாவது செய்து தாம்மா என்று கேட்கும் போது இந்த ஐட்டத்தை தான் செய்து கொடுப்பேன்.

               பெயரை பார்த்தவுடன் பயந்து விடாதீர்கள்… நான் குழிப்பணியாரம் என்று செய்து கொடுப்பதை , அம்மையார் அழிச்சாட்டியமாக இப்படி தான் அழைப்பாள். 

                  இந்த ருசிக்கு இந்த பெயர் போதும் என்று நினைத்தாளோ அல்லது நான் குத்து மதிப்பாக செய்துதருகிறேன் என்பதை அறிந்ததாலோ (எப்படி கண்டுபிடிச்சா?) என்னமோ இப்படி ஒரு பெயரை வைத்துவிட்டாள். போகட்டும் சிறு பிள்ளை.

   பின்னே திடீரென்று கேட்டால் நானும் தான் என்ன பண்ணுவேன்( இல்லாங்காட்டியும்…….). வீட்டில் இருக்கும்

 இட்லி/தோசை மாவை எடுத்து,

அதில் வெல்லம் அல்லது கருப்பட்டி ,

ஏலக்காய்,

சிறிது தேங்காய்,

ஒரு spoon எள்ளு சேர்த்து…

குழிப்பணியாரச்சட்டியில் சுட்டு கொடுப்பேன்

( இப்படியும் மொக்கை போடலாம் என்று தெரியும்.,

ஆனா குழிப்பணியாரம் இப்படி செய்யலாமா?).

மே 25, 2010 at 5:10 மு.பகல் 27 பின்னூட்டங்கள்


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blog Stats

  • 32,763 hits

 

மே 2012
தி செ பு வி வெ ஞா
« அக்    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Follow

Get every new post delivered to your Inbox.