சைக்கிள்

ஜூலை 6, 2008 at 8:30 முப 3 பின்னூட்டங்கள்

எங்க மாமா ஒரு பழைய சைக்கிள் வச்சிருந்தார். அந்த சைக்கிள் எங்க தெருவுக்குள் நுழைந்தாலே எல்லோருக்கும் தெரிந்துவிடும், மாமா வருகிறார் என்று. அதையெல்லாம் கண்டுகொள்ளாமலும், எவ்வளவோ சொல்லியும் அந்த சைக்கிளை மாற்றாமலும், அதில் நகர்வலம் வந்துகொண்டிருந்தார்.

‘சைக்கிள் நல்லாதான் இருக்கு’ என்று அதற்கு சர்டிபிக்கேட் வேறு கொடுத்தார்.
அப்பாவிடம் எப்படி புது சைக்கிளுக்கு சம்மதிக்கவைப்பது என்று என் வீட்டுக்காரர்  மூழையை கசக்கிகொண்டிருக்க, உதவிக்கு வந்தார் ஒரு மரியாதைகுரிய திருடர்.

ஒரு சுபயோக தினத்தில், சுமார் இரவு பத்து மணியளவில், மாமா டீக்கடை முன்னால் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை யாரோ லவட்டி கொண்டு போய்யிருந்தார்கள்.

  சோகம் அப்பிய முகத்துடன் வந்த மாமாவை பார்த்தவுடன் எங்களுக்கு ஒரு பக்கம் கவலையாகயிருந்தாலும், சைக்கிளை எடுத்த சென்ற ஜீவனை நினைத்தால் அதை விட பரிதாபமாகயிருந்தது.

  சரி எப்படியோ , இனிமேலாவது புது சைக்கிள் வாங்க சம்மதிப்பாரே என்று நிம்மதியாக இருந்தோம். அடுத்த நாள்  வழக்கம் கடைக்கு சென்ற மாமாவுக்கு  ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அவருடைய சைக்கிள் அதே இடத்தில் நிருத்திவைக்கபட்டிருந்தது (விவரமான திருடன்).

இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் நான் அந்த சைக்கிளை  பழையது என்று எவ்வளவு டீசென்டாக வர்ணித்திருக்கிறேன் என்று.

பதிவின் வால்:

எங்க ஏரியாவிலே அது பெரிய காமடியாக இருக்க, அதன் பிறகும் பொறுமை காக்காமல் மாமாவிடம் புது சைக்கிள் வலுகட்டாயாமாக திணிக்கப்பட்டது.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

அழகுபெண்மணி கோபம்

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. முகுந்தன்  |  2:36 பிப இல் ஜூலை 6, 2008

    இன்னும் கொஞ்சம் நல்லவனாக இருந்தால் அவனே புது சைக்கிள் வாங்கி கொடிதிருப்பான் போலிருக்கிறது 🙂

  • 2. சேவியர்  |  7:26 முப இல் ஜூலை 8, 2008

    🙂 உங்க கிட்டே மருத்துவச் செலவுக்கு பணம் வாங்காத வரைக்கும் நல்லது 🙂 பேரீச்சம் பழ கடைக்காரன் கூடவா நிராகரித்தான் 😀

  • 3. kunthavai  |  4:43 முப இல் ஜூலை 9, 2008

    சைக்கிளை பார்த்து திருடனுக்கே பாவமாக இருந்திருக்கலாம்.

    (முக்கியமான ஒன்றை சொல்லமறந்துவிட்டேன் எங்க மாமா ஒரு முன்னாள் ராணுவ வீரர், பத்து வருஷமா பஞ்ஞாயத்து தலைவராக இருந்தவர். கடந்த தேர்தலில் தான் ஓய்வு தேவை என்று அவர் நிற்க்கவில்லை)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: