தவிப்பு

ஜனவரி 26, 2009 at 6:10 முப 18 பின்னூட்டங்கள்

 குழந்தையை  வீட்டில்  விட்டு  வேலைக்கு செல்லும் பொது நிறைய பேருக்கு மனதிற்குள் அடிக்கடி நடக்கும் பட்டிமன்றத்தின் தலைப்பு வேலையா? குழந்தையா? குழந்தைக்கு நாம் அநியாயம் செய்கிறோமோ என்ற தவிப்பு அப்பப்ப என் மனதிலும் தோன்றும்.

             நேற்று டி.வி பக்கத்தில் உள்ள புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்களை அடுக்கி(!)  கொண்டிருந்தேன். கண்மணி டி.வியிடம் பேசிக்கொண்டிருந்தாள்( கேள்வியும் பதிலும் அவளே ).

“உங்க அப்பா எங்க போயிக்காங்க?”

“ஆபிசுக்கா…..”

“உங்க அம்மா எங்க போயிருக்காங்க?”

“ஆபிசுக்கா?..”

“ஒன்பது மணிக்கு வந்திருவாங்க…..” என்றாள் ஆறுதலாக. 

நான் ஒரு நிமிஷம் சிலையாக நின்றேன். என் மனதில் அலையாக எழுந்த உணர்ச்சிகளை என்னவென்று சொல்ல?

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

வழக்கொழிந்த வார்த்தைகள். குழந்தையின் நேரம்

18 பின்னூட்டங்கள் Add your own

 • 1. பிரபு  |  5:26 பிப இல் ஜனவரி 26, 2009

  புத்தகங்களை அடுக்கி(!)
  ///
  அப்புடியா??/

  //
  என் மனதில் அலையாக எழுந்த உணர்ச்சிகளை என்னவென்று சொல்ல?
  ///

  சில சமயங்களில் தமிழுக்கு தட்டுப்பாடு ஏற்ப்படுவதுண்டு

 • 2. பிரபு  |  5:27 பிப இல் ஜனவரி 26, 2009

  நான் தான் பஸ்டு
  ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

 • 3. Bhuvanesh  |  7:32 முப இல் ஜனவரி 27, 2009

  கொஞ்சம் கஷ்டம் தான்!!

  //என் மனதில் அலையாக எழுந்த உணர்ச்சிகளை என்னவென்று சொல்ல?

  நீங்கள் சொல்லாமலே எங்களால் உங்கள் வலியை உணர முடிகிறது!!

 • 4. நெ.ரெஜோலன்  |  2:33 பிப இல் ஜனவரி 27, 2009

  வேதனை தரும் விசயம்தான் . . .

  அனுபவித்ததால் அதன் வேதனை எனக்கும் புரியும்

 • 5. Sriram  |  3:26 முப இல் ஜனவரி 28, 2009

  உணர்ச்சிவசப் படுவதை விட்டு விட்டு, கண்மணிக்காக சில நேரம் ஒதுக்குவது பற்றி யோசியுங்கள் அக்கா…

 • 6. Mukundan  |  9:51 முப இல் ஜனவரி 31, 2009

  சிறிது நேரம் ஆனாலும் குழந்தைகள் பிரிவை தாங்குவதில்லை…
  பெற்றோரும் தான் 😦

 • 7. Janu  |  2:50 முப இல் பிப்ரவரி 1, 2009

  அன்புள்ள குந்தவை ,

  என் கேள்வி அப்படியும் முழு நேர வேலைகள் நமக்கு தேவை தானா என்பது தான் ? அவர்கள் சற்று பெரியவர்கள் ஆகிற வரை அவர்களுடன் இருக்கலாம் !! நீங்கள் என்ன நினைகிறீர்கள்???

  தவறாக நினைக்காதீர்கள் .. நான் இங்கு சொல்வது அம்மாவோ அப்பாவோ இருவரில் ஒருவரை தான்.. யார் நல்ல வேலையில் இருக்கிறார்களோ அவர்களை விடுத்து, மற்றவர் வீட்டில் இருந்த வண்ணம் குழந்தையை பார்த்துக் கொள்வது நல்லது என்பது என் கருத்து.. வாட் ஸே , குந்தவை?

 • 8. kunthavai  |  5:32 முப இல் பிப்ரவரி 1, 2009

  //நான் தான் பஸ்டு
  ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

  பிரபு தம்பி நீங்க தான் முதல்ல வந்திருக்கீங்க.

 • 9. kunthavai  |  5:41 முப இல் பிப்ரவரி 1, 2009

  வாங்க புவனேஷ் தம்பி. உங்கள ரெம்ப நாளாக் காணோம். இப்படி சொல்லாம கொள்ளாம அப்ஸ்கான்ட் ஆகாதீங்க தம்பி.

  //நீங்கள் சொல்லாமலே எங்களால் உங்கள் வலியை உணர முடிகிறது!!

  அதிலும், கண்மணிக்கு உடம்பு சரியில்லாம இருக்கும் போது ஆபீசுக்கு போகிறது கொடுமையா இருக்கு .

 • 10. kunthavai  |  5:47 முப இல் பிப்ரவரி 1, 2009

  //உணர்ச்சிவசப் படுவதை விட்டு விட்டு, கண்மணிக்காக சில நேரம் ஒதுக்குவது பற்றி யோசியுங்கள் அக்கா…

  வாங்க ஸ்ரீராம் தம்பி. கண்மணி ஒன்பது மணின்னு சொன்னதை வைத்து அவ்வளவு லேட்டாகும் என்று நினைத்து விடாதீர்கள்.
  நான் மத்தியானம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன். ஆனாலும் அவளுடைய ஏக்கமான பேச்சைக்கேட்டு எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது.

 • 11. kunthavai  |  5:49 முப இல் பிப்ரவரி 1, 2009

  //சிறிது நேரம் ஆனாலும் குழந்தைகள் பிரிவை தாங்குவதில்லை…
  பெற்றோரும் தான்

  சரியாச் சொன்னீங்க முகுந்தன்.

 • 12. குந்தவை  |  6:19 முப இல் பிப்ரவரி 1, 2009

  தவறாக நினைக்க இதில் ஒன்றும் இல்லை ஷ்யாமா. நான் மத்தியானம் இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன்.
  உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.

 • 13. Carter  |  7:54 முப இல் பிப்ரவரி 10, 2009

  இக்கரைக்கு அக்கரை பச்சை. என்ன செய்வது நிம்மதி இருந்தால் பணம் இல்லை பணம் இருந்தால் நிம்மதி இல்லை.

 • 14. மோகன்  |  1:56 பிப இல் பிப்ரவரி 11, 2009

  உண்மையிலேயே இதை கேட்பதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் உள்ளது. என்ன செய்வது?

 • 15. Bindu  |  9:18 முப இல் மே 12, 2010

  padikkum podhu en kangalil kulam katti nirkiradhu.. innum konjam naatkalil naanum en 1 vayadhu kuzhandhaiyai vittu vittu velaikku poga vendum endru ninaikkum podhu..

 • 16. குந்தவை  |  9:33 முப இல் மே 12, 2010

  // padikkum podhu en kangalil kulam katti nirkiradhu..
  😦

  //innum konjam naatkalil naanum en 1 vayadhu kuzhandhaiyai vittu vittu velaikku poga vendum endru ninaikkum podhu..

  இப்ப உள்ள குழந்தைகள் எல்லம் ரெம்ப smart ங்க கவலைப்படாதீங்க. ஆனா வீட்டுக்கு வந்தபிறகு maximum அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் அன்பை உணர செய்யுங்கள்.

 • 17. Bindu  |  9:53 முப இல் மே 12, 2010

  Hope so.. I can show my love only during weekends. I work in Bangalore and I have to leave my kid with my parents in Chennai. I just hope that he will manage somehow.

 • 18. குந்தவை  |  4:12 முப இல் மே 13, 2010

  //I can show my love only during weekends.
  😦

  //I work in Bangalore and I have to leave my kid with my parents in Chennai.
  I don’t know what to tell. Try to keep ur kid with you.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
ஜனவரி 2009
தி செ பு விய வெ ஞா
« டிசம்பர்   பிப் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

%d bloggers like this: