Posts filed under ‘Awards’
சுவாரசியமா எழுதுவாங்களே…….
நான் ஊருக்கு போயிருந்த கேப்புல , டுபுக்கு அண்ணா என்னிய சுவாரஸ்யபதிவர் பட்டியல்ல பெரிய மனசு பண்ணி கோத்துவிட்டிருந்தார். அண்ணாச்சிக்கு ரெம்ப நன்றி. இப்ப நானும் நல்ல பிள்ளையா (எனக்கு ரெம்ப அறிமுகம் இல்லாத ) நாலு பேரை அறிமுகபடுத்தனும் இல்ல, தேடிப் பார்த்தா நிறைய பேரு அநியாயத்துக்கு அழகா எழுதி தள்ளி இருக்காங்க. மேலும் எல்லோரும் என்னை விட பதிவுலகிற்க்கு ரெம்பவே பழக்கமானவங்க தான்.
1. இளவஞ்சி : இவருடைய பதிவுகளை படித்து கொண்டிருந்த போது, என்னுடன் வேலை பார்ப்பவர், ‘நீங்க தனியா சிரிக்கவேயில்லை’ என்று கிண்டல் பண்ணுகிற அளவுக்கு சிரித்துவிட்டேன். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிக்கும் படியான கமெண்டுடன் கலக்கி இருக்கிறார்.
2. ஜவகர் : இவருடைய பதிவுகளை நான் நிறைய வாசித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். எப்படி தினமும் இவரால் எழுத முடிகிறது என்பது தான் எனக்கு புரியாத புதிர். ம… அதுக்கெல்லாம் ‘இது’ வேணும்.
இவங்க ரெண்டுபேரும் எனக்கு ரெம்ப அறிமுகம் தான்:
1. ஜானு : கதை, கவிதை, சமையல், ஆன்மீகம் என்று எதையும் விட்டுவைக்காமல் ரவுண்ட் கட்டி எழுதுபவர். படிச்சிபாருங்க.
2. நெஜம்மாவே நல்லவன் : நெஜமாவே நல்லவரோ இல்லியோ.. ஆனா நெஜமாவே சுவாரஸ்யமாக எழுதுபவர்.
சரி நீங்களும் மறக்காம நிறைய பேரை அறிமுகபடுத்துங்க.
பட்டாம்பூச்சி விருது.

“Coolest Blog I ever Know” அவார்ட் கொடுத்த மோகனுக்கு நன்றி. (என்ன தகுதி? என்று கேள்வி கேட்பவர்கள் வன்மையாக கண்டிக்கபடுவார்கள். )
இந்த அவார்டை நான் பெட்டிக்குள்ள வச்சி பூட்டிவைக்காம மூன்று பேருக்கு கொடுக்க வேண்டும் என்பது விதி.
1. ஸ்ரீராம் : பேருதான் இங்கிலீஸ்காரன். மற்றபடி நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். நல்ல சிரிக்கலாம்.பொழுது போக்கிற்காக எழுதினாலும், உருப்படியான பதிவுகளையும் எழுதுவார்.
2. பிரபு : ரெம்ப நல்லா கவிதை எல்லாம் எழுதி கலக்கிகொண்டிருக்கிறார். எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் இன்னும் பல கவிதைகளை எழுத வாழ்த்தி இந்த விருதை வழங்குகிறேன். எனக்கு ரெம்ப பிடித்த இந்த கவிதையை (காலெண்டர் முருகனும் காதல் மனைவியும் ) நீங்களும் படித்து பாருங்களேன்.
3. புவனேஷ் . என்ன எழுதினாலும் ஓடி வந்து பாராட்டி என்னை தொடர்ந்து எழுத வைத்த பாசமுள்ள தம்பி . அதனால என்னை திட்டவேண்டும் என்றால் புவனேஷை திட்டிக்கொள்ளுங்கள். (பாசக்கார தம்பியில்ல அதனால எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிகொள்வார்)
எல்லோரும் மொக்கை பதிவு தான் எழுதுவாங்க, ஆனா நம்ம புவனேஷ் தம்பி ப்ளாகே என் ப்ளாக் மாதிரி மொக்கை பிளாக் தான். இது விருதை வழங்குவதற்குள்ள கூடுதல் தகுதி.
எல்லோரும் கைதட்டுங்கப்பா. விருது வாங்கினவங்க அதை துருபிடிக்க வைக்காமலும், தூக்கிபோடாமலும் மூணு பேருக்கு பகிர்ந்து கொடுங்கப்பா.
சரி, இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.
குந்தவை <—–
அணிமா <—-
ராகவன் <—-
ரம்யா <—-
பூர்ணிமா <—-
விஜய் <—–
திவ்ய பிரியா <——
Gils/Shanki—->
பிரியா –>
Kartz—->
Akansha—->
Infinity—->
Simple Elegant Girl —- >
Empty Streets—–>
The Blog Reviewer—>
biotecK—->
KisAhberuang—->
blogscope >>>>>>
Blogging friends forever award
எனக்கு அவார்ட் கொடுத்த முகுந்தனுக்கு நன்றி.
நானே புதுசு, எனக்கு ரெம்ப நண்பர்கள் எல்லாம் கிடையாது. இருக்கிற நண்பர்கள் எல்லாரும் அவார்ட் வாங்கிட்டாங்க.(சேவியர் அண்ணாச்சி முந்திகிட்டாக) என்ன செய்ய , அதனால அவார்ட் கொடுத்து நண்பர்களை உருவாக்கலாம் என்ற ஐடியாவுடன், நம்ம தெருவுல ஒரு வலம் வந்து கொஞ்ச பேரை பிடித்துவந்திருக்கிறேன்.
1. மோகனின் எண்ணங்கள் - காமடி, நக்கல், யதார்த்தம் எல்லாவற்றையும் கலந்து வைத்திருக்கிறார்.
2.கடகம் -விதவிதமாக படம் போட்டு கலக்குவார்.
3. ரதி மகேஷ்வரன் - நிறைய சமையல் குறிப்புகளுடன் வந்து பசியை கிளப்புகிறார்.
அவார்ட் வாங்கியிருநதாலும், என் கையாலும் இவர்களுக்கு அவார்ட்,
1.சேவியர் - கவிதைகளும், அவசியமான கட்டுரைகளும் நிறைந்து காணப்படும் பகுதி. கவிதையின் அழகிலே மயங்கி நிறைய பேரு அவருடைய பக்கத்தை மொச்சிக்கிட்டிருப்பாய்ங்க.
2. விஜய் கோபால்சுவாமி - நல்ல நகைச்சுவை உணர்வுடைய தம்பி.
எல்லாரும் ஒருக்கா பலம்மா கைதட்டுங்க, பார்க்கலாம்.
ஸ்…..அப்பாடி அவார்ட் கொடுக்கறதுன்னா சும்மாவா …

அண்மைய மறுமொழிகள்