Posts filed under ‘படித்தவை’
குழந்தை வளர்ப்பு
குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக் கொள்கிறது.
கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.
அவமானப் படுத்தப்படும் குழந்தை பொறாமையை கடைபிடிக்கிறது.
புகழப்படும் குழந்தை மெச்ச கற்றுக் கொள்கிறது.
பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.
நட்போடு வளர்க்கப்படும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.
வேதத்தை தினமும் வாசிக்க கற்று கொடுக்கப்படும் குழந்தை உலகத்தை ஜெயிக்க கற்று கொள்கிறது
எப்பவோ டைரியில் எழுதிவைத்தது. வாசிக்க நல்லாத்தான் இருக்குது. நடைமுறையில் கொஞ்சம் கஷ்டம் தான்.
டைரி குறிப்பிலிருந்து —-1
எங்கோ படித்து எப்பவோ எழுதிய டைரி குறிப்பிலிருந்து……………..
துன்ப பறவைகள் உங்கள் தலை மேல்
வட்டமிடுவதை தடுக்க முடியாது,
ஆனால் அது உங்கள் தலை மேல்
கூடு கட்டாதபடி தடுத்து கொள்ள முடியும்.
———–சீன பழமொழி.
அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
வீடா? குட்டி சுவரா?
சமீபத்தில் படித்தது……
வாரியார் நெற்றியில் திருநீறு இடுவதை பார்த்த ஒரு சிறுவன்
” சாமியார் நெற்றியில வெள்ளை அடிக்கிறாரு டோய் ” என்று கேலி செய்தான்.
அதை கேட்ட வாரியார், ” தம்பி இங்கே வா. வெள்ளை, வீட்டுக்கு அடிப்பாங்களா அல்லது குட்டி சுவருக்கு அடிப்பாங்களா? ” என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.
” வீட்டுக்கு தான் அடிப்பாங்க. “
“நான் என்னுடய உடம்பை கடவுள் குடியிருக்கும் வீடாக நினைப்பதால் , வெள்ளை அடிக்கிறேன் . நீயும் அப்படி நினைத்தால் வெள்ளை அடித்துக்கொள் . எப்படி ?” என்றார்.
” நானும் கடவுள் குடியிருக்கும் வீடு தான் ” என்று திருநீறு பூசிக் கொண்டானாம் அந்த சிறுவன்.
கவிதை என்றால் என்ன?
சமீபத்தில் படித்து ரசித்த பாடல் இது
அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே கவிதை என்ப்படும்.
கவிதை என்பது கற்பனை உள்ளது;
கூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் ஒன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும்; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!
——–நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
வெற்றி ரெம்ப சுலபமாமே!
சமீபத்தில் படித்தது இது
“Success is simple, Do what’s right, the right way, at the right time”
Do what is right by discovering your true purpose in life.
Do it the right way by learning from the best.
Do it at the right time by taking small actions and preparing yourself to seize opportunity when it presents itself.
அப்படீன்னு வெற்றிக்கு ரகசியத்தை எழுதியிருக்கார்.
Can success be that simple?
He has written as though we can discover the purpose of life in discovery channel.நமக்கு, நம் பிள்ளைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு.. சாப்பிடுவதற்கு சொத்து சேர்ப்பதற்கே நேரம் பத்தல்ல.அதுக்கெல்லாம் எங்க நேரம்…ம். ஆரம்பமே கஷ்டமாயிருக்கு.


அண்மைய மறுமொழிகள்