எட்டாக்கனி

நவம்பர் 6, 2008 at 4:46 முப 17 பின்னூட்டங்கள்

லில்லீ…………………..” எங்கம்மா பொறுமையின் எல்லைக்கு போய் கத்தினாள்.

தோ.. வர்றேன்” என்றேன் , கண்ணாடியிலிருந்து முகத்தை எடுக்காமல்.

ஏய் பூசனிக்கா, கண்டதையும் பூசி இன்னும் பெருசாயிடாத ” அண்ணன் கிடைத்த கேப்பில் வம்பிழுத்தான்.

பாருங்கம்மா

போடா அவளுக்கு என்னடா குறை. “

அவளுக்கு ஒரு குறையும் இல்லைமா, அதானே பிரச்சனை. தலையிலிருந்து கால்வரை எங்கேயும் குறையில்லாமல் அப்படியே தலையணை மாதிரி இருக்கா.”

உன்னை மாதிரி ஒட்டக சிவிங்கியாட்டம் இல்லாம அவ ஒருத்திதான் பிள்ளை மாதிரி இருக்கா. போடா அண்ணன் உன்னை அப்பவே தேடிட்டு இருந்தான். போ.
அம்மா அவனை விரட்டினாள்.

ஆமா தெரியாமத்தான் கேக்கிறேன், தினமும் போடுற பவுடரையும், பொட்டையும் வைக்க இவ்ளோ நேரமாடீ ?”

விதவிதமா முயற்சி பண்ணித்தான் பார்த்தா, ஆனா ஒண்ணுலையும் தேறல்ல, அதான் இப்படி வந்துட்டா” என்று நக்கலடித்தான்.
அம்மா முறைத்ததில் விறுவிறுவென்று கிளம்பிவிட்டான்.

அம்மா, ஸ்கூலுக்கு நேரமாயிட்டுது, நான் சொன்னதை யோசிச்சீங்களா. எனக்கு நாளைக்கு 2500 ரூபாய் கண்டிப்பாக வேணும்

அம்மா என்னை தயக்கத்துடன் பார்த்தார், “அடுத்த மாதம் தர்ரேனே. இந்த மாதம் கொஞ்சம் எதிர்பாராமல் செலவு வந்துவிட்டது. நம்ம தோட்டத்தில்   வேலை செய்யற பொன்மணி , வேற  பொண்ணுக்கு பீஸ் கட்டறதுக்கு கேட்டா…….. .”

என்னம்மா நீ, எதை கேட்டாலும் ஒரு கதை சொல்லு, எனக்கு கண்டிப்பா வேணும் ” என்று எகிறினேன்.

கொஞ்சம் கோபத்துடன் ” ஆனாலும் உனக்கு கொஞ்சம் கை நீளம்தான், இப்படி செலவளித்து பழகாதேன்னு எத்தனை தடவை சொல்றது? எத்தனையோ பேர் சாப்பாட்டுக்கும், படிப்புக்கும் கஷ்டப்படுறாங்க……. எப்படி தான் இப்படி ஊதாரித்தனமா செலவளிக்க மனசு வருதோ” பதிலுக்கு அலுத்து கொண்டாள்.

அம்மா ஒற்றை ஆளாக நின்று எங்களை ஆளாக்கியவர். கஷ்டங்களையும், மனிதர்களின் குணங்களையும் பார்த்து பண்பட்டு பக்குவத்தை அடைந்தவர். நானு கொஞ்சம் ஷோக்கு பேர்வழி. மற்ற விஷையங்களில் நல்ல பிள்ளையாக இருக்கும் நான், காசை மாத்திரம் சக்கரை மாதிரி கரைத்து விடுவேன். இப்போதும் ஒரு தோழியின் கல்யாணத்திற்க்கு சேலை எடுக்கத்தான், பணம் தேவைபட்டது.

அதற்கு மேல் சண்டை போடமல் ஸ்கூலுக்கு கிளம்பினேன், இரண்டு பஸ் பிடிக்கவேண்டும். நெரிசலான பேருந்து நிலையத்தில் என்னுடைய பேருந்தை தேடும் போது தான் அந்த குரல் கேட்டது.

பத்து ரூபாய்க்கு மூன்று ….பத்து ரூபாய்க்கு மூன்று ….
அக்கா வாங்குங்க… பத்து ரூபாய்க்கு மூன்று ….
சமையல் , கோலம் , இந்தி புக் எல்லாம் இருக்கு……
அக்கா வாங்க……..”

என்று படபடத்த சிறுவனின் குரல் எனக்கு ரெம்ப பழக்கமானது.
பஸ்ஸுக்கு அந்த பக்கம் போய் பார்த்தால், சங்கர்!

ஏய் சங்கர் இங்க என்ன பண்ணுற, ஸ்கூலுக்கு வரல்லியா?”

ஒரு நிமிடம் சோக ரேகை படர்ந்தாலும், சமாளித்து விட்டு
எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனால் ரெண்டு நாளா கூலி வேலைக்கு போகலை, இனிமேலும் போறது கஷ்டம் தான். வீட்டுல தம்பி, குட்டி தங்கச்சி வேற இருக்காங்க அதனால இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டேன் டீச்சர். பேசிட்டு நிக்கிறத பாத்தா ஓனர் திட்டுவாரு , போயிட்டு வற்றேன் டீச்சர்” என்று படபடவென்று பேசிவிட்டு , அடுத்த பஸ் பக்கம் விரைந்தான்.

நான் இடிச்ச புளியாட்டம் , பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். தூரத்தில்
பத்து ரூபாய்க்கு மூன்று ….பத்து ரூபாய்க்கு மூன்று ….
அக்கா வாங்குங்க… பத்து ரூபாய்க்கு மூன்று …………”
என்று கேட்டது.

சங்கர்! படிப்பிலும் பேச்சிலும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன். வகுப்பே கலகலக்கும் அவனால். எப்போது சிரித்த முகத்துடன் வளைய வரும் துடிப்பான சங்கர் , இனிமேல் படிக்க வரமாட்டான் என்ற நினைப்பு மனதில் பாரமாக அழுத்தியது.

அடுத்த நாள், காலையில் புறப்படும் போது, ரூபாயை எண்ணி என் மேஜையின் மேல் வைத்துகொண்டு
என்ன கலர் சேலை எடுக்கப்போற? கடைக்கு யார்கூட போக போற?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போன அம்மாவிடம்

பொன்மணியோட பொண்ணு என்னம்மா படிக்கிறா? நல்லா படிப்பாளா?

Diploma பண்ணிட்டிருக்கா, நல்லாத்தான் படிப்பா.  இப்ப இதென்ன கேள்வி? நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம? 

ஆங்….பீஸ் கட்டறதுக்கு, பொன்மணிக்கிட்ட கொடுங்க…..
நான் சேலைவாங்க போகவில்லை
” 

என்னாச்சு

சும்மாதான் ” என்ற  பதிலில்,  என்னை வினோதமாக பார்த்தாள்.

(சங்கர், கதாபாத்திரமல்ல நிஜமானவன்)

Advertisements

Entry filed under: சிறுகதை.

சினிமா – சினிமா தொடர் பதிவு…. அட….நீங்க எப்படி?

17 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jeno  |  5:56 முப இல் நவம்பர் 6, 2008

  kunthavai கூடிய சீக்கிரம் நாவல் எழுத என் வாழ்த்துக்கள்

 • 2. Bhuvanesh  |  6:17 முப இல் நவம்பர் 6, 2008

  நல்ல கதை அக்கா!

  //(சங்கர், கதாபாத்திரமல்ல நிஜமானவன்)
  நிஜமானவர்கள்.. இன்னும் எத்தனை சங்கர்களை இந்த சமூகம் உருவாக்குமோ?

  ஜினோ சொன்னது போல் நாவல் எழுத வாழ்த்துக்கள்!!

 • 3. kunthavai  |  6:21 முப இல் நவம்பர் 6, 2008

  நன்றி அம்மணி.

 • 4. kunthavai  |  6:31 முப இல் நவம்பர் 6, 2008

  நன்றி புவனேஷ்

 • 5. Vijay  |  8:19 முப இல் நவம்பர் 6, 2008

  மனதை என்னவோ போட்டு பிசைவது போல் உணர்கிறேன். என்ன தான் குழந்தைத் தொழிலாளிகள் இருக்கக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வந்தாலும் அவர்களுடைய இக்கட்டான நிலமை தான் அவர்களை பள்ளிக்கூடத்திலிருந்து வேலைக்கூடத்திற்கு இட்டுச் செல்கிறது.

  நான் புதிய வீட்டுக்கு போன புதிதில் 15 வயது நிறம்பிய ஒரு பையன் வந்து , “சார் கார் வாஷ் பண்ணணுமா. நான் வாரத்திற்கு 3 நாள் கார் வாஷ் பண்ணித் தருகிறேன்” என்றான். என் காரை நானே துடைத்துப் பழகியதால் (கார் பெரும்பாலும் அழுக்காகத்தான் இருக்கும். வீட்டம்மா பொறுமையிழந்து பொறுமினால் மட்டுமே துடைப்பது வழக்கம்) “இல்லைப்பா, நானே வாஷ் பண்ணிக்கறேன்” என்று சொல்லிட்டேன். அப்புறம் என்னவோ தோன்ற, “நீ படிக்கிறாயா” என்றேன். “ஆமாம் பத்தாவது படிக்கிறேன்” என்றான். ஏதோ அவன் காச் வாஷ் செய்ய்வதால், அவன் செலவுக்கு உதவுமே என்ற எண்ணத்தால், “சரிப்பா வந்து துடைச்சுடு” என்றேன். ஒரு மாணவனுக்கு உதவுகிறோமே என்ற ஆறுதல் எனக்கு. யாசிக்காமல்
  கௌரவமாக சம்பாதிக்கிறோம் என்ற பெருமிதம் அவனுக்கு.

 • 6. uumm  |  8:43 முப இல் நவம்பர் 6, 2008

  very nice

 • 7. kunthavai  |  9:45 முப இல் நவம்பர் 6, 2008

  //மனதை என்னவோ போட்டு பிசைவது போல் உணர்கிறேன். என்ன தான் குழந்தைத் தொழிலாளிகள் இருக்கக்கூடாதுன்னு சட்டம் கொண்டு வந்தாலும் அவர்களுடைய இக்கட்டான நிலமை தான் அவர்களை பள்ளிக்கூடத்திலிருந்து வேலைக்கூடத்திற்கு இட்டுச் செல்கிறது.

  உண்மைதான்.
  என்னதான் அரசு இலவச கல்வி கொடுத்தாலும், வீட்டு நிலைமை நன்றாக இருந்தால் தானே பிள்ளைகள் அதன் பலனை பெற முடியும்.

  உங்களுடைய கருத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்தமைக்கு நன்றி விஜய்.

 • 8. kunthavai  |  9:45 முப இல் நவம்பர் 6, 2008

  // very nice

  வருகைக்கு நன்றிங்க.

 • 9. மோகன்  |  4:30 முப இல் நவம்பர் 7, 2008

  உங்களுக்கு இன்னொரு தொடர் பதிவு எழுத்து வாய்ப்பு. 🙂

  தங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்துக் கொள்ளவும். விவரங்களுக்கு என்னுடையப் பதிவைப் பார்க்கவும். நன்றி.

 • 10. Tharani priya  |  6:48 முப இல் நவம்பர் 12, 2008

  வணக்கம் குந்தவை. சின்ன குழந்தைங்க வேலை செய்வதை பார்த்த்லே எனக்கு மனது வலிக்க ஆரம்பிச்சுரும். அதே நேரம் விஜய் சொன்ன மாதிரி யாசகம் கேட்காம உழைச்சு சாப்பிடற குழந்தைங்க எவ்வளவோ மேல்தானே.

  நம்மாளல ஆனவரைக்கும் நமக்கு தெரிஞ்ச குழந்தைகளுக்கு அவங்க கல்விக்கு ஏதாவது ஒரு வழியில் உதவறதை தவிர வேற வழி என்னன்னு தெரியலை.

  யோசிக்க வெச்ச நல்லதொரு பதிவு.

 • 11. குந்தவை  |  6:59 முப இல் நவம்பர் 12, 2008

  Welcome Priya & thanks for sharing

 • 12. ஐரேனிபுரம் பால்ராசய்யா  |  9:31 முப இல் நவம்பர் 12, 2008

  மனது வலித்து பின்பு மனதுக்கு பிடித்த கதை.
  பள்ளத்தில் விழுந்து கிடக்கும் ஏழை குடும்பத்து குழந்தைகளின் படிப்பு பாதியில் நின்று போகும் நிலையை மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருந்தது . தோழிக்கு புடவை எடுக்க வைத்திருந்த பணத்தை படிப்புக்கு தந்தது பாராட்டுக்குரிய ஒன்று. ஆனால் அந்த மாணவனை அவன் போக்கில் அப்படியே விட்டுவிட்டது சற்று வருத்தத்தை வரவழைக்கிறது. நிறைய எழுதுங்கள் விமர்சிக்கிறோம்.

 • 13. குந்தவை  |  4:49 முப இல் நவம்பர் 13, 2008

  //ஆனால் அந்த மாணவனை அவன் போக்கில் அப்படியே விட்டுவிட்டது சற்று வருத்தத்தை வரவழைக்கிறது. //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கோ.
  எல்லோருக்கும் யாராலும் உதவி பண்ணமுடியாது, ஆனால் நம் அருகில் உள்ளவர்களுக்கு நம்மால் முடிந்ததை செய்யலாமே, அதைத்தான் சொல்லவந்தேன்.

 • 14. Bhuvanesh  |  12:20 பிப இல் நவம்பர் 17, 2008

  எங்க அக்கா ரொம்ப நாளா ஆளை காணோம்?

 • 15. மெல்போர்ன் கமல்  |  6:36 முப இல் நவம்பர் 30, 2008

  “என்னடா முறைக்கிற, நீ என்னைவிட வளந்திட்டேன்னு பாக்காத, நாளைக்கே உனக்குன்னு ஒருத்தி , உன்னை விட வயதில் சின்னவளா, குட்டையா , படிச்சோ படிக்காமலோ வந்து உன்னை அரட்டுவா அப்ப என்னடா பண்ணுவே?”

 • 16. Janu  |  2:38 முப இல் ஜனவரி 13, 2009

  ரொம்ப ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க குந்தவை. இந்த வாரம் தான் தமிழ்ல இவ்வளவு நல்லா ப்ளாகுகள் இருக்கறதே தெரிஞ்சது. பெட்டெர் லேட் தான் நெவெர்!! ஸ்ரீ ராம் அவர்களின் உதவியால் உங்க ப்ளாகை , இன்னும் பலர் ப்ளாகை பார்க்கும் வாய்ப்பு கெடச்சது. இப்பதான் ரவுண்டு கட்ட ஆரம்பிச்சு இருக்கேன்..

  Birds of same feathers -பார்க்கிறது ஒரு பரவசமான அனுபவம்.

  நிறைய எழுதுங்க !

 • 17. குந்தவை  |  4:20 முப இல் ஜனவரி 13, 2009

  //ரொம்ப ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க குந்தவை.

  ரெம்ப நன்றிங்க ஜானு. நிறைய பேரு வளரவேயில்ல குட்டையாயிருக்கன்னு கிண்டல் பண்ணிட்டிருக்காங்க , நீங்க இப்படி சொன்னது ஆறுதலா இருக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
நவம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: