வீடா? குட்டி சுவரா?

ஒக்ரோபர் 6, 2008 at 4:15 முப 25 பின்னூட்டங்கள்

சமீபத்தில் படித்தது……

வாரியார் நெற்றியில் திருநீறு இடுவதை பார்த்த ஒரு சிறுவன்
” சாமியார் நெற்றியில வெள்ளை அடிக்கிறாரு டோய் ” என்று கேலி செய்தான்.

அதை கேட்ட வாரியார், ” தம்பி இங்கே வா. வெள்ளை, வீட்டுக்கு அடிப்பாங்களா அல்லது குட்டி சுவருக்கு அடிப்பாங்களா? ” என்று சிரித்த முகத்துடன் கேட்டார்.

” வீட்டுக்கு தான் அடிப்பாங்க. “

நான் என்னுடய உடம்பை கடவுள் குடியிருக்கும் வீடாக நினைப்பதால் , வெள்ளை அடிக்கிறேன் . நீயும் அப்படி நினைத்தால் வெள்ளை அடித்துக்கொள் . எப்படி ?” என்றார்.

” நானும் கடவுள் குடியிருக்கும் வீடு தான் ” என்று திருநீறு பூசிக் கொண்டானாம் அந்த சிறுவன்.

Advertisements

Entry filed under: படித்தவை.

கண்மணி கண்மணி எப்படி இப்படி?

25 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Mukundan  |  1:53 பிப இல் ஒக்ரோபர் 6, 2008

  super shot :))

 • 2. தேவி  |  4:37 பிப இல் ஒக்ரோபர் 6, 2008

  சிரிக்கும் படியாகவும் சிந்திக்கும் படியாகவும் இருக்குது குந்தவை!

 • 3. kunthavai  |  4:26 முப இல் ஒக்ரோபர் 7, 2008

  வாங்க ரதி. ரசித்தமைக்கு நன்றி.

 • 4. kunthavai  |  4:27 முப இல் ஒக்ரோபர் 7, 2008

  வாங்க முகுந்தன்.
  ஒரு சிலருக்குத்தான் இந்த மாதிரி பட்டென்று யாருடைய மனதும் நோகாமல் அதேச்சமையம் ரசிக்கும் படியாகவும் பதில் கூற முடியும்.

 • 5. suttapalam  |  9:25 முப இல் ஒக்ரோபர் 7, 2008

  அட்டகாசம் தலைவி! இந்த தகவல் எப்படி கிடச்சுது ?

 • 6. kunthavai  |  4:28 முப இல் ஒக்ரோபர் 8, 2008

  வாங்க சுட்டபழம்,
  அதென்ன தலிவா, தலைவின்னு, சும்மா அக்கா அல்லது தங்கச்சின்னு கூப்பிடுங்க.
  புத்தகத்தின் பெயர் மறந்து போச்சுங்க.
  ரசித்தமைக்கும், வருகைக்கும் நன்றி.

 • 7. suttapalam  |  2:47 பிப இல் ஒக்ரோபர் 8, 2008

  திறமையானவங்கள தலைவி-னு கூப்படறது தப்பு இல்லிங்களே? உங்க எழுத்த பாத்து நானும் எழுத ஆரம்பிச்ச நல்லதுதானே அக்கா (என்ன நாட்டுக்கு தான் தலவலி) ?

 • 8. bmurali80  |  3:00 பிப இல் ஒக்ரோபர் 8, 2008

  கேட்கக் கூடாது நினைத்தேன். இருப்பினும் கேட்கிறேன்.

  முதலில் வாரியாரின் உடம்பைப் பார்த்துள்ளீரா ? வழக்கமாக பிறந்த மேனியுடனே இருப்பார். நம்ம உடம்மை இறைவனின் வீடா பாவிக்கனும் என்றால் வெள்ளை அடித்துக் கொள்ள வேண்டுமா ? இது என்னக் கொடுமை ? ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொருந்துமா ? வெள்ளை அடிக்காத குடிசைகளும் உண்டே. அங்கு வாழ்பவர்கள் மனிதர்களா ? அல்ல குட்டிச் சுவர்களா ?

 • 9. kunthavai  |  5:39 முப இல் ஒக்ரோபர் 9, 2008

  //உங்க எழுத்த பாத்து நானும் எழுத ஆரம்பிச்ச நல்லதுதானே அக்கா //

  இவங்களே எழுதும்போது நாம ஏன் எழுதக் கூடாதுன்னு எழுத ஆரம்பித்துவிட்டீர்களாக்கும். அது சரி.

 • 10. kunthavai  |  5:52 முப இல் ஒக்ரோபர் 9, 2008

  வாங்க முரளி,

  அப்படி எல்லாம் நான் ஆராய்ச்சி செய்யவில்லை, இருந்தாலும் பட்டென்று சிறுவனுக்கு புரியும் படியாக சொன்ன பதிலை நான் ரசித்தேன்.

  எல்லோருக்கும் அவரவர் பிள்ளைகள் மேல் பாசம் உண்டு, ஆனால் பல்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துவது இல்லையா? அது போல் கடவுள் மேலிருக்கும் பாசத்தையும் பல வழிகளில் வெளிபடுத்துகிறார்கள்.

  என்னை பொறுத்தவரையில் நல்ல மனதில் கடவுள் குடியிருக்கிறார்.

 • 11. suttapalam  |  8:47 முப இல் ஒக்ரோபர் 9, 2008

  yakka, ungala pesi jeika mudiyadhu! Nan en tholviya oppukiren!
  🙂

 • 12. Bhuvanesh  |  12:41 பிப இல் ஒக்ரோபர் 13, 2008

  அக்கா எதாவது எழுதுங்க! ரசிகர்கள் ஆவலா இருகோம் இல்ல ?

  -bhuvanesh (suttapalam)

 • 13. kunthavai  |  9:27 முப இல் ஒக்ரோபர் 14, 2008

  //அக்கா எதாவது எழுதுங்க! ரசிகர்கள் ஆவலா இருகோம் இல்ல ?//

  இந்த கிண்டல் தானே வேண்டங்கிறது.
  ஆமா, சும்மா உக்காந்து எழுதிக்கொண்டிருந்தா வேலையை உட்டு அனுப்பிவிடுவாங்களே தம்பி.

 • 14. kunthavai  |  9:32 முப இல் ஒக்ரோபர் 14, 2008

  //yakka, ungala pesi jeika mudiyadhu! Nan en tholviya oppukiren!//

  என்கிட்டே பேசி தோல்வியடைய ஒரு ஜீவன் இருக்கா.
  என்ன கொடுமை இது ?

 • 15. Bhuvanesh  |  10:50 முப இல் ஒக்ரோபர் 14, 2008

  எங்க கம்பெனில வேலை இல்ல திண்டாட்டம் அதிகமாகுது! அங்கயும் அப்படி இருக்கும்னு நினச்சது என் தப்பு தான்!
  ஆனாலும் நீங்க எழுத்து பணிக்கு ஆற்ற வேண்டிய சேவை பாதிக்காம பாத்துகுங்க!
  உங்களை எழுத விடாமல் தடுக்கும் உங்கள் கம்பெனியை இந்த தமிழ் சமுகம் மன்னிக்காது(!)

 • 16. Bhuvanesh  |  10:53 முப இல் ஒக்ரோபர் 14, 2008

  நீங்க கண்மணி கூட பேசி ட்ரைனிங் எடித்துடிங்க!! 🙂

 • 17. vinavu  |  5:47 பிப இல் ஒக்ரோபர் 14, 2008

  கடவுள் குடியிருக்கும் கோவில் உடம்பை சற்றே பெரிதாக வைத்திருக்கும் வாரியார் கூட்டங்களில் கடவுள் பற்றி பேசுவதற்கு சில ஆயிரங்கள் ரேட்டு வைத்தவர். ரேட்டு கட்டுபடியாக விட்டால் வரமாட்டார். அவரது பேச்சில் சாப்பாட்டு ஐட்டங்கள், பெண்களைக் கேலி செய்யும் ஆணாதிக்கம், அப்புறம் முருகப்பெருமானைப் பற்றி சில எட்டுக்கட்டை பாடல்கள்……. இதுதான் வாரியார். எப்படித்தான் ரசிக்கிறீர்களோ, உங்கள் கடவுளுக்கே வெளிச்சம். படிப்பும், ரசிப்பும் நம்மைச் சுற்றியிருக்கும் உண்மையான உலகம் குறித்து இருந்தால் குந்தவை இன்னும் வளர வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் ……?

 • 18. kunthavai  |  4:31 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  //ஆனாலும் நீங்க எழுத்து பணிக்கு ஆற்ற வேண்டிய சேவை பாதிக்காம பாத்துகுங்க!
  உங்களை எழுத விடாமல் தடுக்கும் உங்கள் கம்பெனியை இந்த தமிழ் சமுகம் மன்னிக்காது(!)//

  ஏம்பா உனக்கு காமடி பண்ணுறதுக்கு நானாப்பா கிடைத்தேன். என் மேல் ஏன் இத்தனை கோபம் தம்பி.

 • 19. kunthavai  |  4:48 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  //நீங்க கண்மணி கூட பேசி ட்ரைனிங் எடித்துடிங்க!! //
  நன்றி. வாத்தியாரை இன்னும் நல்லா ட்ரைனிங் கொடுக்க சொல்லவேண்டியதுதான்.

 • 20. kunthavai  |  4:49 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  //படிப்பும், ரசிப்பும் நம்மைச் சுற்றியிருக்கும் உண்மையான உலகம் குறித்து இருந்தால் குந்தவை இன்னும் வளர வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் ……?
  //
  ரெம்ப லேட்டா சொல்றீங்களே. ஒரு காலத்தில் வளருவதற்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா? இனிமேல் ஒரு அரை இஞ்சி கூட வளர வாய்ப்பில்லை.

 • 21. Bhuvanesh  |  11:53 முப இல் ஒக்ரோபர் 15, 2008

  கோபம் எல்லாம் இல்லைங்க அக்கா, சும்மா ஒரு எழுத்தாளர உக்குவிச்ச பெரும எனக்கு கிடைக்கணும்னு தான்!

 • 22. kunthavai  |  4:15 முப இல் ஒக்ரோபர் 16, 2008

  //ஒரு எழுத்தாளர உக்குவிச்ச பெரும எனக்கு கிடைக்கணும்னு தான்!
  //
  ஓகோ, கண்டிப்பாக எல்லா பெருமையும் உங்களுக்கு தருகிறேன்.

  என்னை ஊக்குவிச்ச பாவத்துக்கு ஏதாவது கிடைச்சுன்னா அதற்க்கு நான் பொறுப்பல்ல.

 • 23. jeno  |  8:37 முப இல் ஒக்ரோபர் 22, 2008

  //அப்படி எல்லாம் நான் ஆராய்ச்சி செய்யவில்லை, இருந்தாலும் பட்டென்று சிறுவனுக்கு புரியும் படியாக சொன்ன பதிலை நான் ரசித்தேன்.

  எல்லோருக்கும் அவரவர் பிள்ளைகள் மேல் பாசம் உண்டு, ஆனால் பல்வேறு வழிகளில் அதை வெளிப்படுத்துவது இல்லையா? அது போல் கடவுள் மேலிருக்கும் பாசத்தையும் பல வழிகளில் வெளிபடுத்துகிறார்கள்.

  என்னை பொறுத்தவரையில் நல்ல மனதில் கடவுள் குடியிருக்கிறார்.//
  This answer is fantastic. Hope to have no more arguments in this topic.

 • 24. Sriram  |  11:31 முப இல் நவம்பர் 25, 2008

  ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்…
  நீரில்லா நெற்றிக்கு அழகு பாழ்

  இது அவ்வையார் சொன்னதுங்கோ …

 • 25. பிரியமுடன் பிரபு  |  5:28 பிப இல் நவம்பர் 25, 2008

  நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஒக்ரோபர் 2008
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: