நான் படிக்கணும்னு நினைக்கிறேன்

ஜூன் 22, 2008 at 5:29 முப 4 பின்னூட்டங்கள்

கண்மணி(two+years) படு சீரியஸாக கலர் பண்ணிக்கொண்டிருந்தாள்.
 
 “கண்மணி உன்னோட புக்கை படிக்கபோகிறேன்” என்றேன்.

 தலையை தூக்கி என்னை பார்த்து,
  “பார்த்து படிம்மா. புக்க கிழிச்சிடாதம்மா

(எனக்கேவா மகளே)
————————

நாய்குட்டி பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

அம்மா இது என்ன?

மூக்கு

இது?

வாய்

வாய்க்குள்ள என்ன இருக்கு

நாக்கு

பல்லு எங்கம்மா?

அது உன்னை கடிச்சிடகூடாது இல்ல அதனால கழட்டிவச்சுட்டாங்க. நீயும் யாரையாவது கடிச்சா உன்னோட பல்லையும் கழட்டிடுவாங்க. அதனால யாரையும் கடிக்ககூடாது சரியா?” (ரெம்ப கோபம் வந்தால் கடித்துவிடுவாள்)

நானு என்னோட பல்லை கழட்டி ஒளிச்சுவச்சிருவேனே” என்றாள் .

அப்படி இஷ்டத்துக்கு பல்லை கழட்டின பிறகு மாட்டமுடியாது கண்மணி. ஒருதடவை கழட்டினா அப்புறம் நீ பல்லில்லாமத்தான் திரியணும். அப்புறம் எல்லோரும் உன்னை பாட்டீன்னு தான் கூப்பிடுவாங்க தெரியுமா?

அப்போ இது குட்டி நாய் இல்ல , பாட்டி நாய்” என்று சிரித்தாள்.

(இவங்ககிட்ட  பேசுறதுக்கு தனியா நான் படிக்கணும்னு நினைக்கிறேன்)

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா. Tags: .

பையன் யாரு? பதில் பாட்டு

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. vijaygopalswami  |  6:54 பிப இல் ஜூன் 22, 2008

    உங்கள் மகளின் படத்தையும் போட்டிருக்கலாம். அத்துடன் அவள் வரைந்த படங்களையும் போட்டிருக்கலாம். பதிவின் அழகுக்கு அழகு சேர்ந்திருக்கும்.

  • 2. kunthavai  |  4:08 முப இல் ஜூன் 23, 2008

    //உங்கள் மகளின் படத்தையும் போட்டிருக்கலாம். அத்துடன் அவள் வரைந்த படங்களையும் போட்டிருக்கலாம். பதிவின் அழகுக்கு அழகு சேர்ந்திருக்கும்.

    //
    அடுத்த முறை கண்டிப்பாக சேர்க்கிறேன். கருத்துக்கு நன்றி.

  • 3. சேவியர்  |  7:31 முப இல் ஜூலை 8, 2008

    பிரமாதம்ங்க…. குழந்தைகளின் சேட்டைகளையும் உரையாடல்களையும் பதிவு செய்வது மிகவும் புதுமையாக இருக்கிறது. ஒத்த வயது குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு கூடுதால் மகிழ்ச்சி.

  • 4. kunthavai  |  4:58 முப இல் ஜூலை 9, 2008

    நன்றி அண்ணாச்சி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜூன் 2008
தி செ பு விய வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: