Archive for மே 21, 2008

மளிகைக்கடை விஜயம்

வேலை: PWDயில் , உப தொழில்: அரசியலை அலசி காயபோடுவது
இவைகளை தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்றிருந்த அப்பவை, ஒரு போதாதவேளையில்,
“இந்த வீட்டில் எல்லாவேலையும் நான் தான் பார்க்கவேண்டும். ஒருத்தருக்காவது பொருப்பு இருக்குதா? நானும் வேலைக்கு தான் போகிறேனென்று சும்மாயிருந்தால் வீட்டை யார் கவனிப்பார்கள்?” என்று அம்மா கடுகையும், அப்பாவையும் சேர்த்து தாளித்தால், வேறு வழியில்லாமல்

ஏதச்சும் சொல்லு முடிந்தால் செய்கிறேன்” என்றார் .

சந்தோஷத்தில் முகம் டாலடிக்க யோசனை செய்து,
லிஸ்டு தருகிறேன் ,மளிகை கடைக்கு போரீங்களா?”

சரி

எல்லாவற்றிலும் பொடி தான் வாங்கணும். சரியா?”

அதெல்லாம் கவலைப்படாதே எல்லாவற்றிலும் பொடி வாங்கிவிடுகிறேன்” என்று கிளம்பினார்.

மாலையில், ஒரு பெரிய சாதனை செய்த பூரிப்பில் “புஷ்(புஷ்பம்) இங்க வந்து எல்லாவற்றையும் சரி பாத்துக்கோ
என்றபடி லிஸ்டில் உள்ளதை அவரே வாசித்து , பையிலிருந்து வெளியே எடுத்தார்.

“மல்லிப்பொடி………ம்”
“சீரகப்பொடி………ம்”
கடுகு………..ம்..இதுக்கு பொடி தரமாட்டேனுட்டான். வேறு கடையிலாவது வாங்கி கொடுப்பான்னு கேட்டேன். எங்கேயும் கிடைக்காதுன்னு சொல்லிட்டான். சரின்னு கடுகை முழுசா வங்கிட்டேன் ” என்று பரிதாபமாக சொன்னார் (எங்களுக்கு இது போதாதா ?).

மே 21, 2008 at 4:28 முப பின்னூட்டமொன்றை இடுக


பக்கங்கள்

Blog Stats

  • 40,090 hits
மே 2008
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031