ஜவ்வரிசி வடை

மே 8, 2008 at 9:15 முப 4 பின்னூட்டங்கள்

எனக்கு சமையல் பண்ணுவதற்க்கு எப்பவாவது பிடிக்கும். என் வயசில் உள்ளவங்க எல்லாம் விதவிதமாக சமையல் பண்ணி அசத்த, நான் மட்டும் அதே சாம்பாரும், ரசமும், பொரியலும் செய்து தலைவரோட நாக்கை பாலைவனமாக்கியிருந்தேன்.

இன்றைக்கு ஏதாவது புதுசா பண்ணலாமேன்னு அடுப்பங்கரையில் சமையல் புத்தகத்தோடு நுளைந்து, வீட்டில் இருந்த பொருட்களையும், தேவையானவற்றையும் சரிபார்த்து கடைசியில் ஜவ்வரிசி வடை செய்யலாம் என்று முடிவுசெய்தேன்.

வேகவேகமாக அரைத்து, நறுக்கி வடையை ஒருவழியாக தட்டி, வாணலியில் மூன்று  வடையை போடவும் அழைப்பு மணியோசை  கேட்டது. தலைவருக்கு  ஸர்ப்ரைஸ் கொடுக்கபோகிறோம் என்று சந்தோஷத்தில் ஒடிப்போய் கதவை திரந்ததுதான்,

“டாம்…. டொப்….ட்ஷ்யூம்………”ன்னு சத்தம்.

என் முகம் பயத்தில் இருண்டு போனது.

தலைவர் சப்தத்தில் கலவரமாகி “என்ன சத்தம்? அடுப்பில் ஏதாவது வைத்தாயா?”

“ம்ம்…..ஒண்ணுமில்ல.. சும்மா….வடை தான் சுட்டு பார்த்தேன்….”
என்னை ஒரு முறை முறைத்துவிட்டு , அடுப்பை அணைத்துவிட்டு வந்து என்னை உள்ளே போகச்சொன்னார்.

அடுப்பங்கரையே எண்ணையால் அபிஷேகம் பண்ணபட்டிருந்தது.
உள்ள்ப்போய் சட்டிய பாத்தா மூணையும் காணவில்லை.
அண்ணாந்து பாத்தா, மூலைக்கொண்ணா ஒக்காந்து என்னிய பார்த்து சிரிச்சிக்கிட்டுருக்கு.

அப்புறம் என்ன வழக்கம் போல் எனக்கு ரெம்ப பாராட்டுகிடைத்தது(?).

Advertisements

Entry filed under: ரசித்தவை.

பழிக்குப்பழி ஈரமான ரோஜா (கதையில்லை நிஜம்)

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. kutti  |  8:48 முப இல் மே 9, 2008

  I used to enjoy these kinds of live comedy seens wirtten and directed by home makers now and then.

  Bye

 • 2. kunthavai  |  10:01 முப இல் மே 13, 2008

  எவ்வளவு ரிஸ்க் எடுத்து சிரிக்கவைக்கிறாங்க பாருங்க.

 • 3. Jeya Pathrose  |  6:39 பிப இல் மே 13, 2008

  Very nice and realististic. Keep it up.

 • 4. kunthavai  |  6:04 முப இல் மே 14, 2008

  என்ன (realistic)?
  உண்மையாக வடை சுட்ட கதைதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
மே 2008
தி செ பு விய வெ ஞா
    ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: