வழக்கொழிந்த வார்த்தைகள்.

ஜனவரி 15, 2009 at 7:13 முப 22 பின்னூட்டங்கள்

                  வழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீராம் தம்பிக்கு ரெம்ப நன்றி (ர்ர்ர்ர்ர்ர்ர்….).

                   ரெம்ப நாளா இதை பற்றி யோசித்து எதை எழுதன்னு தெரியாமல், கடைசியில் என் வீட்டுக்காரரிடம் போய் கேட்டேன். அவர் வழக்கம் போல என்னை ஏற இறங்க பார்த்த ஒரு பார்வைல , திரும்பவும் தனியா உருண்டு புரண்டு யோசித்ததில் ஒரு வார்த்தையை கண்டுபிடித்தேன்.

                        ‘பரிகாரம்’ என்ற வார்த்தைக்கு வழக்கில் உள்ள அர்த்தம் ‘பிராயச்சித்தம்’ (எனக்கு தெரிந்து) . பொதுவா இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் தான் உபயோகிப்பார்கள். (எ.டு) பாவத்திற்கு பரிகாரம் செய்யவேண்டும்.

                         நான் சமீபத்தில் இந்த ‘பரிகாரம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. அது என்னன்னா ‘வைத்தியம்’ 

             ‘கண்ணுக்கு பரிகாரம் பண்ணபோறேன்னு’ சொன்னால் –> ‘கண்ணுக்கு வைத்தியம் பண்ணப்போறேன்’ என்று அர்த்தம். அர்த்தம் தான் புதுசே தவிர , இது நமக்கு ரெம்ப தெரிந்த வார்த்தை ஆனதால் இதற்கு மேல் விளக்க ஒன்றுமில்லை.         

                   எடுத்துக்காட்டு எல்லாம் சொல்லி முடிந்த அளவு விளக்கியிருக்கிறேன், இருந்தாலும் சந்தேகம் இருந்தால் கேட்டுடுங்க, அப்புறம் தப்பு தப்பாய் பேசாதீங்க.

                   இனிமேல் எதற்காச்சும் பரிகாரம் தெரியனும்ன்னா ஜோசியர் கிட்ட போகாதீங்க வைத்தியர் கிட்ட போங்க சரியா.

                   இதோட நான் முடிக்க கூடாதாம், மூன்று பேரை வேற இழுத்துவிடனுமாம். அதுக்குத் தான் நிறைய அப்பாவி மக்கள் இருக்காங்களே, அதனால

         ௧. ரஜோலன் — புதுசா பதிவு ஆரம்பிச்சிருக்கார். ரெம்ப பொறுப்பா சில கட்டுரைகளையும் எழுதியிருக்கார், அதனால இந்த விஷயத்திலேயும் பொறுப்பா இருந்து நமக்கு சில வழக்கில் இல்லாத வார்த்தைகளை அறிமுகபடுத்துவார் என்று அழைப்பு விடுக்கிறேன்.

         ௨. அடலேறு — இவருக்கு அறிமுகம் வேண்டாம். நிறைய கவிதைகள் எல்லாம் எழுதி புல்லரிக்க வைப்பவர் . கொஞ்ச நாளா அவரை காணோம், (ரெம்ப பிசியோ என்னமோ). இருந்தாலும் பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன்.

              ௩. விஜய் — எதைப்பற்றி எழுதினாலும் சுவராஸ்யமா எழுதுபவர். நமக்கும் கண்டிப்பா சுவராஸ்யமா ஒரு புது வார்த்தையை அறிமுகப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

             இந்த தொடரை உங்க கையில ஒப்படைத்து விட்டேன் நண்பர்களே , இனிமேல் அதன் வாழ்நாள் உங்க கையில் தான் இருக்கு வரட்டா.

Advertisements

Entry filed under: ரசித்தவை.

எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு தவிப்பு

22 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Sriram  |  2:43 பிப இல் ஜனவரி 15, 2009

  Me the first

 • 2. Sriram  |  2:43 பிப இல் ஜனவரி 15, 2009

  ????!!!!

 • 3. VIjay Kumar  |  4:51 பிப இல் ஜனவரி 15, 2009

  நல்ல தகவல். அப்படியே, என்னையும் மாட்டி விட்டுட்டீங்களே. பரவாயில்லை. நான் உங்களை ஏமாற்ற வில்லை. வெட்டிவம்பு வந்து பாருங்க. !!!

  அன்புடன்,
  விஜய்

 • 4. மோகன்  |  5:08 பிப இல் ஜனவரி 15, 2009

  நான் தான் முதல்ல கமெண்ட்?

 • 5. மோகன்  |  5:08 பிப இல் ஜனவரி 15, 2009

  // ‘பரிகாரம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. அது என்னன்னா ‘வைத்தியம்’ //

  நம்பலாமா?

 • 6. குந்தவை  |  7:53 முப இல் ஜனவரி 16, 2009

  //நம்பலாமா?

  முதலுக்கே மோசம் பண்ணுரீங்களே மோகன். இது நியாயமா?
  இதுக்குத்தான் எப்பவாச்சும் உண்மை பேசக்கூடாது போல.

 • 7. குந்தவை  |  7:54 முப இல் ஜனவரி 16, 2009

  //நான் தான் முதல்ல கமெண்ட்?

  No தம்பி.

 • 8. குந்தவை  |  7:56 முப இல் ஜனவரி 16, 2009

  //நல்ல தகவல். அப்படியே, என்னையும் மாட்டி விட்டுட்டீங்களே. பரவாயில்லை. நான் உங்களை ஏமாற்ற வில்லை. வெட்டிவம்பு வந்து பாருங்க. !!! அன்புடன், விஜய்

  ஆங்..இது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். வந்து பார்க்கிறேன்.

 • 9. குந்தவை  |  7:57 முப இல் ஜனவரி 16, 2009

  //????
  இது தான் கேள்வி கணையோ? ஆனா இது எதுக்குன்னு சொன்னா வசதியா இருக்குமில்ல.

 • 10. குந்தவை  |  7:58 முப இல் ஜனவரி 16, 2009

  //Me the first

  Yes thampi

 • 11. பிரபு  |  1:51 முப இல் ஜனவரி 19, 2009

  யோசிச்சு எழுதியிருக்கீங்க
  யோசிக்க வச்சிருக்கீங்க..

 • 12. Rajolan Nelson  |  5:49 முப இல் ஜனவரி 20, 2009

  நம்பிக்கையை கெடுக்க கூடாது என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும்
  இப்படி எல்லாம் உசுப்பி விட்டு மண்டை காய வைக்க
  எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா

  சரி சரி போட்டின்னா நமக்கு அல்வா சாப்பிடறமாதிரி . .

 • 13. குந்தவை  |  9:06 முப இல் ஜனவரி 20, 2009

  //இப்படி எல்லாம் உசுப்பி விட்டு மண்டை காய வைக்க
  எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா
  எப்படியோ, நாங்களும் யோசிக்கிறோம் இல்ல.

  சீக்கிரம் நல்ல பதிவை எதிர்ப்பார்க்கிறோம்.

 • 14. janu  |  11:58 முப இல் ஜனவரி 20, 2009

  அன்புத்தோழி குந்தவை,

  நீங்க தமிழில் பி. ஹெச். டியா ? புகுந்து விளையாடறீங்க.. நானும் விழுந்து , பிராண்டி (பக்கத்தில் இருக்கும் என் ஆத்துக்காரரை தான்) யோசிச்சாலும் எந்த ஒரு வாரத்தையும் தோணலை பா. அவர் சொன்னா.. ஜானு நாம பேசற தமிழே வழகொண்டிஞ்ச தமிழ் தான் .. சோ புதுசா மூளைய போட்டு இப்படி இம்சை பண்ணாதே.. அப்பறம் அதுக்கு ‘பரிகாரம்’ பண்ண முடியாதுனு .. ஏன் குந்தவை நான் சரியா புரிஞ்சி கிட்டேனா ..இந்த வார்த்தைக்கு அர்த்தத்தை..?

  நிறைய எதிர்பார்க்கும்,
  ஜானு

 • 15. குந்தவை  |  4:22 முப இல் ஜனவரி 21, 2009

  ஹா…ஹா..
  //நீங்க தமிழில் பி. ஹெச். டியா ? புகுந்து விளையாடறீங்க..
  இதெல்லாம் ரெம்ப ஓவராத்தெரியலையா உங்களுக்கு?

  //மூளைய போட்டு இப்படி இம்சை பண்ணாதே.. அப்பறம் அதுக்கு
  ‘பரிகாரம்’ பண்ண முடியாதுனு ஏன் குந்தவை நான் சரியா புரிஞ்சி கிட்டேனா ..இந்த வார்த்தைக்கு அர்த்தத்தை..?

  சமத்து….கற்பூரம்….

 • 16. அடலேறு  |  12:21 பிப இல் ஜனவரி 23, 2009

  சரி தாங்க குந்தவை கொஞ்சம் வேலை அதன் வலை பக்கம் தலை கட்ட முடியல . கண்டிப்பா உங்க அழைப்பை ஏதுக்கற, உங்க பதிவு மிக நல்ல இருக்கு வாழ்த்துக்கள் குந்தவை.

 • 17. மோகன்  |  2:15 பிப இல் ஜனவரி 23, 2009

  அக்கா, புது தளத்திற்கு (http://mpmohankumar.wordpress.com/) எனது பதிவை மாற்றி உள்ளேன். உங்கள் புக் மார்க் அப்டேட் செய்ய வேண்டுகிறேன்.

 • […] ன்னு கண்டிப்பா அழைப்பை ஏற்க்க வைத்த தோழி குந்தவைக்கு நன்றி […]

 • 19. அடலேறு  |  10:58 முப இல் ஜனவரி 24, 2009

  குந்தவை தொடர் பதிவு இங்கே உள்ளது.தவறாமல் தங்கள் கருத்தை பதிவு செய்யவும்

 • 20. நிலவன்  |  5:28 முப இல் மார்ச் 11, 2009

  வணக்கம் தமிழோடு விளையாடும் தமிழ் நங்கை,

  ‘பரிகாரம்’ பிரயச்சித்தம் எண்டு பொருள்படத்தான் நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அமைதிவழி தவழாத ஈழத்தில் நானிருந்தபோது அங்கே ‘பரியாரம்’ எண்டு ஒரு சொல் பேச்சுவழக்கில் கேள்விப்பட்டிருகின்றேன். பரியாரம் என்பதனை அவர்கள் நோய் தீர்த்தல் என்னும் கருத்திற் பாவிக்கின்றாரகள், அதுதான் ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட பரிகாரமோ தெரியவில்லை என்றாலும் இன்னொரு முறை அந்தப் புத்தகத்தைப் பாருங்கள் பரிகாரமா பரியாரமா என்பதனை என்னையும் குழப்பிவிட்டீர்கள். அத்தோடு சித்தவைத்திய முறையில் வைத்தியம் பார்ப்பவரை அவர்கள் பரியாரி என்றழைப்பார்கள். என்னடா இது வியாபாரி மாதிரிவந்திட்டே எண்டு யோசிக்காம ஒருக்கா நீங்களும் தேடுங்கள் நானும் தேடுகின்றேன். அதேபோல் பல சொற்கள் திரிபடைந்துவிட்டன. ஊர்களின் பெயர்கள் ஏதோ ஒரு தொலைவிலிருந்து முடிவிற்கு வந்துவிட்டன.

 • 21. saravanan kulandaiswamy.S  |  12:15 பிப இல் நவம்பர் 20, 2009

  Hi Kunthavai,
  I have created my own blog http://sskswamy.blogspot.com/ it is more in to political economics…this is to inform you about my first post in the blog.

  Convey my wishes to knamani and your hubby…

 • 22. குந்தவை  |  11:52 முப இல் நவம்பர் 22, 2009

  Saravanan,
  வலையில சிக்கிகிட்டீங்களா. வாழ்த்துக்கள் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜனவரி 2009
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: