பிறந்த நாள்

திசெம்பர் 3, 2008 at 4:55 முப 32 பின்னூட்டங்கள்

நண்பர்களே, என் கண்மணி தன்னுடைய மூன்றாவது பிறந்த நாளை நவம்பர் 28(இருபத்தி எட்டு)  கொண்டாடினாள் . லேட்டா  சொல்றேன்னு  கோபிக்காமல்  ஆசீர்வாதம்  பண்ணுங்க . (நிறைய எழுதணும்ன்னு நினைத்திருந்தேன், புகைப்படத்தை இன்னொரு நாள் போடுகிறேன் )
***************************************************

கண்மணி பெரிய ஆளாகி விட்டாள்(மூன்று வயது ஆகிவிட்டதல்லவா).
பால் குடித்துக் கொண்டிருந்தேன்,

கண்மணி “அம்மா பாலை மடமடன்னு குடிக்கணும் அப்பத்தான் நீங்க  strong  பேபி ஆகமுடியும்

“சரிம்மா குடிக்கிறேன்”

மெதுவா குடிக்கிற, மடமடன்னு கண்ணா மூடிற்று  குடிம்மா”

தொடர்ந்து வற்புறுத்தியதால் படபடவென்று குடித்து முடித்தேன். வேற வழி?

*******************************************************

நேற்று லைட்டா தும்மிவிட்டேன் , உடனே ஆஜராகிவிட்டாள் அம்மையார்
அம்மா உனக்கு சளி பிடிச்சிருக்கும்மா, போய் இஞ்சியும் புதினாவையும் சாப்பிடு”

“சரி சாப்பிடுறேன்”

இப்ப சாப்பிடும்மா போ

வலுக்கட்டாயமாக என்னை கிச்சனுக்குள் தள்ளி விட்டாள். அவள் கண்முன்னாடி இஞ்சியும் புதினாவையும் சாப்பிட்ட பிறகு தான் விட்டாள்.
*********************************************************

வெளியே கிளம்பும் போது கொஞ்சம் குளிர் இருந்ததால், அவளுக்கு மாத்திரம் ஸ்வெட்டர் போட்டேன். ஆனால் வெளியே வந்த பிறகு பாத்தால் நல்ல குளிர்ந்த காற்று வீசியது.

” இன்னைக்கு கொஞ்சம் குளிர் அதிகமாகத்தான் தெரிகிறது ” என்றேன்.
அவ்வளவு தான் வந்து பிடித்துகொண்டாள்.

அம்மா பயங்கரமா குளிருது போ போய் ஸ்வெட்டர் போட்டுட்டு வாம்மா”

“ஸ்வெட்டர் போடுற அளவுக்கு எனக்கு குளிரவில்லை, கண்மணி”

இல்லம்மா குளிரடிக்குது, அப்புறம் உனக்கு சளி பிடிச்சிரம், போ போய் ஸ்வெட்டர் மாட்டிட்டு வாங்க”


அப்புறம் என்ன, மாட்டிட்டு வந்த பிறகு தான் என்னை வெளியே விட்டாள்.
*************************************************************

இதுவரை ஒருவருக்குத்தான் தலையாட்டிட்டு இருந்தேன் , இப்ப முழுநேரமும் தலையாட்ட ஆரம்பித்துவிட்டேன்.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

பேசினால் யாருக்கு நன்மை? நாங்களும் ஸ்கூலுக்கு கட்டடிச்சோம்ல…..

32 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Bhuvanesh  |  5:37 முப இல் திசெம்பர் 3, 2008

  கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  (நான் கண்மணி எல்லாம் கிட்டத்தட்ட ஒரே வயசு என்பதால் ஆசீர்வாதம் செய்யவில்லை)

 • 2. குந்தவை  |  6:12 முப இல் திசெம்பர் 3, 2008

  //(நான் கண்மணி எல்லாம் கிட்டத்தட்ட ஒரே வயசு என்பதால் ஆசீர்வாதம் செய்யவில்லை)
  இப்படியெல்லாம் வேற நினைப்பிருக்காக்கும்.

  ஹல்லோ…. கண்மணிக்கு மூன்று வயது.

 • 3. kunthavai  |  6:59 முப இல் திசெம்பர் 3, 2008

  //கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  வாழ்த்துக்கு நன்றி தம்பி.

 • 4. Bhuvanesh  |  8:12 முப இல் திசெம்பர் 3, 2008

  //ஹல்லோ…. கண்மணிக்கு மூன்று வயது.
  எனக்கு வயசு அத விட கொஞ்சம் அதிகம்!! அதனால என்ன ?

 • 5. Vijay  |  8:33 முப இல் திசெம்பர் 3, 2008

  கண்மணியோட செயல்கள் ரொம்பவே ஸ்வாரஸ்யமா ரசிக்கும் படியா இருக்கு.

  ஆனால் நீங்க சொன்ன கடைசி வாக்கியத்தை மட்டும் நம்ப முடிய வில்லை. 🙂

 • 6. Vijay  |  8:34 முப இல் திசெம்பர் 3, 2008

  Belated Birth Day Wishes to Kanmani.

 • 7. kunthavai  |  8:41 முப இல் திசெம்பர் 3, 2008

  //Belated Birth Day Wishes to Kanmani.

  Thank U Vijay.

 • 8. kunthavai  |  8:54 முப இல் திசெம்பர் 3, 2008

  //கண்மணியோட செயல்கள் ரொம்பவே ஸ்வாரஸ்யமா ரசிக்கும் படியா இருக்கு.

  ரசித்தமைக்கு நன்றி விஜய்.

 • 9. kunthavai  |  8:57 முப இல் திசெம்பர் 3, 2008

  //எனக்கு வயசு அத விட கொஞ்சம் அதிகம்!! அதனால என்ன ?

  இருபதை உங்க ஊரில் ‘கொஞ்சம் அதிகம்’ என்று தான் சொல்லுவீர்களா?

 • 10. Mukundan  |  9:08 முப இல் திசெம்பர் 3, 2008

  கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

 • 11. kunthavai  |  9:09 முப இல் திசெம்பர் 3, 2008

  //ஆனால் நீங்க சொன்ன கடைசி வாக்கியத்தை மட்டும் நம்ப முடிய வில்லை.

  பதிபக்தியே உருவான பெண்ணை பாத்து இப்படி சொல்லிடீங்களே? இது நியாயமா?

 • 12. Mukundan  |  9:09 முப இல் திசெம்பர் 3, 2008

  //இதுவரை ஒருவருக்குத்தான் தலையாட்டிட்டு இருந்தேன் , இப்ப முழுநேரமும் தலையாட்ட ஆரம்பித்துவிட்டேன்.
  //

  உங்கள் கணவர் கருத்து எங்கே எப்படி வந்தது? 🙂

 • 13. Bhuvanesh  |  9:27 முப இல் திசெம்பர் 3, 2008

  பதிபக்தியே உருவான பெண்ணை பாத்து இப்படி சொல்லிடீங்களே? இது நியாயமா?
  பதிபக்தியா?? இப்போ எல்லாம் லேடீஸ் மெகா சீரியல் பாத்து சமைக்காதானால ஜென்ட்ஸ் ‘பசி பட்னி’ல இருகாங்க!!

 • 14. chandarsekar  |  12:30 பிப இல் திசெம்பர் 3, 2008

  கண்மணிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 • 15. Sriram  |  12:39 பிப இல் திசெம்பர் 3, 2008

  கண்மணிக்கு என் வாழ்த்துக்கள்…
  தாமதத்திற்கு மன்னிக்கவும்…

 • 16. acai berry diet  |  5:49 பிப இல் திசெம்பர் 3, 2008

  Cool post keep it up man

 • 17. பிரியமுடன் பிரபு  |  10:31 பிப இல் திசெம்பர் 3, 2008

  கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  ///இதுவரை ஒருவருக்குத்தான் தலையாட்டிட்டு இருந்தேன் , இப்ப முழுநேரமும் தலையாட்ட ஆரம்பித்துவிட்டேன்.///

  உன்மை தெரிஞ்சு போச்சா??????

 • 18. kunthavai  |  4:34 முப இல் திசெம்பர் 4, 2008

  @ Mukundan, Chandar sekar, Prabu & Sriram

  வாழ்த்துக்கு நன்றி.

 • 19. Revathi  |  7:38 முப இல் திசெம்பர் 4, 2008

  Hai,

  BEST WISHES TO KANMANI

 • 20. குந்தவை  |  11:48 முப இல் திசெம்பர் 4, 2008

  //BEST WISHES TO KANMANI

  Thank U Revathi.

 • 21. kanagu  |  10:26 முப இல் திசெம்பர் 5, 2008

  kanmani ku enadhu prindha naal nazhalthukkal.

  Kanmani romba arivoda paysura.. 🙂 Ungalukku innum konja naala school la irundhy vandha vudane class irukkum nu nenaikeren 😉

 • 22. மோகன்  |  10:49 முப இல் திசெம்பர் 5, 2008

  கண்மணி அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். (என் வயசு கண்மணியை விட கொஞ்சம் கம்மி அதான், நன்றி புவனேஷ் ஹிஹி).

  நல்ல தானே போய் கிட்டு இருந்துச்சி,

  //இதுவரை ஒருவருக்குத்தான் தலையாட்டிட்டு இருந்தேன் , இப்ப முழுநேரமும் தலையாட்ட ஆரம்பித்துவிட்டேன்.//

  அப்புறம் என் இப்படி? இப்படியெல்லாம் சொன்ன எங்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாம போய்டுமா என்ன?

 • 23. Kunthavai  |  12:51 பிப இல் திசெம்பர் 5, 2008

  //kanmani ku enadhu prindha naal nazhalthukkal

  Thank U

 • 24. Kunthavai  |  1:00 பிப இல் திசெம்பர் 5, 2008

  //கண்மணி அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

  ஆகா கண்மணிக்கு இப்பவே இவ்வளவு பெரியத் தம்பியா!

  வாழ்த்துக்கு நன்றி குட்டி தம்பி.

 • 25. Kunthavai  |  1:02 பிப இல் திசெம்பர் 5, 2008

  //இப்படியெல்லாம் சொன்ன எங்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாம போய்டுமா என்ன?

  ரெம்ப அனுபவமுள்ளவர்களை நம்பவைப்பது கஷ்டமானக்காரியம் தான்.

 • 26. Kunthavai  |  1:05 பிப இல் திசெம்பர் 5, 2008

  //இதுவரை ஒருவருக்குத்தான் தலையாட்டிட்டு இருந்தேன் , இப்ப முழுநேரமும் தலையாட்ட ஆரம்பித்துவிட்டேன்.
  //

  //உங்கள் கணவர் கருத்து எங்கே எப்படி வந்தது?

  முடியல….. வாபஸ் வாங்கிக்கிறேன்.

 • 27. Kunthavai  |  1:14 பிப இல் திசெம்பர் 5, 2008

  //பதிபக்தியா?? இப்போ எல்லாம் லேடீஸ் மெகா சீரியல் பாத்து சமைக்காதானால ஜென்ட்ஸ் ‘பசி பட்னி’ல இருகாங்க!!

  ரெம்ப டி.ஆர் படத்தை பாத்து கெட்டுபோயிருக்கீங்கன்னு தெரியுது.

 • 28. Bhuvanesh  |  3:43 பிப இல் திசெம்பர் 5, 2008

  //ரெம்ப டி.ஆர் படத்தை பாத்து கெட்டுபோயிருக்கீங்கன்னு தெரியுது.

  டி.ஆர் டி.ஆர் படமா?? ஒரு கொழந்தை இங்க Intellectual ௮ பேசுது, அத போய் இப்படி பயபடுத்தரீங்கலே?

  //வாழ்த்துகள். (என் வயசு கண்மணியை விட கொஞ்சம் கம்மி அதான், நன்றி புவனேஷ் ஹிஹி).

  மோகன், நாம பேசறத கேட்டு எனக்கே
  ”த்ரிஷா பிளஸ் டூ சார், நீங்க பிளஸ் ஒன் படிக்கறீங்க சார்” தான் ஞாபகம் வருது!!

 • 29. Amalan  |  9:32 முப இல் திசெம்பர் 17, 2008

  கண்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

 • 30. குந்தவை  |  4:49 முப இல் திசெம்பர் 18, 2008

  Thank u Amalan.

 • 31. Janu  |  8:46 பிப இல் ஜனவரி 17, 2009

  Hi kunthavai,
  Kanmani is damn cute. She reminds me of my akka’s ponnu ‘mini’ who is also 3 years old now. my son , Pranav , is five but talks like an adult. I am scrap-booking all his ‘vaalu thanagal’ and ‘periya manushath thanangal’.

  haai kanmani darling,
  keep going. ஏதோ ‘பெண் குழந்தைகள்’ நா ரொம்ப சமர்த்துன்னு நெனச்சிட்டு இருந்தேன் . இப்படி என் வயித்துல ‘பாதாங்கீரையே’ வார்த்ததற்கு ரொம்ப நன்றி. தொடரட்டும் உங்களுடைய சூப்பர் குறும்புத் தனங்கள் . வளரட்டும் உங்க அம்மாவோட எழுத்துப் பணிகள்.

  Anbudan.
  janu

 • 32. குந்தவை  |  4:34 முப இல் ஜனவரி 18, 2009

  வாங்க ஜானு,
  என்னை வாழ்த்தியதற்கும், கண்மணியை கிளப்பிவிட்டதற்கும் நன்றி.
  சீக்கிரமே ப்ரணவோட குறும்பையும் எங்களுக்கு எழுதுங்க.
  //வளரட்டும் உங்க அம்மாவோட எழுத்துப் பணிகள்.
  இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே என்னை……….அப்புறம் தமிழ் நாடு உங்களை மன்னிக்காது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
திசெம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: