துருதுரு குழந்தையும்……………..

மே 26, 2008 at 8:14 முப 3 பின்னூட்டங்கள்

பேசி ரெம்ப நாள் ஆகிவிட்டதே என்று லதாவை தொல்லைபேசியில் அழைத்தேன். வழக்கமான குசலம் விசாரித்தபிறகு
“நான் நேற்று ஒரு தோழி வீட்டிற்க்கு போயிருந்தேன். எப்படி தான் பிள்ளைகளை வளர்த்தார்களோ, ஒரு நிமிடம் அந்த வீட்டிலுள்ள பையன் நடந்ததை நான் பார்க்கவில்லை குரங்காட்டம் ஒரே தாவலும், துள்ளலும், ஓட்டமும் தான்.  என் பையன் அவனை பார்த்து ஒரே அழுகை, எனக்கு எப்படா அங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது” என்று என்னிடம் பொரிந்து தள்ளினார்.

நான் சிரித்துவைத்தேன் (சிறு குழந்தைகளை திட்டுவது எனக்கு பிடிக்காத ஒன்று)  என்ன சொல்வதென்று தெரியாமல்.

” அவ்வளவு சேஷ்டையையும் சோபா மேல் அரங்கேற்றிக்கொண்டிருந்தான். அம்மாவோ, அப்பாவோ அவனை கண்டுக்கொள்ளவேயில்லை. நான் பொறுக்கமுடியாமல் கடைசியில் அவர்களிடம் கேட்டுவிட்டேன். என்னமோ அது ஒரு விஷயமே இல்லாத மாதிரி ‘அவன் அப்படித்தான்’ என்று முடித்துவிட்டார்கள். அதன் பிறகு, என்ன பேசுகிறது என்று நானும் இருந்துவிட்டேன்” என்று லதா ஆதங்கத்துடன் முடித்தார்.

எல்லாவீட்டிலும் சின்ன பிள்ளைகள் இப்படித்தானிருக்கும். பொழுதுபோகவேண்டாமா அவர்களுக்கு?” என்று சிரித்துவிட்டு வைத்துவிட்டேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு,

வெளியே போகவேண்டும் என்று வீட்டில் ரகளை பண்ணிக்கொண்டிருந்தாள் கண்மணி. எங்கு போகலாம் என்று யோசித்து ,பின் லதா வீட்டிற்கு சென்றோம். அவங்க புதல்வனை இப்போது KG-யில் சேர்த்திருந்தார்கள். ஓடி, தாவி, திடீரென்று என் மேலும், கண்மணி மேலும் பாய்ந்தும் விளையாடிக் கொண்டிருந்தான். கண்மணி என் மேல் பல்லி மாதிரி ஒட்டிக்கொண்டிருந்தாள்.

இவன் எப்போதும் இப்படிதான். ஒரு நிமிடம் சும்மாவே இருக்கமாட்டான். துருதுருவென்று எப்போதும் விளையாட்டு தான், சொன்னாலும் கேட்கமாட்டான்என்று பெருமிதம் பொங்க கூறினார்.

வழக்கம்போல் நானும் “எல்லாவீட்டிலும் சின்ன பிள்ளைகள் இப்படித்தானிருக்கும். பொழுதுபோகவேண்டாமா அவர்களுக்கு?” என்று பதிலளித்தேன்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

பொய் சொல்லாதீங்க…….. முட்டையோ முட்டை

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. bj  |  12:10 பிப இல் மே 27, 2008

    I also have the same experience since i also have a naughty son;

  • 2. சேவியர்  |  6:56 முப இல் ஜூன் 11, 2008

    எல்லாவீட்டிலும் சின்ன பிள்ளைகள் இப்படித்தானிருக்கும். பொழுதுபோகவேண்டாமா அவர்களுக்கு?” 🙂

  • 3. kunthavai  |  7:23 முப இல் ஜூன் 11, 2008

    வீட்டினுள் அடைகாப்பதற்கு நம்மளுக்கே எவ்வளவு கஷ்டமாகயிருக்கின்றது.அவர்களை எப்படி குற்றம் சொல்லமுடியும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 36,993 hits
மே 2008
தி செ பு விய வெ ஞா
    ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: