Archive for ஜூன் 18, 2008

பையன் யாரு?

நான் எம்.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் எனக்கு அந்த குறைபாடு இருப்பது தெரிந்தது. போர்டை பார்த்தால் ஏதோ வெள்ளை எறும்பு அணிவகுத்து நிற்பது மாதிரி தெரியும். கண்ணை எத்தனை வாட்டி கசக்கி விரித்து பார்தாலும் வேறு ஒன்றும்தெரியவில்லை. ஐயோ இந்த வயசிலேயே கண்ணாடி போடுவதா! ம் … வேண்டாம் என்று முடிவெடுத்து , என் தோழிகளின் நோட்ஸை படித்து, அடுத்த ஆண்டையும் கஷ்டப்பட்டு தள்ளிவிட்டேன்.

அப்புறமா சென்னை அடையாறில் வேலை கிடைத்தது. நம்ம ஊரில் என்றைக்கு பஸ்ஸை பேருந்து நிறுத்தத்தில் நிப்பாட்டுனாங்க. நானு பேருந்து பக்கத்தில் ஓடி எழுத்துக்கூட்டி வாசித்து முடிப்பதற்கு முன்னால் பேருந்து கிளம்பி விடும்.இப்படி குருட்டு கோழிமாதிரி அல்லல்பட்டபோதும், என்னுள் இருந்த சாத்தான் ‘என்ன ஆனாலும் சரி கண்ணாடி மட்டும் போட்டுடாதே’ என்று சொன்னதை கேட்தால் வந்தது வினை.

ஐந்து நாள் விடுப்பிற்கு ஊருக்கு சென்றிருந்தேன். சித்தி வீட்டிற்கு போகலாம் என்று கிளம்பினேன். தூரத்தில் யாரோ என்ணைப்பார்த்து சிரிப்பது தெரிந்தது, உத்து உத்து பார்த்தாலும் யாரென்று பிடிபடாததால் சிரிக்காமல் நடந்துகொண்டிருந்தேன். பக்கத்தில் வந்தபிறகு பார்த்தால் நம்ம ரத்தினம் அண்ணாச்சி. எனக்கு ரெம்ப சங்கடமாகிவிட்டது.
என்னம்மா ஏன் என்னை பார்த்து முறைச்சுகிட்டு வர்ர?” என்றார் .
இல்ல அண்ணாச்சி ஏதோ யோசனையில் இருந்தேன்என்று சமாளித்து வைத்தேன்.

அடுத்த நாள் அம்மாவுடன் கடைக்கு கிளம்பினேன். அன்றும் யாரோ என்னை பார்த்து சிரிப்பது தெரிந்தது. நமக்கு தெரிந்தவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்று நானும் ஈயென்று சிரித்தேன். பக்கத்தில் வந்தபிறகு தான் தெரிந்தது, அந்த பையனை நான் முன்னபின்ன பார்த்ததில்லையென்று. அடப்பாவி தெரியாத பொண்ணகூட பார்த்து  இப்படி சிரிப்பியா?  என்று மனதிற்குள் சபித்துவிட்டு, இஞ்சி தின்ன குரங்காட்டம் நான் அம்மாவை பார்த்தேன்.

“பையன் யாரு?” என்று கேட்டார்கள்.

தெரியாதும்மா

என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
தெரியும் என்று நினைத்தேன்” என்று வழிந்தேன்.

ஏதோ லூஸை பார்ப்பதுபோல் என்னிய திரும்பவும் பாத்தாங்க அம்மா.

அம்மா கடைக்கெல்லாம் இன்னொரு நாள் போகலாம் .இன்றைக்கு கண் டாக்டரை பார்க்கபோவோம்” .

ஜூன் 18, 2008 at 4:16 முப பின்னூட்டமொன்றை இடுக


பக்கங்கள்

Blog Stats

  • 40,090 hits
ஜூன் 2008
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30