கோபம்

ஜூலை 14, 2008 at 4:09 முப 3 பின்னூட்டங்கள்

    என்னுடன் வேலை பார்க்கும் ஒரு மேஜர்,  ஒரு தீவிரமான செயின் ஸ்மோக்கர். ஏதாவது சந்தேகம் என்றோ, அல்லது ஏதாவது செக் பண்ணவேண்டும் என்றோ என்னை கூப்பிட்டால் நான் முடிந்த அளவு அவருடைய அறைக்கு செல்வதை தவிர்பேன். அப்படியே போனாலும், என் முகத்திலுள்ள கோபத்தையும், வெறுப்பையும் பார்த்து அவருக்கே பயம் வந்துவிடும்.

    அது என்னமோ புகை வாடையை முகர்ந்தாலே போதும் , எனக்கு அப்படி ஒரு கோபம் தலையில் ஏறி உக்காந்து கொள்ளும். எள்ளும், கொள்ளும் முகத்தில் வெடிக்க, புகை பிடிப்பவர்களை ரெண்டு மொத்து மொத்திவிடலாமா என்று கை பரபரக்கும்.

   சிறு வயதில், அப்பாவின் புகைபிடிக்கும் தோழர்கள் யாராவது வந்தால், வீட்டின் பின்கட்டில் போய் உக்காந்துப்பேன். ரெம்ப பழக்கமானவர்கள் வந்தால் வாசலிலே போய் “புகை பிடிப்பவர்கள் எங்க வீட்டிற்கு வரக்கூடாது” என்று அவர்களிடம் சண்டை போடுவேன்.

    சிலர் கண்டுகொள்ளாமல் விட்டாலும், ஒரு அண்ணாச்சி மாத்திரம் என்னை பார்க்கும் போதெல்லாம் “பாரு உனக்கு ஒரு செயின் ஸ்மோக்கர் தான் புருஷனா வருவான்” என்று சாபம் கொடுப்பார். எனக்கு எங்கள் வீட்டில் வரன் தேடும் போது , நிஜமாகவே அந்த சாபம் வந்து அவ்வப்போது  பயமுறுத்தும்( என்னை நினைத்து அல்ல , அப்படி ஒரு ஆள் வந்தால், என்கையில் மாட்டி சின்னாபின்னா பட்டுபோவாரே என்று தான்). ஆனால் என் வீட்டுக்காரருக்கும் புகை வாடையே பிடிக்காது(நல்ல வேளை தப்பித்தார்).

   சரி விஷயத்துக்கு வருவோம், மேஜர் இன்று என்னிடம் வந்து ரெம்ப தயக்கத்துடனே “ஒரு எரர் வருது, கொஞ்ஞம் பார்க்கமுடியுமா” என்றார்.
எனக்கு அவரை பார்த்தால் ரெம்ப பாவமாக இருந்தது. சை…  வயதில் பெரியவரை இப்படியா பயமுறுத்தி வைப்பது, என்ன மனுஷி நான் என்று என் மேல் கோபம் வந்தது.

“வருகிறேன் சார்” என்றேன் சிரித்த முகத்துடன்.
அவருடைய முகத்திலும் ஒரு நிம்மதி தெரிந்தது.
விடுவிடுவென்று அவருடைய அறைக்குள் நுளைந்தேன். ஏ. சி அறையில் நிரந்தரமாக குடியிருந்த புகை நாற்றம் என்னை தழுவிக்கொண்டது.அந்தோ என்னை அறியாமல் என் பி.பி எகிற ஆரம்பித்தது.

கடவுளே இந்த நாற்றம் என்னை ஆட்கொள்ளுவதற்கு முன்னால் , இந்த அறையிலிருந்து என்னை விடுவித்துவிடு என்று என் மனம் ஜெபிக்க ஆரம்பித்தது.

அப்படி என்ன தான் இருக்குது இந்த சிகரெட்டில், இப்படி உக்காந்து இழுப்பதற்கு எனக்கு புரியவில்லை.

Advertisements

Entry filed under: மனதில் தோன்றியவை. Tags: .

சைக்கிள் கவிதை என்றால் என்ன?

3 பின்னூட்டங்கள் Add your own

  • 1. பிரியமுடன் பிரபு  |  2:11 முப இல் திசெம்பர் 31, 2008

    /…………
    அது என்னமோ புகை வாடையை முகர்ந்தாலே போதும் , எனக்கு அப்படி ஒரு கோபம் தலையில் ஏறி உக்காந்து கொள்ளும். எள்ளும், கொள்ளும் முகத்தில் வெடிக்க, புகை பிடிப்பவர்களை ரெண்டு மொத்து மொத்திவிடலாமா என்று கை பரபரக்கும்.
    ……………………../\

    எனக்கும் அப்படித்தான் தோனும்

  • 2. பிரியமுடன் பிரபு  |  2:18 முப இல் திசெம்பர் 31, 2008

    ………
    அப்படி என்ன தான் இருக்குது இந்த சிகரெட்டில், இப்படி உக்காந்து இழுப்பதற்கு எனக்கு புரியவில்லை.
    ………../

    குடிக்கிற அவர்களுக்கெ அது தெரியாது

  • 3. அந்தோணிராஜ் கடையம்  |  12:54 பிப இல் மே 15, 2009

    புகை நமக்கு பகை… புகைப்பவன் வாய் நாற்றம்… அவன் பெயரை தூற்றும்.அவன் உடலுக்குள் நுழையும் காற்று…. கெடுத்துவிடும்,புதுநோயை தோற்றும்….எல்லாநோயையும் வரவேற்கும். நுரையிரலை கெடுக்கும் …பணசெலவை கொடுக்கும்.குடும்பமே படுக்கும்.. வாசியுங்கள் .. யோசியுங்கள் சுத்தமான காற்றை சுவாசியுங்கள் ..வாழ்க பல்லாண்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,191 hits
ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: