குறும்பு

ஜூலை 27, 2008 at 9:43 முப 4 பின்னூட்டங்கள்

கண்மணியிடம் பேபி காரட் கொடுத்து,

” கண்மணி இதை சாப்பிட்டு பாரேன் நல்லாயிருக்கும்” என்றேன்.

வாங்கி சாப்பிட்டாள்.
தலையை ஆட்டிக்கொண்டே “காரட் நல்லாயிருக்கும்மா”

“இது பேபி காரட் கண்மணி”

ம்… அப்போ அம்மா காரட் எங்கம்மா?”
???? என்ன சொல்ல நான்?

*************

கண்மணி ப்ளே ஸ்கூலுக்கு போகவேண்டும் என்று
 அழிச்சாட்டியம் பண்ணியதால்,  சேர்த்துவிட்டோம்.

ஒரு நாள் காலையில், ஆபீஸ் வந்ததுதான், வீட்டில் இருந்து போன் வந்தது

” என்னம்மா கண்மணி கிட்ட கொஞ்ஞம் பேசு. காலையிலிருந்து ஒரே அட்டகாசம்.  பல் விளக்க மாட்டேன், குளிக்க மாட்டேன், ஸ்கூலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்கிறாள். எனக்கு கிளம்பணும் நேரமாகிவிட்டது” என்று மூச்சுவிடாமல் கோபத்துடன் பேசி விட்டு போனை கண்மணியிடம் கொடுத்தார் என் கணவர்.

“என்ன கண்மணிமா.” என்றேன் நான்.

அம்மா எனக்கு ஸ்கூலுக்கு போக ஆசையா…. இருக்கும்மா. இப்போ குளிக்க போகணும் , நான் போனை அப்பாகிட்ட கொடுக்கட்டா?” என்றாள் ரெம்ப நல்ல பிள்ளையாட்டம்.

சிரித்துவிட்டு, “என்னப்பா இப்படி சொல்கிறாள்?” என்று அவரிடம் கேட்டேன்.

“உன்னை மாதிரியே அந்தர்பல்டி அடிக்கிறா பாரு, நான் தான் மாட்டிட்டு  முழிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று அலுத்துக்கொண்டார்.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா. Tags: .

கவிதை என்றால் என்ன? தியேட்டர் கலாட்டா

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Mukundan  |  2:01 பிப இல் ஜூலை 27, 2008

    //“ம்… அப்போ அம்மா காரட் எங்கம்மா?”//

    சபாஷ் , சரியான கேள்வி 🙂

    //” நான் தான் மாட்டிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று அலுத்துக்கொண்டார்.//

    வீட்டுக்கு வீடு வாசப்படி 🙂

  • 2. குந்தவை  |  4:12 முப இல் ஜூலை 28, 2008

    ரசித்தமைக்கு நன்றி முகுந்தன்.

    இன்னும் நிறைய கேள்விகளை எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக்க வேண்டியதுதான்.

  • 3. சேவியர்  |  3:04 பிப இல் ஓகஸ்ட் 25, 2008

    //இது பேபி காரட் கண்மணி”

    “ம்… அப்போ அம்மா காரட் எங்கம்மா?”

    //

    அம்மாவை மிஞ்சும் பெரிய எழுத்தாளரா வருவாரு போலிருக்கு 😉

  • 4. kunthavai  |  11:32 முப இல் ஓகஸ்ட் 29, 2008

    //அம்மாவை மிஞ்சும் பெரிய எழுத்தாளரா வருவாரு போலிருக்கு//

    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜூலை 2008
தி செ பு விய வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

%d bloggers like this: