ஒரு நாள் டீச்சர்

ஒக்ரோபர் 19, 2008 at 5:21 முப 16 பின்னூட்டங்கள்

கண்மணி, அவள் பெரியம்மாவுடன் தினமும் கோவில்பட்டியிலிருந்து சுமார் பதினாறு கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தாள். காலையில் ஏழு மணி பேருந்தை பிடித்து சென்று விட்டு மாலை ஆறு மணிக்குத்தான் திரும்பி வருவாள். வீட்டுக்கு வந்தவுடன் , கண்களை விரித்து அந்த அக்காவை பாத்தேன், மயில் பாத்தேன், ஆடு , கோழி பாத்தேன், என்று சந்தோஷமாக சொல்லி கொண்டு திரிவதை பார்த்து எனக்கும் அவளுடன் பள்ளிக் கூடம் செல்ல ஆசை வந்தது

நான் சென்ற தினத்தில் , ஊரில் இரண்டு கல்யாணம், அப்புறம் என்ன, உங்களுக்கு புரித்திருக்கும், பள்ளிக்கூடத்தில் பாதி மாணாக்கர்களை காணோம். மொத்தம் நாலு வாத்தியார்கள் , எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் அது. அன்றைக்கு இரண்டு ஆசிரியர்கள் விடுப்பு எடுத்திருந்ததால், நானும் ஒரு நாள் ஆசிரியை ஆக பணியாற்றும் பாக்கியம் கிடைத்தது. (நிஜமாலுமே பாவம் பிள்ளைங்க)

ஒருத்தங்க ஒன்றிலிருந்து மூன்றாம் வகுப்பு வரையிலும், நான் நான்காம், ஐந்தாம் வகுப்பும், கண்மணி பெரியம்மா ஆறிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலும் நடத்தி கொண்டிருந்தோம்.

தற்போது உள்ள கல்வி முறை அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். நிஜமாகவே ரெம்ப நன்றாக இருந்தது. அவர்களாகவே , அட்டவணைப்படி பாடங்களை படித்தார்கள். சந்தேகங்களை வந்து கேட்டார்கள். படிக்கிற பிள்ளைங்க கிரீடத்துக்கு போட்டி போட்டு படித்துவிடுகிறார்கள். ஆனால் சிலர், ஓரமாக உக்காந்து அரட்டை அடித்து கொண்டு தானிருந்தார்கள். ஆசிரியர்களை சுற்றி சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, எழுதியதை காண்பிக்க, படித்ததை சொல்ல என்று மாணவர்கள் கும்பலாக நிற்கும்போது , ஓரமாக இருக்கும் மாணவர்களை கவனிப்பது கொஞ்சம் சிரமம் தான்.

அப்படியே எட்டி பார்த்தாலும் , “டீச்சர் ஒண்ணுக்கு ” அல்லது “டீச்சர் தண்ணி குடிக்கணும் ” என்று நான் அரட்டும் முன்பு என்னை முந்திக்கொள்கிறார்கள்.புதுசா தெரிந்ததாலோ என்னமோ, சேட்டைக்கு குறையே வைக்கவில்லை. மத்தியான இடைவேளை, முழுவதும் கண்மணி ராஜ்யம் தான், மேலும் எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்கூடத்திர்க்கு வந்திருந்ததால் அவளை கையிலே பிடிக்க முடியவில்லை. இடைவேளையில் மாத்திரமே கண்மணிக்கு விளையாட அனுமதி(மீறினால் பள்ளிக்கூடம் கட்), அதனால் மற்ற நேரங்களில் ஒன்றாம் வகுப்பில் சமத்தாக ஒக்காந்திருந்தாள்.

அங்குள்ள குழந்தைகள் கண்மணியிடம் காட்டிய அன்பையும், அவளுக்கு மயில், ஆடு, கோழி, காடு, கரை என்று எல்லாவற்றையும் சுற்றி காட்டி மகிழ்ந்ததையும் காண கண்கள் கோடி வேண்டும். அவள் பள்ளிக்கூடத்திற்க்கு போகணும் என்று அடம் பிடித்ததன் காரணம் அப்போது தான் தெரிந்தது.

நான் அன்று ரெம்பவே சந்தோஷப்பட்டாலும், சில விஷயங்களை கேட்டு மனது கனக்கத்தான் செய்தது. படிப்பிலும், சேட்டையிலும் படு சுட்டியான குமாருடைய அப்பாவோ மொடாக்குடிகாரர். அதனால் அவன் அடுத்த வருஷத்திலிருந்து வேலைக்கு தான் போவானாம் . மற்றொரு குழந்தையோ, தாயை இழந்த சிறுமி , ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அப்பா டவுனில் வேலை, அதனால் சொந்தக்காரங்க வீட்டில் அத்தனை வேலையும்( நாலைந்து மாடுகளை பராமரித்து, தண்ணி எடுப்பது எல்லாம் சின்ன வேலை கிடையாது) செய்துவிட்டு தான் வருவாள். இப்படி பலருக்கு படிப்பை கேள்விக்குறியாக்கும் பலவிதமான சங்கடங்கள்.

இவ்வளவு தங்கமான பிள்ளைகளுக்கு தொடர்ந்து நல்ல கல்வியும் வாழ்க்கையும் கிடைத்தால் , இந்தியா எப்படி இருக்கும்? இன்னும் எவ்வளவோ குழந்தைகள் இப்படி இருக்கிறார்களே! , நினைத்தால் என்னை அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு தான் வந்தது.

Advertisements

Entry filed under: அனுபவம்.

கண்மணி எப்படி இப்படி? கண்மணியின் வால்

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. carter  |  6:09 முப இல் ஒக்ரோபர் 19, 2008

  டீச்சர் பிள்ளை என்றால் மதிப்பு அதிகம்

 • 2. carter  |  6:11 முப இல் ஒக்ரோபர் 19, 2008

  டீச்சர் பிள்ளை என்றால் மதிப்பு அதிகம். அதிலும் கண்மணி பேசி பார்த்து விட்டால் பிரிய மனம் வராது.

 • 3. குந்தவை  |  6:28 முப இல் ஒக்ரோபர் 19, 2008

  //டீச்சர் பிள்ளை என்றால் மதிப்பு அதிகம். அதிலும் கண்மணி பேசி பார்த்து விட்டால் பிரிய மனம் வராது//

  இருக்கலாம். ஆனால் கண்மணி மாத்திரம் அல்ல, இன்னும் பள்ளி பக்கத்திலுள்ள வீடுகளிலிருந்தும் ரெண்டு மூன்று குழந்தைகள் வருவார்கள்.

 • 4. Vijay  |  8:41 முப இல் ஒக்ரோபர் 20, 2008

  \\இவ்வளவு தங்கமான பிள்ளைகளுக்கு தொடர்ந்து நல்ல கல்வியும் வாழ்க்கையும் கிடைத்தால் , இந்தியா எப்படி இருக்கும்? இன்னும் எவ்வளவோ குழந்தைகள் இப்படி இருக்கிறார்களே! , நினைத்தால் என்னை அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு தான் வந்தது.\\

  ரொம்ப உண்மை. எல்லோருக்கும் படித்திருந்தால், இந்தியா எங்கியோ போயிருக்கும். நிறைய சிறுவர்கள் படிக்காமல் இருப்பதற்கு அவர்களது பெற்றோர்கள் தான் காரணம். ஏழை மக்கள் மட்டுமில்லை, பணக்காரக் குழந்தைகள் கூட பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் இல்லாததால் தான் படிக்காமல் போகிறார்கள்.
  அரசாங்கமும் எந்த பொருள் வாங்கினாலும், 2% கல்வி வரி விதிக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஒழுங்கான ஒரு பள்ளிக்குடம் கூட அமைத்துக் கொடுக்காமல் என்ன தான் செய்கிறார்களோ, கடவுளுக்கே வெளிச்சம்.

 • 5. Bhuvanesh  |  11:38 முப இல் ஒக்ரோபர் 20, 2008

  ரொம்ப அருமையான “write up” அக்கா. இந்திய 2020 வல்லரசு ஆகும் என்று அறைகூவல் விடும் அரசியல்வாதிகள் இந்த அவலங்களை போக்கினால் தான் சிற்றரசாவது ஆகும் என்று உணர்ந்தால் நல்லது. அரசியால் தலைவர்கள் மீது எல்லா குற்றத்தையும் சுமத்தாமால், மக்களும் முடிந்தவரை சில பிள்ளைகளுக்கு படிப்பு செலவை ஏற்கலாம்.

 • 6. kunthavai  |  5:28 முப இல் ஒக்ரோபர் 21, 2008

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி விஜெய், புவனேஷ்.

  பெரும்பான்மையான குழந்தைகள் பாதிக்கபடுவது குடிபழக்கம் உள்ள குடும்பத்தினால் தான். படித்தவர்களே இப்போது கெட்ட பழக்கங்களை எல்லாம் ஏதோ ‘ இது கூட இல்லைனா என்னா மனுஷன்’ என்ற ரேஞ்சுக்கு தூக்கி வைத்து கொண்டாடும் போது, எப்படி இதை கட்டுபடுத்துவது?

 • 7. அனாமதேய  |  6:19 முப இல் ஒக்ரோபர் 21, 2008

  நல்ல கேள்வி! பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம்!
  திருடனாய் பார்த்து திருந்துவது எல்லாம் கலி யுகத்துக்கு சரிவராது! அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மக்களிடத்திலே விழிப்புணர்ச்சி கொண்டுவரவேண்டும்!

  நிச்சயமாக உங்களின் இந்த இடுகையை வினவு பார்த்தால், நீங்கள் வளர்ந்து விட்டீர்கள்(!) என்று ஒத்துகொள்வார்!

 • 8. குந்தவை  |  9:33 முப இல் ஒக்ரோபர் 21, 2008

  //திருடனாய் பார்த்து திருந்துவது எல்லாம் கலி யுகத்துக்கு சரிவராது!
  அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
  மக்களிடத்திலே விழிப்புணர்ச்சி கொண்டுவரவேண்டும்
  ! //

  குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரியாம யார் குடிக்கிறாங்க சொல்லுங்க.
  எல்லாத்துக்கும் தெரியும். குடும்ப உறுப்பினர்கள் தான் இதில் முக்கிய கடமை ஆற்றவேண்டும் என்பது என்னுடய கருத்து.

  //நிச்சயமாக உங்களின் இந்த இடுகையை வினவு பார்த்தால், நீங்கள் வளர்ந்து விட்டீர்கள்(!) என்று ஒத்துகொள்வார்//

  நான் வளரவேயில்லங்க.

 • 9. Bhuvanesh  |  12:33 பிப இல் ஒக்ரோபர் 21, 2008

  நீங்க சொல்லறது கரெக்ட்! ஆனா அவங்க செய்யலைனா, அரசு தான் செய்யணும்! நீங்க பாத்த கிராமத்துல எத்தன வீட்டுல பெண் பேச்சுக்கு மதிப்பு இருந்ததுன்னு சொல்லுங்க? கிராமத்துல இப்படினா நகரத்துல இன்னும் மோசம்! “குடியுடன் குடி”-னு culture வளர்ந்துட்டு வருது! கேட்டா “High Class Society”, “western culture” னு பதில் வேற!
  அதனால தான் அரசு தலையிட வேண்டும்னு சொன்னேன்!

  //குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரியாம யார் குடிக்கிறாங்க சொல்லுங்க

  எல்லோருக்கும் தெரியும்! ஆனா அதனால அவங்க பிள்ளைகள் படிப்பு போகுது, அதனால அவங்க வாழ்க்கை போகுதுன்னு விழிப்புணர்வு இல்லை என்பது என் கருத்து! அவங்க செய்யறது “கல்வி கொலை”னு அவங்களுக்கு புரிய வைக்கணும்!

 • 10. kunthavai  |  5:54 முப இல் ஒக்ரோபர் 22, 2008

  //எல்லோருக்கும் தெரியும்! ஆனா அதனால அவங்க பிள்ளைகள் படிப்பு போகுது, அதனால அவங்க வாழ்க்கை போகுதுன்னு விழிப்புணர்வு இல்லை என்பது என் கருத்து! அவங்க செய்யறது “கல்வி கொலை”னு அவங்களுக்கு புரிய வைக்கணும்//

  நல்ல கருத்து புவனேஷ்.

  எப்படி அவங்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பீங்கன்னு எனக்கு தெரியாது.
  எனக்கு இந்த மாதிரி குடிக்கரவங்களையும், புகைபிடிப்பவர்களையும் பாத்தால் மண்டையில் கம்பை கொண்டு ரெண்டு போட்டால் என்ன என்று தோன்றும்.

 • 11. jeno  |  8:31 முப இல் ஒக்ரோபர் 22, 2008

  வாசிக்கவே மிகவும் வருத்தமாக இருக்கு. நேரில் பார்த்த உங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்.
  குந்தவை போன்ற நல்ல ஆசிரியையிடம் படிக்கும் பாக்கியமும் அவர்களுக்கு ஒரு நாள்தான் கிடைத்ததா?

 • 12. Bhuvanesh  |  10:37 முப இல் ஒக்ரோபர் 22, 2008

  //எப்படி அவங்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பீங்கன்னு எனக்கு தெரியாது.
  எனக்கும் தெரியாது. அதனால தான் சட்டம் வேண்டும்னு சொன்னேன்!

  //குடிக்கரவங்களையும், புகைபிடிப்பவர்களையும் பாத்தால் மண்டையில் கம்பை கொண்டு ரெண்டு போட்டால் என்ன என்று தோன்றும்.

  அதை தான் நானும் கேட்கிறேன். ரெண்டு போட்டு தான் பாருங்களேன். அப்பவாவது சில ஜென்மங்கள் திருந்துதானு பார்ப்போம்!

 • 13. kunthavai  |  4:54 முப இல் ஒக்ரோபர் 23, 2008

  //அதை தான் நானும் கேட்கிறேன். ரெண்டு போட்டு தான் பாருங்களேன். அப்பவாவது சில ஜென்மங்கள் திருந்துதானு பார்ப்போம்!

  அப்படி செய்வேன்னு தெரிஞ்சிதான் கடவுளா பாத்து எனக்கு, எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரை கொடுத்திருக்கார்.

 • 14. kunthavai  |  4:58 முப இல் ஒக்ரோபர் 23, 2008

  //குந்தவை போன்ற நல்ல ஆசிரியையிடம் படிக்கும் பாக்கியமும் அவர்களுக்கு ஒரு நாள்தான் கிடைத்ததா?

  யாருக்குத்தான் இந்த பாலிடிக்ஸ் இல்லாத பிஞ்சுகளின் உலகத்தில் இருக்க பிடிக்காது. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணுமுங்கோ.

 • 15. மோகன்  |  2:58 முப இல் ஒக்ரோபர் 28, 2008

  //இவ்வளவு தங்கமான பிள்ளைகளுக்கு தொடர்ந்து நல்ல கல்வியும் வாழ்க்கையும் கிடைத்தால் , இந்தியா எப்படி இருக்கும்? இன்னும் எவ்வளவோ குழந்தைகள் இப்படி இருக்கிறார்களே! , நினைத்தால் என்னை அறியாமல் ஒரு நீண்ட பெருமூச்சு தான் வந்தது//

  குந்தவை என்னுடைய நண்பர்களுக்குக் கூட இம்மாதிரி நடந்துள்ளது. என்னுடைய பள்ளி மூத்த மாணக்கன் ஒருவன், பாலிடெக்னிக்கில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் சூழ்நிலையால் பொறியியில் பட்டப் படிப்பு படிக்க முடிய வில்லை. இது மாதிரி எத்தனை பேர் வாய்ப்பை இழக்கிறார்கள். உண்மையிலேயே மிகவும் வேதனை தரும் உண்மைகள் இவை.

 • 16. kunthavai  |  5:58 முப இல் ஒக்ரோபர் 28, 2008

  கருத்துக்கு நன்றி மோகன்.
  ஒரு வயதுக்கு மேல், அவங்க ஏதாவது வேலை பாத்து படித்து கொள்ளலாம்,
  ஆனால் சிறு வயதில் கல்வி மறுக்க படுவது கொடுமை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஒக்ரோபர் 2008
தி செ பு விய வெ ஞா
« செப்   நவ் »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

%d bloggers like this: