கனவு சீன்

மே 6, 2008 at 9:00 முப 1 மறுமொழி

எங்க ஊருத்திருவிழா நெருங்க, ஊரே களைகட்டி போச்சுங்க. எதனாலன்னு கேளுங்க? அதுதான் எங்க ஊரு கலைபுலிகள் எல்லாம் சேர்ந்து நாடகம் போடுகிறார்களாம். ரெம்ப யதார்த்தமாக தெரியவேண்டும் என்பதால் ஒரு நாடக கம்பனியிலிருந்து பொண்ணுகளை கூப்பிட்டிருந்தார்கள்(நடிப்பதற்க்குதான்).

ஒரு மாதமாக பயங்கர பயிற்சி, சும்மா கண்ணுமண்ணு தெரியாம உழைத்தார்கள். இப்படி ஒரு நாடகமான்னு? எல்லாரும் கண்ணுகொட்டாம பாக்கணுமில்ல..கலைபுலிகளுக்கு கடுமையான வாய்க்கட்டுபாடு வேற (யாரும் கதையை வெளியிட்டுர கூடாதின்னு). அதில் கல்யாணம் ஆனவர்களும் அடக்கம்.

அடிக்கடி குஷ்தியும் நடந்தது(டூயட் ஆட) அப்புறம் கனவு சீன் எல்லாம் வைத்து எல்லாருடைய திறமையும் காட்டுவதற்க்கு கதையை மாற்றிக்கொண்டார்கள்.

அவங்களோட அலம்பல் தாங்கமுடியவிட்டாலும், சரி எப்படித்தான் நடிக்கிறார்கள் என்று நாங்களும் காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது, நாங்களும் எங்க பங்குக்கு நிறைய கல்லையும் பொறுக்கிக்கொண்டு பெரியகும்பலாக மைதானத்தில் போய் உட்கார்ந்துகொண்டோம்.

நாடகம் ஆரம்பித்தது, ஏதோ நடித்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று
“வெட்கம் கெட்ட மனுஷன்.  ———–” என்று கரிச்சிகொட்டர சப்தம் வந்தது.உத்து பார்த்தால் மேடையில் நடித்துகொண்டிருந்த கதாநாயகனின் மனைவி.

(ஆகா.. நாடகம் என்ன பெரிய நாடகம் நமக்கு வேண்டியது இதுதானே?)
கதநாயகன் கதாநாயகியை தொட்டு நடிக்கும் ஒவ்வொரு சீனுக்கும் இங்கு ஒரு பெரிய புயலே வீசியது. எங்களுக்கு சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது.

கடைசியில், கனவு சீனில் நாயகியோடு ஒரு டுயட். இதற்கு என்ன சொலப்போகிறார் என்று காதைதீட்டிவைத்தோம்.
“________ என்னமா ஆடுற. இது கனவு சீனா போச்சு அதனால நீ பொழச்ச. இது மாத்திரம் நிசமா இருந்திருக்கணும், இப்பவே வந்து கால வெட்டிபோட்டிருப்பேன்”

இப்பவும் அந்த அம்மாவை பார்க்கும் போது எனக்கு அந்த வசனம் தான் நினைவில் வரும்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

கண்மணியும் குரங்கும். சு. மாமா

1 பின்னூட்டம் Add your own

  • 1. Jeya Pathrose  |  6:49 பிப இல் மே 13, 2008

    It is nice to see my little sister writing so well. Enjoyed well. Keep it up.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,191 hits
மே 2008
தி செ பு விய வெ ஞா
    ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: