அட….நீங்க எப்படி?

நவம்பர் 23, 2008 at 5:09 முப 17 பின்னூட்டங்கள்

                  நான் கோவில்பட்டியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் அவன் எனக்கு அறிமுகமானான்.  நல்ல உயரமும் அதற்கேற்ற உடல் வாகுமாய், ‘மாப்பிள்ளை’ பெஞ்சில் அமர்ந்து நக்கலையும் லொள்ளையும் சரி விகிதத்தில் அள்ளி விடுவதில் கெட்டிக்காரன். அவனுடைய அப்பா, ஒரு பெரிய தொழில் அதிபர். சிறு வியாபாரியாக நுழைந்து, திறமையால் வியாபாரத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு சுலபமாக நகட்டியவர்க்கு, தன் மகனை ஒவ்வொரு வருஷமும் அடுத்த வகுப்புக்கு நகட்ட ரெம்பவே பாடுபட்டார்.

         ரெக்கார்ட் எழுதனுமா, இம்போசிஷன் எழுதனுமா, நல்ல படிக்க கூடிய நோஞ்சானை சுலபமாய் தேர்ந்தெடுத்து, கன்னா பின்னா என்று  மிரட்டி வேலை வாங்கிவிடுவான். அதை பார்க்குபோது என்னிடம் வரட்டும் என்று கருவிக்கொள்வேன்.
         ஒரு போதாத வேளையில் , என்னிடம் வந்து,
  “பாண்டியா, இந்தா என்னுடய ரெக்கார்ட் நோட்டு , நாளைக்கு படம் வரஞ்சிட்டு வந்துடு” என்றான்.

  “நான் வரைய மாட்டேன்”  என்றேன் கர்வமாக. இவனுக்கு  இன்னைக்கு பாடம் நடத்திட வேண்டியது தான் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

  “என்னடா, நண்டு மாதிரி இருந்து கொண்டு என்னியவே ஓரசிப்பாக்கிரியா?” என்று பெரிதாக அரட்ட ஆரம்பித்தான்.

 நானும் விடாமல் “சும்மா ப்லிம் காட்டாத போடா, நான் ஒன்னும் உனக்கு அடிபிடியில்ல” என்று திருத்தமாக சொல்ல , கூட்டம் கூட ஆரம்பித்தது.

         அதுவரை அவனுக்கு கைவலிக்க இம்போசிஷன் எழுதி கொடுத்தவர்கள், காண்டுடன் என்னை பார்வையில் உசுப்பேத்திவிட, ‘மாப்பிள்ளை ‘ பெஞ்சி கூட்டமோ, இப்படி விட்டா யாருக்கும் நம்ம மேல பயமிருக்காது என்று அவனை உசுப்பேற்ற, மல்யுத்தம் ஆரம்பித்தது.

           கட்டி புரண்டு சண்டை ஜரூராக நடக்கும் போது, வாத்தியார் நல்லக்கண்ணு விஷயத்தை கேள்விப்பட்டு பிரம்புடன் வந்து…………………………………… நிறைய அல்வா (ஹி..ஹி….. களமிரங்கிட்டா இந்த பெரம்பு எல்லாம் சும்மா கரும்பு மாதிரி …) கொடுத்துட்டு போனாரு. ஒரு சுண்டைகாய் பொடியனால் அவனுடைய  செல்வாக்கு குறைந்ததில் அவனுக்கு பயங்கர வருத்தமும், கோபமும் இருந்தாலும்,   இருக்கிற செல்வாக்கையாவது காப்பாத்தனும் நினைச்சானோ என்னவோ என்னிடம் அதன் பிறகு சண்டைக்கு வருவதில்லை. 

  அப்புறம் நானும் அவனை மறந்து படிப்பில் கவனம் செலுத்தி , பொறியியல் கல்லூரியில் சேர்ந்து…… , சீமானை மறந்தே போய்விட்டேன். 

  சுப்பு ஒருவனுக்குத்தான் ஓரளவு நிறைய பேரிடம் தொடர்பு இருந்தது. எனக்கு வேலை கிடைத்த புதிதில், சுப்புவை பாக்க சென்றபோது,  அவன் பேச்சுவாக்கில் ஒரு தடவை சீமான் ஜவுளி வியாபாரத்தில் கொடி கட்டி பறப்பதாக கூறி, அவன் கடைக்கு கூட்டிச்சென்றான். தொப்பையும் தொந்தியுமாக என்னை வரவேற்று, அவனைவிட வளந்து விட்டதாலோ என்னவோ,  ரெம்ப மரியாதையாக பேசினான் என்னிடம், என்னை நானே கிள்ளி பாத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

  நேற்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு , வக்கீல் தெரு வழியாக இரவு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த பொது , எதிரில் வந்த  யமகா ஒன்று , ஓரங்கட்டி நின்றது. நான் அதற்கு பக்கத்தில் வந்துவிட்டதால்………., அட நம்ம சீமான்.

  “என்னிய நியாபகம் இருக்கா சீமான்…… எப்படி இருக்க” என்றேன்.

  “பாண்டியன்…….என்னடா மாப்பிள நீ எப்படி இருக்கா? நான் நல்லாத்தேன் இருக்கேன்” என்றான் பயங்கர சிரிப்புடன்.

 “மெதுவா  சிரி , பயந்துட போறாங்க……” அவன் பெல்ட்டை களட்டிக்கொண்டிருந்ததை பார்த்தவுடன் “சரி என்னடா பண்ணுற..” பரப்புடன் கேட்டேன்.

        அவன் ஒரு தினுசா வழிந்தபடி, “அட ஒன்னுமில்லடா…. நீ வேற , என் வீட்டுக்காரிக்கு நான் எப்போதும் டிப் டாப்பாக ஷர்ட்டை இன் பண்ணி போடனும்ன்னு ஆசை… அதான் போட்டிட்டு இருக்கேன்…( தன்னுடைய பெரிய வயிறையும், சட்டையையும்  பான்டினுள் கஷ்டப்பட்டு நுழைத்து, ஒருவாறு பெல்ட்டை போட ஆரம்பித்தான்) இந்தா பெரிய கலசத்தை வச்சிட்டு எப்படிடா சட்டையை இன் பண்ணுறது…. “

அது சரி.. பிடிக்கலைனா சொல்ல வேண்டியது தானே, அதுக்காக இப்படி வீட்டுக்கு பக்கத்துல வந்தவுடன் தினமும் இன்பன்னுவியா?”

ஆனா கேக்கமாட்டங்காளே, நான் இந்த கோமாளி வேஷம் போடலைனா அவ பத்திரகாளி வேஷம் இல்ல போடுவா… என்ன பண்ண… அவளோட அர்ச்சனையை கேட்பதற்க்கு இது பரயில்லை

        எனக்கு ஒரு முறை ரவுடி ரங்குவாக இருந்த அவனுடைய பள்ளிபருவம் கண்முன்னால் வந்தது. இந்த சின்ன விஷயத்திலே இப்படி தலைகீழா நிக்கிறவன் மற்ற விஷயங்களில் எப்படி இருப்பான். நினைத்தவுடனே என்னில் ஒரு கிண்டலும், ஆச்சரியமும் கலந்த புன்னகை தோன்றியது. அதை கவனித்த அவன்,
ஏன்டா சிரிக்கமாட்ட….. உனக்கு கல்யாணமாகட்டும் அப்புறம் தெரியும்”

           இருந்தாலும் எனக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை, சிறிது நேரம் பேசிவிட்டு நடந்து வருகையில், நான் வீட்டில் கோபப்பட்டு முறைக்கும்போது   எங்க அப்பா  சொல்லுவது தான் நினைவில் வந்தது.
 “என்னடா முறைக்கிற, நீ என்னைவிட வளந்திட்டேன்னு பாக்காத, நாளைக்கே உனக்குன்னு ஒருத்தி , உன்னை விட வயதில் சின்னவளா, குட்டையா , படிச்சோ படிக்காமலோ வந்து உன்னை அரட்டுவா அப்ப என்னடா பண்ணுவே?”

எவ்வளவு பெரிய உண்மையை போட்டுடைத்திருக்காரு என்று நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். அட….நீங்க எப்படி?

(ஹி..ஹி.. தங்கபாண்டியன் என்னோட வூட்டுக்காரருங்கோ )

Advertisements

Entry filed under: ரசித்தவை.

எட்டாக்கனி பேசினால் யாருக்கு நன்மை?

17 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Vijay  |  10:48 முப இல் நவம்பர் 23, 2008

  ரொம்பவே ரசித்தேன்.

  \\ நீ என்னைவிட வளந்திட்டேன்னு பாக்காத, நாளைக்கே உனக்குன்னு ஒருத்தி , உன்னை விட வயதில் சின்னவளா, குட்டையா , படிச்சோ படிக்காமலோ வந்து உன்னை அரட்டுவா அப்ப என்னடா பண்ணுவே?”\\
  அப்ப எல்லார் வீட்டுலயும் இதே கதை தானா?

  \\ நான் இந்த கோமாளி வேஷம் போடலைனா அவ பத்திரகாளி வேஷம் இல்ல போடுவா\\

  உருண்டு புரண்டு சிரித்தேன்!!

  ரவுடியானாலும் பெண்ஜாதின்னா நடுங்கித்தான் ஆகணும்!!

 • 2. kunthavai  |  11:03 முப இல் நவம்பர் 23, 2008

  //அப்ப எல்லார் வீட்டுலயும் இதே கதை தானா?
  நிறைய வீட்டில் இது “கதை” தான்.

  //ரவுடியானாலும் பெண்ஜாதின்னா நடுங்கித்தான் ஆகணும்!!
  ரவுடியாயிருந்தாதான் நடுங்கணும்.

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி விஜய்.

 • 3. Bhuvanesh  |  4:09 முப இல் நவம்பர் 24, 2008

  வாங்க அக்கா வாங்க!!
  Back with Bang (on Pandian Sir) a?

  “பாண்டியா பொருத்தது போதும் பொங்கி எழு” னு கத்தனும் போல இருக்கு, ஆனா மச்சானை பத்திரகாளி கிட்ட மாட்டி விட பயமா இருக்கு!!
  சிங்க பாண்டியனை இப்படி தங்க பாண்டியனா மாத்திடீங்களே ?

  enjoyed Reading ka ..

 • 4. kunthavai  |  4:43 முப இல் நவம்பர் 24, 2008

  அடக் கடவுளே, தம்பி பதிவை ஒழுங்க படிச்சீங்களா?
  இப்படி அநியாயமாக பழி சுமத்துரீங்களே?

  யாராவது கல்யாணத்துக்கு முன்னாடி லந்து பண்ணிட்டிருந்தா , அவருடன் படித்த சீமானை பற்றி சொல்லி கேலிப்பண்ணுவார், சரி அதை எழுதினா உங்களை மாதிரி ஆட்களுக்கு பயன்படுமேன்னு எழுதினா இப்படி சொல்லிட்டீங்களே?

  இவ்வளவு கோபம் இருக்கா என்மேல. நல்லதுக்கு காலம் இல்லப்பா.

 • 5. Bhuvanesh  |  5:54 முப இல் நவம்பர் 24, 2008

  //சரி அதை எழுதினா உங்களை மாதிரி ஆட்களுக்கு பயன்படுமேன்னு எழுதினா இப்படி சொல்லிட்டீங்களே?
  உங்க நல்ல மனச புருஞ்சுக்காம இப்படி பேசிட்டேன்.. மனுசுருங்க..
  ஆனா இந்த பதிவ எங்க மேனேஜர் படுச்சுட்டு, ஒரு சோகம் கலந்த குரலில் இப்படி சொன்னார் “லந்து பண்ணுனவன் பண்ணாதவன் எல்லாத்துக்கும் அரட்டுறது வர்றது நிச்சியம்”.. பாவம் அவருக்கு என்ன சோகமோ!! இருந்தாலும் அவரு சொல்லறதுல உண்மையும் இருக்கு.. ஸோ உங்க அட்வைஸ் எங்களுக்கு பயன்படாது!!
  என்ன இருந்தாலும் ப.கா வரது நிச்சியம்!!

 • 6. kunthavai  |  7:15 முப இல் நவம்பர் 24, 2008

  //ஒரு சோகம் கலந்த குரலில் இப்படி சொன்னார் “லந்து பண்ணுனவன் பண்ணாதவன் எல்லாத்துக்கும் அரட்டுறது வர்றது நிச்சியம்”.

  ச்சோ…. ரெம்ப அடிவாங்கிட்டார் போல.
  ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.

  இருந்தாலும் அவங்களை(Manager wife) எப்படி தொடர்பு கொள்ளமுடியும் என்பதையும் கேட்டு சொல்லுங்கள், நானும் அவங்ககிட்ட idea கேட்டு வீட்டில் try பண்ணிபாக்கிறேன்.

 • 7. மோகன்  |  12:33 பிப இல் நவம்பர் 24, 2008

  //அழைக்கப்பட்ட அனைவரும் தயவு செய்து பதிவை போட்டு விடுங்கள். இல்லையென்றால் ஆட்டோவெல்லாம் வராது. அதற்கு பதிலாக நீங்கள் எனக்கு 5000 ரூபாய் காசோலையை அனுப்பிவிடுங்கள். அவ்வளவுதான்.//

  அக்கா, சொன்ன மாதிரி நீங்க பதிவு போடலை, அதனால 5000 ரூபாய்க்கான காசோலையை எனக்கு அனுப்பி விடுங்கள்.

 • 8. Bhuvanesh  |  12:59 பிப இல் நவம்பர் 24, 2008

  //இருந்தாலும் அவங்களை(Manager wife) எப்படி தொடர்பு கொள்ளமுடியும் என்பதையும் கேட்டு சொல்லுங்கள், நானும் அவங்ககிட்ட idea கேட்டு வீட்டில் try பண்ணிபாக்கிறேன்.

  உங்களுக்கே ஐடியாவா? மேனேஜர் பாண்டியன் சார் நம்பர் கேட்கறாரு, அவருக்கு டிப்ஸ் வேணுமாம்..

 • 9. மோகன்  |  1:29 பிப இல் நவம்பர் 24, 2008

  No comments 😦 🙂

 • 10. முகுந்தன்  |  1:50 பிப இல் நவம்பர் 24, 2008

  //நான் இந்த கோமாளி வேஷம் போடலைனா அவ பத்திரகாளி வேஷம் இல்ல போடுவா… என்ன பண்ண… அவளோட அர்ச்சனையை கேட்பதற்க்கு இது பரயில்லை//

  பாவம் உங்கள் கணவர்…

 • 11. kunthavai  |  4:50 முப இல் நவம்பர் 25, 2008

  //அக்கா, சொன்ன மாதிரி நீங்க பதிவு போடலை, அதனால 5000 ரூபாய்க்கான காசோலையை எனக்கு அனுப்பி விடுங்கள்.

  எழுதத்தெரியாததை எழுதச்சொன்னா நான் எப்படிங்க எழுதுவேன்?.

 • 12. kunthavai  |  5:08 முப இல் நவம்பர் 25, 2008

  //உங்களுக்கே ஐடியாவா? மேனேஜர் பாண்டியன் சார் நம்பர் கேட்கறாரு, அவருக்கு டிப்ஸ் வேணுமாம்..
  தம்பி, கொஞ்சம் கூட பாசம் இல்லியா?

  //பாவம் உங்கள் கணவர்…
  முகுந்தன், இது என்ன அநியாயம்?

  இப்படி எல்லோரும் என்னுடய எதிரியா மாறுவீங்கன்னு நான் எதிர்பாக்கவேயில்லை.

  இதுதான் சொந்த செலவில் சூடு வைத்து கொள்வதோ ?

 • 13. Bhuvanesh  |  5:53 முப இல் நவம்பர் 25, 2008

  //தம்பி, கொஞ்சம் கூட பாசம் இல்லியா?
  பாசம் எல்லாம் இருக்கு கா.. ஆனா எங்க மேனேஜர்-௮ பாத்த ரொம்ப பாவமா இருக்கு..

 • 14. அடலேறு  |  12:49 பிப இல் நவம்பர் 27, 2008

  கதை எவ்ளோ பெருசுன்னு scroll பண்ணி கீழ

  பாக்கலன்னு பாக்கறப்பவே //(ஹி..ஹி..

  தங்கபாண்டியன் என்னோட வூட்டுக்காரருங்கோ )//

  பாத்துட்டனா அத நால ஒரு intersting இல்லாம

  போயிருச்சுங்க எனக்கு . இதுக்கு பேருதான்

  முந்திரிக்கொட்டைன்னு சொல்லுவாங்கன்னு நீங்க

  சொல்றது எனக்கு கேக்கல.

 • 15. பிரியமுடன் பிரபு  |  9:55 பிப இல் நவம்பர் 27, 2008

  /////
  “ஆனா கேக்கமாட்டங்காளே, நான் இந்த கோமாளி வேஷம் போடலைனா அவ பத்திரகாளி வேஷம் இல்ல போடுவா… என்ன பண்ண… அவளோட அர்ச்சனையை கேட்பதற்க்கு இது பரயில்லை
  ////
  ஆண்பிள்ளைகள் பாவம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  ///////
  எவ்வளவு பெரிய உண்மையை போட்டுடைத்திருக்காரு /////////////

  உங்களுக்கு புரிந்தால் சரி

 • 16. kunthavai  |  7:55 முப இல் திசெம்பர் 3, 2008

  ரசித்தமைக்கு நன்றி.

  //இதுக்கு பேருதான் முந்திரிக்கொட்டைன்னு சொல்லுவாங்கன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்கல.

  கேட்கலையா?
  அப்பாடி இப்பத்தான் நிம்மதியாயிருக்கு.

 • 17. kunthavai  |  7:59 முப இல் திசெம்பர் 3, 2008

  வாங்க பிரபு.
  //ஆண்பிள்ளைகள் பாவம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  இதெல்லாம் என்ன பிரபு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
நவம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« அக்   டிசம்பர் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

%d bloggers like this: