எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு

ஜனவரி 12, 2009 at 4:53 முப 20 பின்னூட்டங்கள்

                    கண்மணி மான் படத்துக்கு கலர் அடித்து கொண்டிருந்தாள். நானும் அருகே உக்காந்து “கண்மணி மெதுவா அடி அப்பத்தான் ஒரே சீராக அடிக்க முடியும், கலர் வெளியே வராமல் அழகா இருக்கும்” என்று அடிக்கடி நியாபகபடுத்தி கொண்டிருந்தேன்.

            அழகாக கலர் பண்ணிக் கொண்டிருந்தாள், ஆனால் கடைசியில் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாள். அதனால் மானுடைய வாயின் மேலும் கீழும் ரெண்டு கோடுகள் வெளியே நீட்டி கொண்டிருந்தது.

அழகா பண்ணியிருக்கே, அடுத்த தடவை இன்னும் கொஞ்சம் மெதுவா பண்ணு, இந்த மாதிரி கோடு எல்லாம் வராது சரியா ” என்றேன்.

கண்மணிக்கு தான் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதே, அதனால உடனே எப்படி சமாளித்தாள் பாருங்கள்,
இல்லம்மா நான் மானுக்கு மீசையும், தாடியும் வரைந்தேன்“.
(இந்த அம்மா இதெல்லாம் என்னிக்குத்தான் படிக்க போறாளோ)

            நானும் அம்பது பதிவு எழுதிட்டேன் 🙂

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

குழந்தை வளர்ப்பு வழக்கொழிந்த வார்த்தைகள்.

20 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VIjay Kumar  |  5:08 முப இல் ஜனவரி 12, 2009

    கண்மணை வண்ணம் திட்டியதை ஒரு புகைப்படம் எடுத்து போட்டிருக்கலாமே. நாங்களும் ரசிப்போம்ல.

  • 2. குந்தவை  |  5:42 முப இல் ஜனவரி 12, 2009

    //ஒரு புகைப்படம் எடுத்து போட்டிருக்கலாமே. நாங்களும் ரசிப்போம்ல.

    போட்டிருவோம், கொஞ்சம் டைம் ஆகும்.

  • 3. Bhuvanesh  |  7:14 முப இல் ஜனவரி 12, 2009

    //“இல்லம்மா நான் மானுக்கு மீசையும், தாடியும் வரைந்தேன்“.
    (என்ன மாதிரி) குழந்தைகளின் “Presence of Mind” பிரமிக்க வைக்கும்! (உங்களை மாதிரி) வளர்ந்தவுடன் அது எல்லாம் எங்க தான் போகுதோ??

    //நானும் அம்பது பதிவு எழுதிட்டேன்
    வாழ்த்துக்கள் அக்கா!

  • 4. குந்தவை  |  8:47 முப இல் ஜனவரி 12, 2009

    //(என்ன மாதிரி) குழந்தைகளின் “Presence of Mind” பிரமிக்க வைக்கும்! (உங்களை மாதிரி) வளர்ந்தவுடன் அது எல்லாம் எங்க தான் போகுதோ??

    முடியல தம்பி. வாபஸ்வாங்கிக்கிறேன்.

    //வாழ்த்துக்கள் அக்கா
    நன்றி தம்பி.

  • 5. பிரபு  |  11:49 பிப இல் ஜனவரி 12, 2009

    “இல்லம்மா நான் மானுக்கு மீசையும், தாடியும் வரைந்தேன்“.//

    ///

    அறிவு,,அறிவு….ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்களும் இருக்கீங்களே

  • 6. பிரபு  |  11:51 பிப இல் ஜனவரி 12, 2009

    நானும் அம்பது பதிவு எழுதிட்டேன்
    வாழ்த்துக்கள் அக்கா!

  • 7. குந்தவை  |  4:15 முப இல் ஜனவரி 13, 2009

    //வாழ்த்துக்கள் அக்கா!
    நன்றி தம்பி.

  • 8. குந்தவை  |  4:16 முப இல் ஜனவரி 13, 2009

    //ம்ம்ம்ம்ம்ம்ம் நீங்களும் இருக்கீங்களே

    you too Prabhu…..

  • 9. Sriram  |  4:19 முப இல் ஜனவரி 13, 2009

    உங்களுக்கு கண்மணியோட சாமர்த்தியத்தை கண்டு பொறாமைன்னு சொல்லுங்க…
    என இந்த காலத்துல நான், கண்மணி,Bhuvanesh போன்ற ஒத்த வயது உடையவர்கள் எல்லாம் படு ப்ரில்லியன்ட் ஆக்கும்.

    அப்புறம் பதிவு பதிஞ்சதுக்கு என் வாழ்த்துக்கள்…கூடவே பொங்கல் வாழ்த்துக்களும்…

  • 10. குந்தவை  |  5:43 முப இல் ஜனவரி 13, 2009

    //உங்களுக்கு கண்மணியோட சாமர்த்தியத்தை கண்டு பொறாமைன்னு சொல்லுங்க…

    அடக் கடவுளே , இது வேறையா… என் மேல என்ன கோபம் உங்களுக்கெல்லாம்.

    //இந்த காலத்துல நான், கண்மணி,Bhuvanesh போன்ற ஒத்த வயது உடையவர்கள் எல்லாம் படு ப்ரில்லியன்ட் ஆக்கும்.

    சரி…சரி….புத்திசாலிகள் தான் நீங்கள் எல்லோரும்.

  • 11. குந்தவை  |  5:45 முப இல் ஜனவரி 13, 2009

    வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம் தம்பி.

    எல்லோருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்

  • 12. Mukundan  |  2:51 பிப இல் ஜனவரி 13, 2009

    //இல்லம்மா நான் மானுக்கு மீசையும், தாடியும் வரைந்தேன்“.//

    நெஜமாவே நல்லா யோசிக்கறாங்க 🙂

    ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

  • 13. குந்தவை  |  4:27 முப இல் ஜனவரி 14, 2009

    //நெஜமாவே நல்லா யோசிக்கறாங்க 🙂
    🙂

    //ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
    Thank U Mukundan.

  • 14. மோகன்  |  4:57 பிப இல் ஜனவரி 14, 2009

    // இல்லம்மா நான் மானுக்கு மீசையும், தாடியும் வரைந்தேன் //

    ரசிக்க வைத்தது கண்மணியின் சூட்டிகையான பதில்

    50 பதிவுகள் எழுதியமைக்கு வாழ்த்துகள் அக்கா.

  • 15. Janu  |  11:48 பிப இல் ஜனவரி 14, 2009

    Hi kunthavai,

    cho sho chweet kunthavai. கண்மணி யின் சாமார்த்தியம் ரொம்ப நைஸ் . இது போல மூக்கு உடை படுவதும் சுகம் தானே. மிக ரசித்து படித்தேன் உங்களின் எழுத்து நடையை.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு, (15 நாள் தானே ஆச்சு ) மற்றும் சுவைமிகு பொங்கல் வாழ்த்துகள்.

    ஸ்ரீ ராம், புவனேஷ் நீங்க எல்லோரும் ‘வளர்ந்த’ பசங்க என்று தானே நான் நெனச்சேன். 🙂

  • 16. பிரபு  |  3:33 முப இல் ஜனவரி 15, 2009

    //
    you too Prabhu…..
    ///
    உன்மைய யாருவ்வேனாலும் சொல்லலாம்

  • 17. kunthavai  |  4:59 முப இல் ஜனவரி 15, 2009

    ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மோகன்.

  • 18. kunthavai  |  5:08 முப இல் ஜனவரி 15, 2009

    //cho sho chweet kunthavai. கண்மணி யின் சாமார்த்தியம் ரொம்ப நைஸ் . இது போல மூக்கு உடை படுவதும் சுகம் தானே. மிக ரசித்து படித்தேன் உங்களின் எழுத்து நடையை

    ரசித்தமைக்கு நன்றி ஜானு .

    //உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு, (15 நாள் தானே ஆச்சு ) மற்றும் சுவைமிகு பொங்கல் வாழ்த்துகள்.

    நன்றி ஜானு. உங்களுக்கும் என்னுடய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    //ஸ்ரீ ராம், புவனேஷ் நீங்க எல்லோரும் ‘வளர்ந்த’ பசங்க என்று தானே நான் நெனச்சேன்.

    அது ஒண்ணுமில்ல ஜானு குழந்தைகளை பார்த்தால் குழந்தை ஆகிவிடுவார்கள், இளம் பெண்களை பார்த்தால் இளைஞ்சர்கள் ஆகிவிடுவார்கள்.

  • 19. kunthavai  |  5:10 முப இல் ஜனவரி 15, 2009

    //உன்மைய யாருவ்வேனாலும் சொல்லலாம்

    🙂 எல்லாரும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க. ஒண்ணும் சொல்றதுகில்ல

  • 20. Carter  |  7:58 முப இல் பிப்ரவரி 10, 2009

    தாயை போல பிள்ளை நூலை போல சேலை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

  • 37,085 hits
ஜனவரி 2009
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: