சினிமா – சினிமா தொடர் பதிவு….

நவம்பர் 4, 2008 at 6:26 முப 10 பின்னூட்டங்கள்

அடாடா நாம தப்பிச்சோம்ன்னு நினைத்துகொண்டிருந்தேன், விஜய் மாட்டிவிட்டுடாரு.

1)எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
என்ன உணர்ந்தீர்கள்?

  வயது எனக்கு நினைவு இல்லை….
  எனக்கு தெரிந்து ‘கருணாமூர்த்தி’  பார்த்தேன்.

  ரெம்ப அழுகையாக வந்தது.

2)கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

   ‘மாயி’  
   எங்க வீட்டில் தியேட்டருக்கு என்னிய மொத்தமா  ஒரு அஞ்சு படத்துக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க என்று எதோ ஒரு கெட்ட நேரத்தில் என் கணவரிடம் சொல்ல போக, உடனே கருமமே கண்ணாக கோவில்பட்டியை ஒரு ரவுண்ட் வந்து கூட்டமே இல்லாத ஒரு தியேட்டருக்கு, அதுவும் இரவு பத்து மணிக்கு,  ‘மாயி’ படத்துக்கு கூட்டிட்டு  போயி பழிதீத்துக்கிட்டாரு.
  
3)கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

    ‘ராமன் தேடிய சீதை’  , பரவாயில்லை, கொஞ்சம் மெதுவாக சென்றதுபோல் உணர்ந்தேன்…… .( எனக்கு காமடி தான் பிடிக்கும்).
    அதையும், கண்மணி  முழுசா பாக்கவிடல.

4) மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

     நானு தியேட்டரில்  பார்த்ததே கம்மிதான். மிச்ச எல்லா படமும் டிவியில் தான்.
     டிவி முன்னாடி உக்காந்து பாக்கிற அளவு எனக்கு பொறுமை கிடையாதுங்க. அடிதடி, பாட்டு, அழுகை சீன்  வரும்போதெல்லாம், வேறு வேலைய பாக்க போயிருவேன் ( டிவிடில பாத்தா ஓட்டிவிட்டிருவேன்) மொத்தத்தில் ஒரு படத்த அரை மணி நேரத்தில் பாத்து முடிச்சிருவேன். 
    ஏதாவது படம் என்னிய வந்து தாக்கிருமா?
    ( என்னை தொடர் எழுத கூப்பிட்ட விஜய்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்)
    ஆனாலும், நிறைய படங்கள் , அரை மணி நேரத்தில், என்னை ரெம்பவே பாதிப்பிற்குள்ளாக்கியது என்றால் மிகையாகாது. அப்புறம், ஒரு  panadol  போட்டு பாதிப்பை வேப்பிலை அடித்து சரிபடுத்தி கொள்வேன்.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

       அப்பப்ப அரசியலில் சினிமா டயலாக்கும்,  சினிமாவில் அரசியல் டயலாக்கும்  கன்னா பின்னான்னு பறக்கும் போது சிரித்துக்கொள்வேன்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

          அந்த அளவு படங்களை ரெம்ப ஆராய்ந்து பார்ப்பதில்லை, இருந்தாலும் நிறைய காட்சிகளை அதிசயத்துடன் பார்த்திருக்கின்றேன்( பழைய படங்களில் பறக்கும் காட்சிகள்) 

6) தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

             குமுதம், விகடனில் சிறிது வாசித்திருக்கிறேன் .
 
7)தமிழ்ச்சினிமா இசை?

        ஒரு சில பாடல்களை தவிர , எப்போதுமே ரசிக்ககூடிய பாடல்கள் நிறைய இருக்கின்றன. பாட்டு கேட்பதற்கு மாத்திரம் எனக்கு அலுப்பேயிருக்காது.
 
8)தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

       கொஞ்சம் பாத்திருக்கேன். பிடித்தமான படம் – பென்ஹர் , சக்தே

9) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

    ஏதோ கொஞ்சம் படம் பார்ப்பதை தவிர வேறு தொடர்பு கிடையாது.
(சில படங்களை பாத்து கரிச்சி கொட்டியிருக்கேன், இது தமிழ் சினிமா மேம்பட உதவுமா?)

10)தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

      அதுக்கென்ன, என்னை மாதிரி வேறு வேலையில்லாம பாக்கிறவங்களும், வேலைசெய்யாம பாக்கிறவங்களும் இருக்கிறவரை, அதுக்கு எதிகாலம், சும்மா கரண்ட் கட்டில்லாத பல்பு மாதிரி பிரகாசமாயிருக்கும்.

11) அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள்,செய்திகள் எதுவுமே பத்திரிகைகள்,தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்?
 உங்களுக்கு எப்படியிருக்கும்?
தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

        ஐயகோ என்ன கொடுமை இது? எப்படி உங்களுக்கு இப்படி ஒரு  கேள்வி கேட்க மனது வந்தது? நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் மாதிரி நுழைந்த  internet  சமாச்சாரங்கள் இல்லாம இருந்தாலே, எப்படி நம்மில் நிறைய பேருக்கு தூக்கம் வரும்?
          அப்புறம் எப்படி மொக்கை போடுவது?
          எப்படி சொல்லம்பு, கவி அம்புகளை எய்து பலரை பழிதீர்ப்பது?
          வலையுலகில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் எங்கே போய் மின்னும்?

       இதையே, இத்தனை காலமாக பெரிய பட்ஜெட் போட்டு செய்றவங்க பாடு எவ்வுளவு கஷ்டம்?  வந்தாரை வாழவைக்கும் தமிழகம்,  இதை ஒருபோதும்  அனுமதிக்காது. .
 
       அப்படியே ஒரு நிலைமை வந்தால்,  வேறு ஒன்பது வழி கண்டுபிடிப்பாய்ங்க. 
****************************************************************

யாரை இதில் கோத்து விடலாம் என்று பாத்தா , எல்லாருமே இதில பின்னி பிணைஞ்சிருக்காங்க.  சோகத்தில் கடற்கரை பக்கமா போய் நின்னா, நம்ம புவனேஷ் தம்பி  அதைவிட சோகமா நின்னுகிட்டிருந்தார்.
  ஆகா ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு’ சும்மாவா சொன்னாங்க , உடனே கோத்துவிட்டுட்டேன். 

சமயலறையில் ரெம்ப பிசியாகயிருந்த ரதி தேவியையும் கோத்துவிட்டிருக்கேன்.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

வலையிலிருந்து சுட்டது எட்டாக்கனி

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Vijay  |  10:25 முப இல் நவம்பர் 4, 2008

  என் அழைப்பை ஏற்று சினிமாத் தொடர் பதிவெழுதியதற்கு நன்றி!!

  \\ எனக்கு தெரிந்து ‘கருணாமூர்த்தி’ பார்த்தேன்\\
  மெய்யாலுமே இப்படி ஒரு படம் வந்திருக்கா?

  \\ ‘மாயி’ \\
  அய்யோ!! அதுக்கப்பறம் வேற படமே அரங்கில் பார்க்கலியா? You are a rare species 🙂

  \\டிவி முன்னாடி உக்காந்து பாக்கிற அளவு எனக்கு பொறுமை கிடையாதுங்க. \\
  ஒரு படத்தைப் பார்த்து முடிக்கற அளவிற்குக் கூட பொறுமை இல்லையா? யப்பா!!!

  \\அடிதடி, பாட்டு, அழுகை சீன் வரும்போதெல்லாம், வேறு வேலைய பாக்க போயிருவேன் ( டிவிடில பாத்தா ஓட்டிவிட்டிருவேன்) மொத்தத்தில் ஒரு படத்த அரை மணி நேரத்தில் பாத்து முடிச்சிருவேன். \\
  இதைத் தவிர தமிழ் படத்துல வேறெதுவும் இருக்காதே!!

  \\( என்னை தொடர் எழுத கூப்பிட்ட விஜய்க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்)\\
  ஏன் இந்த கொலை வெறி?

  ==============================================
  உங்க கணவரும் NEC தான்னு என் பதிவுல பின்னூட்டம் போட்டிருக்கீங்களே? என்ன பெயர்? எந்த பேட்ச்? என்ன பெயர். நான் EEE 1999.

 • 2. kunthavai  |  4:40 முப இல் நவம்பர் 5, 2008

  //மெய்யாலுமே இப்படி ஒரு படம் வந்திருக்கா?
  ஆமாங்க ‘Jesus’ படம்.

  //அய்யோ!! அதுக்கப்பறம் வேற படமே அரங்கில் பார்க்கலியா? You are a rare species
  இது ரெம்ப அநியாயம்.

  //ஒரு படத்தைப் பார்த்து முடிக்கற அளவிற்குக் கூட பொறுமை இல்லையா? யப்பா!!!
  ஹல்லோ! படம் பாக்கத்தான் பொறுமை இல்லைன்னு சொன்னேன். ஆனா புத்தகம் கிடைத்தால், யாரையுமே எனக்கு கண்ணு தெரியாது.

  //இதைத் தவிர தமிழ் படத்துல வேறெதுவும் இருக்காதே!!
  அதுக்குத்தான் நான் தியேட்டரில் போய் படம் பார்ப்பதில்லை.

  //உங்க கணவரும் NEC தான்னு என் பதிவுல பின்னூட்டம் போட்டிருக்கீங்களே?
  அவரு உங்களுக்கு ரெம்ப சீனியர், ECE பண்ணினாங்க.

  //ஏன் இந்த கொலை வெறி?
  11 கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்ல வச்சிட்டீங்களே என்று தான்.
  பாத்தா பின்னூட்டத்திலேயும் அத்தனை கேள்விகள். முடியலப்பா……முடியல….

 • 3. Bhuvanesh  |  6:34 முப இல் நவம்பர் 5, 2008

  //வலையுலகில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் எங்கே போய் மின்னும்?

  நீங்கள் சினிமா இல்லாமலே மின்னுகிறீர்கள்! உங்களுக்கு கண்மணி போதும்!

  //அதுக்கென்ன, என்னை மாதிரி வேறு வேலையில்லாம பாக்கிறவங்களும், வேலைசெய்யாம பாக்கிறவங்களும்
  உங்களை மாதிரி டிவிடி ல ஒரு படத்த அரைமணில பாத்தா, எதிர்காலம் எப்படி ரொம்ப நல்லா இருக்கும்? எனக்கு புரியல!!

  ஏதோ உங்களால முடுஞ்சது என்ன மாட்டி விட்டுடீங்க! ரொம்ப தேங்க்ஸ்கா !!

 • 4. jeno  |  5:54 முப இல் நவம்பர் 6, 2008

  என்ன, உங்கள ரொம்ப பாதிச்ச, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச,நீங்க ரொம்ப ரசிச்ச “மொழி” பத்தி ஒரு லைனாவது இருக்கும்னு நினைத்தேன். ஏமாத்திட்டீங்களே. ஏன் மறந்து போச்சா?

 • 5. kunthavai  |  6:23 முப இல் நவம்பர் 6, 2008

  //என்ன, உங்கள ரொம்ப பாதிச்ச, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச,நீங்க ரொம்ப ரசிச்ச “மொழி” பத்தி ஒரு லைனாவது இருக்கும்னு நினைத்தேன். ஏமாத்திட்டீங்களே. ஏன் மறந்து போச்சா?

  ஹி..ஹி….. நிஜமாலுமே மறந்து போச்சு.

 • 6. mukundan  |  6:39 முப இல் நவம்பர் 7, 2008

  ////ஒரு படத்தைப் பார்த்து முடிக்கற அளவிற்குக் கூட பொறுமை இல்லையா? யப்பா!!!
  ஹல்லோ! படம் பாக்கத்தான் பொறுமை இல்லைன்னு சொன்னேன். ஆனா புத்தகம் கிடைத்தால், யாரையுமே எனக்கு கண்ணு தெரியாது. //

  ஏன்? தூங்கிடுவீங்களா? 🙂

 • 7. தேவி  |  12:42 பிப இல் நவம்பர் 7, 2008

  ஆஹா!
  //எனக்கு தெரிந்து ‘கருணாமூர்த்தி’ பார்த்தேன்//
  இப்படி ஒரு படம் இருக்கா! ஆச்சர்யம் தான் போங்க குந்தவை!

  அப்புறம் மாயி படம் தான் லாஸ்டா!
  என்ன கொடுமை குந்தவை :)! இந்த படத்துக்கு அப்புறம் எவ்வளவு படங்கள் நல்ல படங்களாக வந்துள்ளது! ஏன் நேரமில்லையோ!
  நன்றாக காமடியாக தொடரை எழுதியுள்ளீர்கள்! 🙂
  வாழ்த்துக்கள் குந்தவை! 🙂

 • 8. kunthavai  |  6:56 முப இல் நவம்பர் 9, 2008

  என்ன முகுந்தன் இப்படி கேட்டுபுட்டீக?
  புத்தகம் வாசிப்பது ஒன்று தான் நான் ஒழுங்கா செய்யறேன்.

 • 9. kunthavai  |  6:58 முப இல் நவம்பர் 9, 2008

  வாங்க ரதி,
  ரசித்தமைக்கு நன்றி.
  சினிமாவில் அந்த அளவுக்கு interest கிடையாது. வேறு ஒன்றும் இல்லை.

 • 10. பிரியமுடன் பிரபு  |  10:04 பிப இல் நவம்பர் 27, 2008

  //////
  ஆனாலும், நிறைய படங்கள் , அரை மணி நேரத்தில், என்னை ரெம்பவே பாதிப்பிற்குள்ளாக்கியது என்றால் மிகையாகாது. அப்புறம், ஒரு panadol போட்டு பாதிப்பை வேப்பிலை அடித்து சரிபடுத்தி கொள்வேன்.
  //////
  நல்லாயிருக்கு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
நவம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: