பேசினால் யாருக்கு நன்மை?

திசெம்பர் 2, 2008 at 4:45 முப 12 பின்னூட்டங்கள்

காது கொடுத்து மற்றவர்கள்   பேசுவதை கேட்டால் உங்களுக்கு  நன்மை அதிகம் .
நீங்கள்  பேசுவதை அடுத்தவர் கேட்டால் அவர்களுக்கு நன்மை அதிகம் .
                                                           ———அரபு பழமொழி.

டைரியில் எப்பவோ எழுதி வைத்தது. ம்…..கல்யாணத்திற்கு பிறகு நான் எப்படி நல்ல பிள்ளையாகிவிட்டேன் என்று புரியாத புதிராக இருந்தது. இந்த பழமொழிய படிச்ச பிறகு தான் என்னோட வீட்டுக்காரர் எவ்வளவு உதவியிருக்கிறார் என்ற உண்மை புரிந்தது.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

அட….நீங்க எப்படி? பிறந்த நாள்

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vijay  |  4:59 முப இல் திசெம்பர் 2, 2008

    \\என்னோட வீட்டுக்காரர் எவ்வளவு உதவியிருக்கிறார் என்ற உண்மை புரிந்தது.\\
    எப்படி அவர் சொல்வதை நீங்க கேட்பதால் உங்களுக்கு நன்மை வருதுன்னு சொல்லறீங்களா? என்னது இது, நடைமுறையில் நடக்காதது பற்றி சொன்னா அதை எப்படி நம்பறது.
    வீட்டுக்காரம்மா தான் பேச்சிட்டே இருப்பாங்க. இது தான் இயற்கை 🙂

  • 2. kunthavai  |  6:36 முப இல் திசெம்பர் 2, 2008

    //எப்படி அவர் சொல்வதை நீங்க கேட்பதால் உங்களுக்கு நன்மை வருதுன்னு சொல்லறீங்களா?
    சரியா கண்டுபிடிச்சிட்டு அப்புறம் என்ன கேள்விக்குறி.

    //வீட்டுக்காரம்மா தான் பேச்சிட்டே இருப்பாங்க. இது தான் இயற்கை.
    விட்டா தானே பேசமுடியும். (என்ன செய்ய கல்யாணத்திற்கு முன்னால ரெம்ப பேசிட்டேன் போல)

    முதல்ல வந்து வம்பிழுத்த விஜய்க்கு நன்றி.

  • 3. Bhuvanesh  |  8:13 முப இல் திசெம்பர் 2, 2008

    //விட்டா தானே பேசமுடியும்.

    அக்கா,
    ஒரு வேளை விட்டா நீங்க பேசறது தாங்க முடியாதுன்னு மாஸ்டர் பிளான் போட்டு அவரே பேசராரோ?

  • 4. குந்தவை  |  8:33 முப இல் திசெம்பர் 2, 2008

    //ஒரு வேளை விட்டா நீங்க பேசறது தாங்க முடியாதுன்னு மாஸ்டர் பிளான் போட்டு அவரே பேசராரோ?

    ம்… இருக்கலாம். இதுக்குத் தான் தம்பி வேணுங்கிறது ( But, it’s too late) .

  • 5. Bhuvanesh  |  10:40 முப இல் திசெம்பர் 2, 2008

    //( But, it’s too late) .
    Its Not Too late and all.. இன்று முதல் பாண்டியன் சாருக்கு ‘நன்மையை’ கொடுங்கள்!!

  • 6. Sriram  |  11:37 முப இல் திசெம்பர் 2, 2008

    இதையே தாங்க நம்ம வள்ளுவர் அய்யா கூட கீழ்கண்ட குரல்களில் விளக்குகிறார்.

    செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் – அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை.

    செவிக்கு உணவில்லாத போது சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.

  • 7. Mukundan  |  2:32 பிப இல் திசெம்பர் 2, 2008

    //நீங்கள் பேசுவதை அடுத்தவர் கேட்டால் அவர்களுக்கு நன்மை அதிகம் .
    //

    இல்லைனா ஏதாவது தூக்கி வீசுவீன்களோ ?

  • 8. kunthavai  |  4:59 முப இல் திசெம்பர் 3, 2008

    //Its Not Too late and all.. இன்று முதல் பாண்டியன் சாருக்கு ‘நன்மையை’ கொடுங்கள்!!

    நடக்காததை பற்றியெல்லாம் நான் நினைப்பதில்லை தம்பி.

  • 9. kunthavai  |  5:03 முப இல் திசெம்பர் 3, 2008

    வாங்க ராம்.
    எப்ப வந்தாலும் வள்ளுவரையோ, அவ்வையாரையோ கூடவே கூட்டிட்டு வர்றீங்க.
    கருத்துக்கு நன்றி.

  • 10. kunthavai  |  5:05 முப இல் திசெம்பர் 3, 2008

    //இல்லைனா ஏதாவது தூக்கி வீசுவீன்களோ ?

    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா. ம்……இதுக்குத்தான் அனுபவஸ்தர் வேணுங்கிறது.

  • 11. chandarsekar  |  12:33 பிப இல் திசெம்பர் 3, 2008

    //இந்த பழமொழிய படிச்ச பிறகு தான் என்னோட வீட்டுக்காரர் எவ்வளவு உதவியிருக்கிறார்….//

    சரி… சரி… அவரையும் கொஞ்கம் பேச விடுங்க!

  • 12. Sriram  |  12:37 பிப இல் திசெம்பர் 3, 2008

    //வாங்க ராம்.
    எப்ப வந்தாலும் வள்ளுவரையோ, அவ்வையாரையோ கூடவே கூட்டிட்டு வர்றீங்க.
    கருத்துக்கு நன்றி.//

    என்னங்க பண்றது நீங்க அரேபியா லெவெல்ல யோசிக்கிறீங்க…
    நான் எனக்கு தெரிஞ்ச நம்ம ஊர் கருத்துக்களை பகிர்ந்துக்கறேன்…
    அதனால அவ்வையாரையும் வள்ளுவரையும் தவிர்க்க முடியறது இல்ல…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,191 hits
திசெம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: