நாங்களும் ஸ்கூலுக்கு கட்டடிச்சோம்ல…..

திசெம்பர் 21, 2008 at 5:37 முப 26 பின்னூட்டங்கள்

காலையில் எழுந்தவுடன்  , நேற்று வகுப்பில் தோழிகளிடம் பேசியது நியாபகம் வர, சமையலில் தீவிரமாயிருந்த அம்மாவிடம் சென்றேன்.

“யம்மா”
“என்ன?”

“ஸ்கூலில் எல்லா டீச்சர்ஸ்சும் பனிரெண்டாம் வகுப்பை விட்டு வரமாட்டேன் என்று  அடம்பிடிக்கிறார்கள்   அம்மா. யாருமே எங்களை கண்டுகிரதில்ல . பதினொன்றாம் வகுப்பே இல்லாதது மாதிரி நடந்துக்கிறாங்க.  எங்களுக்கா பயங்கர போர்.   ” என்று முகத்தில் பயங்கர ரியாக்ஷனோடு சொன்னேன்.

“படிக்க வேண்டியது தானே”

சும்மா யாரும்மா உக்காந்து படிப்பா? அதனால……”

“அதனால?”

அதான் என் வகுப்பில் எல்லோரும் பேசி இன்னைக்கு யாருமே ஸ்கூலுக்கு  போகவேண்டாம் என்று நேற்றே முடிவுபண்ணிட்டோம்” என்றேன் சிறிது   தயக்கத்துடனும் சந்தோஷத்துடனும்.

அம்மா பதில் பேசவில்லை. மொளனம் சம்மதம் என்று முடிவு செய்து,  அம்மாவுக்கு நானும் கூட மாட வேலை செய்துகொடுத்தேன். காலையில் ஏழரைக்கு அம்மாவுக்கு பஸ் வந்துவிடும். வேகவேகமாக கிளம்பும் போது என்னை அழைத்தார்.

நீ அப்போ இன்னைக்கு ஸ்கூலுக்கு  போகலை?”

ம…..போகல

சரி, போன வாரம் ரெண்டு பெட்ஷீட் துவைக்காமல் இருந்தது அத துவச்சிடு

“சரிம்மா”

இந்த சனிக்கிழைமையும் கல்யாணவீட்டிற்கு போகவேண்டியது இருப்பதால் வீட்டை கழுவமுடியாது, அதனால  வீட்டையும் கழுவிவிடு”

சரிம்மா”  என் முகத்தில் இருந்த சிரிப்பு மெல்ல மறைந்தது.

அப்புறம் மீன் வாங்கி ரெம்ப நாள் ஆயிற்று, அதனால மத்தியானம் நல்ல மீனா பாத்து வாங்கி குழம்பு வச்சிடு “

அம்மா….” எனக்கு மயக்கம் வர ஆரம்பித்தது.
என்ன?”
ஒண்ணுமில்ல வச்சிர்றேன்” மென்று முழுங்கினேன்.

அப்புறம் வத்தலையும், மல்லியையும் போன வாரம் வாங்கியது , இன்னும் காயவைக்கவில்லை, மாடியில் காயவைத்து,  மூணு மணிக்குள்ள அள்ளிவிடு”

சரி”  கட்டடிக்க   ஐடியா சொன்ன பாதகியை பழிக்க ஆரம்பித்தேன்.

இப்போது அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்தால்  மத்தியானம்  மாவாட்டி விடலாம், அரச்சி வை சரியா?”

சரிம்மா

அன்னிக்கு டெரர் ஆனவதான் , எம்.சி.ஏ படிக்கற வரைக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் என் கனவில் கூட வந்ததில்லை.

Advertisements

Entry filed under: அனுபவம்.

பிறந்த நாள் வாழ்த்து

26 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jeno  |  1:27 பிப இல் திசெம்பர் 21, 2008

  சும்மா கட் அடிகிற பிள்ளைகள இப்படி கூட திருத்தலாம் போல இருக்கே

 • 2. பிரியமுடன் பிரபு  |  6:49 பிப இல் திசெம்பர் 21, 2008

  நல்ல அனுபவம்
  ரசித்தேன்
  பாவம் நீங்க
  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 • 3. பிரியமுடன் பிரபு  |  6:50 பிப இல் திசெம்பர் 21, 2008

  அட நான் தான் முதல் ஆள்

 • 4. பிரியமுடன் பிரபு  |  6:50 பிப இல் திசெம்பர் 21, 2008

  ராசியான கை
  Comment கொட்டோகொட்டுனு கொட்டப்போவுது

 • 5. குந்தவை  |  4:33 முப இல் திசெம்பர் 22, 2008

  //ராசியான கை
  ஹி …ஹி….. நம்மள பத்தி நாம தானே நல்லதா சொல்லமுடியும்.

 • 6. குந்தவை  |  4:36 முப இல் திசெம்பர் 22, 2008

  வருகைக்கு நன்றி.
  பாவம் என்றாலும், எங்கம்மாவோட ரசிகை நான்.

 • 7. குந்தவை  |  4:37 முப இல் திசெம்பர் 22, 2008

  //சும்மா கட் அடிகிற பிள்ளைகள இப்படி கூட திருத்தலாம் போல இருக்கே

  உங்கம்மாவுக்கு இந்த ரகசியம் தெரிந்திருந்தால் , ஜெனோ இன்னும் நல்ல பிள்ளையாக இருந்திருப்பார்.

 • 8. Vijay  |  4:46 முப இல் திசெம்பர் 22, 2008

  Moral of the story:
  அம்மாவை ஏமாற்றக் கூடாது 🙂

 • 9. Vijay  |  4:46 முப இல் திசெம்பர் 22, 2008

  நாங்கள்லாம் காலேஜ் வந்தப்புறம் தான் கட் அடிக்க ஆரம்பிச்சோம். நீங்க ஸ்கூல் வாழ்க்கையிலேயா?? நடத்துங்க.

 • 10. Bhuvanesh  |  5:07 முப இல் திசெம்பர் 22, 2008

  உண்மையை சொல்லுங்க, நீங்க வச்ச மீன் குழம்ப சாப்ட்டுட்டு தானே உங்க அம்மா உங்கள அதுக்கப்பறம் கட் அடிக்க விடல?

 • 11. குந்தவை  |  5:52 முப இல் திசெம்பர் 22, 2008

  //உண்மையை சொல்லுங்க, நீங்க வச்ச மீன் குழம்ப சாப்ட்டுட்டு தானே உங்க அம்மா உங்கள அதுக்கப்பறம் கட் அடிக்க விடல?

  கேள்வியில, என்ன ஒரு வில்லத்தனம்.

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிறமாதிரி, நான் எதை சமைத்தாலும் பயப்படக்கூடிய ஒரே ஆள் என் வீட்டுக்காரர் தான்.

 • 12. குந்தவை  |  5:55 முப இல் திசெம்பர் 22, 2008

  இந்த மாதிரி வேலையெல்லாம் காலேஜ் வந்தப்பிறகு தான் செய்யனும்ன்னு தெரியாம போச்சே. அதான் வகையா மாட்டிக்கிட்டேன்.

 • 13. மோகன்  |  3:52 பிப இல் திசெம்பர் 22, 2008

  ஹ்ம்ம்ம்ம், இதுக்கு நீங்க ஸ்கூலுக்கே போய் இருந்து ஜாலி பண்ணி இருக்கலாம். ஹய்யோ ஹய்யோ.

  அப்புறம் இதை கட் அடிச்சோம்னு சொல்லாதீங்க. கட் அடிச்ச எங்கள் ரத்தம் கொதிக்குது.

 • 14. குந்தவை  |  4:31 முப இல் திசெம்பர் 23, 2008

  //அப்புறம் இதை கட் அடிச்சோம்னு சொல்லாதீங்க. கட் அடிச்ச எங்கள் ரத்தம் கொதிக்குது.
  ஹி… ஹி…என்ன செய்ய , நாங்க ஒண்ணு நினைக்க, கடவுள் எங்கம்மா வடிவில் ஒரு திருவிளையாடல் நடத்திட்டார்.

 • 15. Sriram  |  8:29 முப இல் திசெம்பர் 23, 2008

  கடைசியில் அம்மா சொன்னதை எல்லாம் செய்தீர்களா இல்லையா ?

 • 16. Sriram  |  8:31 முப இல் திசெம்பர் 23, 2008

  இதுக்கு தான் ஸ்கூலுக்கு போற மாறி கெளம்பி வழியில கட் அடிக்கனும்கிறது.
  அப்படியே ஏதாவது படத்துக்கு போய் டைம் பாஸ் பண்ணி இருக்கலாம்.

  உங்களுக்கு விவரம் பத்தலை அக்கா …

 • 17. குந்தவை  |  9:21 முப இல் திசெம்பர் 23, 2008

  //கடைசியில் அம்மா சொன்னதை எல்லாம் செய்தீர்களா இல்லையா ?

  வேற வழி?

 • 18. குந்தவை  |  9:34 முப இல் திசெம்பர் 23, 2008

  //இதுக்கு தான் ஸ்கூலுக்கு போற மாறி கெளம்பி வழியில கட் அடிக்கனும்கிறது.
  அப்படியே ஏதாவது படத்துக்கு போய் டைம் பாஸ் பண்ணி இருக்கலாம்.

  உங்களுக்கு விவரம் பத்தலை அக்கா …

  ம்?….இப்படி லேட்டா ஐடியா குடுத்தா எப்படி.
  சரி இருந்தாலும் இதை முதியோர் பள்ளிக்கூடம் செல்லும் பொது பயன்படுத்திக்கிறேன்.

 • 19. jeno  |  11:55 முப இல் திசெம்பர் 23, 2008

  prabhu is lying , jeno is the first to write comment.
  இந்த பொய்யை கண்டிக்காமல் அத ஏத்துக்கிட்ட மாதிரி
  பதில் எழுதி இருக்கும் குந்தவையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 • 20. kunthavai  |  4:51 முப இல் திசெம்பர் 24, 2008

  //இந்த பொய்யை கண்டிக்காமல் அத ஏத்துக்கிட்ட மாதிரி
  பதில் எழுதி இருக்கும் குந்தவையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  plz…. cool….
  கண்டனத்தை ஏற்றுக்கொள்கிறேன்.

 • 21. ரெஜோலன்  |  7:30 முப இல் திசெம்பர் 24, 2008

  அன்னைக்கு அம்மா அந்தளவுக்கு நடந்ததுதான் இன்னைக்கு பூந்தோட்டமான வாழ்க்கை அமைய உதவுது என்பதை மறந்துடாதீங்க.

  . .நிஜமா உங்கம்மா ரொம்ப புத்திசாலின்னு நினைக்கிறேன். காரணம் உங்களுக்கும் வேலை படிச்சமாதிரி ஆச்சு, இனி ஸ்கூலுக்கு கட் அடிக்க எண்ணமும் வராது . . . ஒரு கல்லுல இரண்டு மாங்கா. .

 • 22. குந்தவை  |  7:49 முப இல் திசெம்பர் 24, 2008

  //நிஜமா உங்கம்மா ரொம்ப புத்திசாலின்னு நினைக்கிறேன்.

  வருகைக்கு நன்றி ரெஜோலன்.

  நீங்கள் சொல்வது உண்மை தான். மனம் நிறைய அன்பும், கண்டிப்பும், ஞானமும் இருந்தால் தான் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்கமுடியும்.

 • 23. பிரியமுடன் பிரபு  |  2:14 முப இல் திசெம்பர் 25, 2008

  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிறமாதிரி, நான் எதை சமைத்தாலும் பயப்படக்கூடிய ஒரே ஆள் என் வீட்டுக்காரர் தான்.
  /////////

  ஆக…… உங்கள் சாப்பாட்டை சாப்பிட்டு ஏற்க்க்க்கனவே
  அரண்டு போன அவரின் கண்களுக்கு இப்போ நீங்கள் எதைசமைத்தால்லும்பயப்படுகிறார் அப்படித்தானே………………..?

 • 24. குந்தவை  |  1:32 பிப இல் திசெம்பர் 25, 2008

  //ஆக…… உங்கள் சாப்பாட்டை சாப்பிட்டு ஏற்க்க்க்கனவே
  அரண்டு போன அவரின் கண்களுக்கு இப்போ நீங்கள் எதைசமைத்தால்லும்பயப்படுகிறார் அப்படித்தானே………………..?

  Yes Professor.

 • 25. kalyanakamala  |  6:01 பிப இல் ஜனவரி 1, 2009

  ஆமாம் மிகவும் கெட்டிக்கார அம்மாதான்!

  //இதுக்கு தான் ஸ்கூலுக்கு போற மாறி கெளம்பி வழியில கட் அடிக்கனும்கிறது.
  அப்படியே ஏதாவது படத்துக்கு போய் டைம் பாஸ் பண்ணி இருக்கலாம்.

  உங்களுக்கு விவரம் பத்தலை அக்கா //…
  (மக்குப்பிள்ளைதான்!)
  அன்புடன்
  கமலா

 • 26. அனாமதேய  |  3:17 பிப இல் ஜூலை 5, 2013

  மறக்க முடியாத கட் இல்ல ?????????????

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,778 hits
திசெம்பர் 2008
தி செ பு விய வெ ஞா
« நவ்   ஜன »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

%d bloggers like this: