கவிதை என்றால் என்ன?

ஜூலை 17, 2008 at 5:07 முப 7 பின்னூட்டங்கள்

 சமீபத்தில் படித்து ரசித்த பாடல் இது

அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
 அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
 இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
 நன்மை தீமையை நன்றாய் விளக்க
 இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
 மனக்கண் முன்னால் மலரச் செய்தே
 இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
 மனத்தை விட்டு மறையச் செய்து,
 வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
 ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
 பாடு படாமல் பாடம் பண்ணவும்,
 நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
 இணைத்த சொற்களே கவிதை என்ப்படும்.

 கவிதை என்பது கற்பனை உள்ளது;
 கூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;
 பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
 அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
 எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
 பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
 உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
 கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
 ஐந்தும் ஒன்றும் ஆறு என்கிற
 கணக்கே யாகும்; கவிதையா காது.
 கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
 தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!

  ——–நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

Advertisements

Entry filed under: படித்தவை.

கோபம் குறும்பு

7 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சேவியர்  |  3:07 பிப இல் ஓகஸ்ட் 25, 2008

    நாமக்கல் கவிஞர் சொல்றதை வெச்சு பார்த்தா அவரோட இந்த கவிதை – ஒரு கவிதைக்குரிய இலக்கணத்தோட இல்லையே !!!

    இதெல்லாம் சும்மா மனுஷனை டென்ஷனாக்கற உத்தி.

    ஒரு மழைத் துளிக்கோ, மழலைப் புன்னகைக்கோ, காதலியின் கண்ணசைவுக்கோ இலக்கணம் சொல்ல முடியுமா ? முடியுமெனில் கவிதைக்கும் !!!

  • 2. kunthavai  |  11:31 முப இல் ஓகஸ்ட் 29, 2008

    //ஒரு மழைத் துளிக்கோ, மழலைப் புன்னகைக்கோ, காதலியின் கண்ணசைவுக்கோ இலக்கணம் சொல்ல முடியுமா ? முடியுமெனில் கவிதைக்கும் !!!
    //

    கவிஞ்ஞரே நீங்க சொன்னாச்சரியாத்தான் இருக்கும்.

  • 3. அனாமதேய  |  6:51 முப இல் திசெம்பர் 12, 2010

    UNMAI ENIL

  • 4. nithya  |  12:04 பிப இல் ஜனவரி 25, 2012

    kavathaiku vilakam kidatathu

  • 5. குந்தவை  |  4:29 பிப இல் ஏப்ரல் 28, 2012

    🙂

  • 6. nihtyakalyani  |  1:51 பிப இல் ஜூலை 31, 2012

    very nice to learn about kavithai

  • 7. குந்தவை  |  4:13 பிப இல் ஜூலை 31, 2012

    Thanks for ur comment Nithiyakalyani.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: