குழந்தையின் நேரம்

பிப்ரவரி 4, 2009 at 7:03 முப 16 பின்னூட்டங்கள்

 பொதுவாக குழந்தை பிறக்கும் போது சிலர் ‘குழந்தை லச்சுமியை கூடவே கூட்டிட்டு வந்திருக்கா’ என்று சொல்லுவார்கள்.  சில மரமண்டைகள் அதை தவறுதலாக எண்ணி என்னமோ குழந்தைகள் என்றாலே பொன்னையும்  புகழையும் கொண்டுவரவேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் மடமையை என்னவென்று சொல்ல.
 
        திருமணமான புதிதில், எனக்கு தெரிந்த ஒருவருடன், அவருடைய தோழி  வீட்டிற்கு சென்றிருந்தேன்.  அவங்களுக்கு இரண்டு குழந்தைகள், முதல் குழந்தைக்கு ஒரு ஆறு வயதிற்கும், இரண்டாவது பெண்குழந்தை பத்து மாதம் ஆகியிருந்தது. வீட்டை நேர்த்தியாக வைத்திருந்தார், வீடெல்லாம் பக்தி மணம் கமழ்ந்தது. 
 
        நாங்கள் பொதுவாக பேசிக்கொண்டிருந்தோம்,  அந்த பெண்குழந்தை, தவண்டு வீடெல்லாம் சுற்றி வந்தது. சிறிது நேரம் கழித்து அம்மா முகத்தை பார்ப்பதும் கிச்சனை பார்ப்பதுமாக இருந்ததை பார்த்து, “என்னங்க உங்கள் குழந்தைக்கு பசிக்குதோ என்னமோ பாருங்களேன் ” என்றேன்.
   
       அந்த தாயாரோ கண்டுகொள்ளவே இல்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, அந்த குழந்தையின் வாடிய முகம் என்னை என்னமோ செய்தது.

      சிறிது நேரம் கழித்து, அந்த குழந்தையின் அப்பா வீட்டிற்கு வந்தார், வந்தவுடன் அந்த குழந்தையை தூக்கி, நிமிடத்தில் பால் கரைத்து கொடுக்க ஆரம்பித்தார். ரெண்டே நிமிடத்தில் மட மடவென்று அவ்வளவு பாலையும் குழந்தை குடித்து முடித்தது.
 
     சிறிது நேரத்தில் அந்த வீட்டிலிருந்து கிளம்பிவிட்டோம் , ஆனாலும் ,அந்தம்மா வேண்டும் என்றே பால் கொடுக்க வில்லையா அல்லது தெரியாமல் நடந்ததா என்று எனக்கு அடிக்கடி  கேள்வி தோன்றும். அந்த கேள்விக்கு விடை சில நாட்களில் எனக்கு தோழி மூலம் அறிந்தபோது நிஜமாகவே அதிர்ந்து விட்டேன்.

    அவர் அந்த குழந்தையை கருத்தரித்த சமையத்தில் அவங்க வீட்டில் ரெம்ப பிரச்சனை  வந்ததாம், அதனால் அவள் வந்த நேரம் சரியில்லை என்று அந்த குழந்தையை பிடிக்கவே செய்யாதாம்.   இன்னும் இந்த மாதிரி பெண்கள் இருக்கின்றார்களா? என்னால் நம்ப முடியவில்லை. அதன் பிறகு அந்த பெண்மணியை பார்க்கவில்லை, ஆனால் அந்த குழந்தையின் முகம் இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

Advertisements

Entry filed under: அனுபவம்.

தவிப்பு வீட்டுக்குள்ள நடந்தது

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Bhuvanesh  |  7:41 முப இல் பிப்ரவரி 4, 2009

  ME the First

 • 2. Bhuvanesh  |  7:48 முப இல் பிப்ரவரி 4, 2009

  அய்யய்யோ பதிவ படிக்காம “ME the First” விளையாடிட்டேன்! மனுச்சுகொங்க!!

  இப்படியும் சில மனுசங்களா?? பாவம் அந்த குழந்தை!!

 • 3. Sriram  |  8:24 முப இல் பிப்ரவரி 4, 2009

  Me the First

 • 4. Sriram  |  8:26 முப இல் பிப்ரவரி 4, 2009

  என்னை மாதிரி குழந்தைகளுக்கு தான் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள் அக்கா….

 • 5. குந்தவை  |  8:52 முப இல் பிப்ரவரி 4, 2009

  புவனேஷ் தம்பி, மன்னித்தேன்.
  //இப்படியும் சில மனுசங்களா?? பாவம் அந்த குழந்தை
  நிஜமாகவே ரெம்ப பாவம் தான். சிலர் இது போல் வீட்டிற்கு மருமகள் வந்தவுடன் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் , மருமகளை போட்டு வாட்டிவிடுவார்கள்.

 • 6. குந்தவை  |  8:54 முப இல் பிப்ரவரி 4, 2009

  //என்னை மாதிரி குழந்தைகளுக்கு தான் எத்தனை பிரச்சினைகள் பாருங்கள் அக்கா…
  ம…இப்படி சொன்ன குழந்தைக்கு, எனக்கு தெரிந்து அடி கிடைக்காத பிரச்சனை தான்.

 • 7. Rajolan Nelson  |  11:44 முப இல் பிப்ரவரி 4, 2009

  நிச்சயமாக இந்த பதிவு என் சின்ன இதயத்தை கனக்க வைத்தது. அதே நேரத்தில் இப்படி பட்ட மூடர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே என்ற வேதனை ஒரு பக்கம்.

  மேலும் இன்று பல அம்மா (அப்படிபட்ட வார்த்தைக்கு அருகதையில்லாத ஜடங்கள்) க்கள் தங்கள் குழந்தை சரிவர கவனிப்பதில்லை என்பது கசக்கின்ற உண்மை. அவர்களின் நேரம் அனைத்தும் பல காரியங்களுக்கு தேவைப்படுவதால் ஏற்ப்பட்ட கொடுமை இது

  இப்படி பலர் இருப்பதால்தானோ என்னவோ அப்பாக்கள் முன்பெல்லாத அளவுக்கு குழந்தைகளை கவனிக்க துவங்கி உள்ளனர்.

  நல்ல பயனுள்ள பதிவு..

  இதை படிக்கும் ஒரு தாய் திருந்தினால் போதும் தோழி

 • 8. Janu  |  9:43 முப இல் பிப்ரவரி 6, 2009

  கேட்காமலேயே பசி அறிந்து ஊட்டுவதால் தான் எல்லா ஜீவ ராசிகளுமே அம்மா னு அழைக்கிறோம்.. இப்படி கண் முன் குழந்தை பசியில் இருக்கும்போது .. ..ச்சே என்ன ஒரு ஜன்மம் அவங்க!….அவங்க அப்பா குறைந்த பட்சம் தட்டிக் கேட்டிருக்கலாம்.. அவர் நடந்துகரத்தை பார்த்தால் எல்லாம் அவருக்கே தெரிஞ்சே அனுமதிக்கிறார் போல தெரியுது.. இது போன்ற பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளின் எதிர் காலத்தை நினைத்தால் உண்மையில் ரொம்ப வருத்தமா இருக்கு குந்தவை..

  //இன்னும் இந்த மாதிரி பெண்கள் இருக்கின்றார்களா? என்னால் நம்ப முடியவில்லை.

  அந்தக் காலத்தில் எல்லாம் இப்படிப் பட்ட அம்மாக்கள் இருந்திருப்பார்களான்னு எனக்கு சந்தேகமே ..

 • 9. பிரபு  |  10:07 பிப இல் பிப்ரவரி 6, 2009

  இதையெல்லாம் படித்தாலே எனக்கு கோபம்தான் வரும்
  இதுகளையெல்லாம் என்ன செய்வது
  பகுத்தறிவில்லா பதர்கள்
  நம் வெற்றிக்கு யார் வேண்டுமானாலும் காரணாமாக இருக்கலாம்
  நம் தோல்விக்கு நாம் மட்டுமே காரணம்
  இதை உணர்ந்தால் அப்படி நடந்துக்க மாட்டார்கள்

 • 10. Mukundan  |  2:36 பிப இல் பிப்ரவரி 7, 2009

  இது போன்ற மகா பாவிகளை என்ன செய்வது..
  பேயானாலும் தாய் என்று சொல்லுவார்கள் .. ஆனால் இது தாயானாலும் பேய்
  குழந்தை தான் பாவம்..

 • 11. graceravi  |  9:08 முப இல் பிப்ரவரி 10, 2009

  இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்கள் என்று தெரிந்துதான் ஆண்டவர் தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை என்று சொன்னார் போலும் .

 • 12. குந்தவை  |  9:34 முப இல் பிப்ரவரி 10, 2009

  //இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்கள் என்று தெரிந்துதான் ஆண்டவர் தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை என்று சொன்னார் போலும் .
  நீங்க சொன்னா சரிதான் அக்கா.

 • 13. வல்லபன்  |  7:10 முப இல் பிப்ரவரி 12, 2009

  இப்படியும் ஒரு லூசுத் தனமான தாயா? ஒரே ஆறுதல் அந்த பெண்ணுடைய(பேயுடைய) கணவர். அவர்தான் எனக்கு தாயாக தெரிந்தார்.

 • 14. குந்தவை  |  7:21 முப இல் பிப்ரவரி 12, 2009

  வாங்க….. முதல் தடவையா வந்திருக்கீங்க….

  //இப்படியும் ஒரு லூசுத் தனமான தாயா? ஒரே ஆறுதல் அந்த பெண்ணுடைய(பேயுடைய) கணவர். அவர்தான் எனக்கு தாயாக தெரிந்தார்.

  பெரியவர்கள் எப்படியோ, ஆனால் குழ்ந்தை ரெம்ப…. பாவம் தான்…

 • 15. ரேவதிநரசிம்ஹன்  |  9:57 முப இல் மார்ச் 14, 2009

  எனக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த வீடு தெரிந்து கொண்டு அந்தக் குழந்தையை வாரிக் கொள்ள ஆசையாய் இருக்கிறது.
  அந்த அம்மா இதற்கு என்றாவது வருந்துவார்.

 • 16. குந்தவை  |  3:43 பிப இல் மார்ச் 14, 2009

  //எனக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த வீடு தெரிந்து கொண்டு அந்தக் குழந்தையை வாரிக் கொள்ள ஆசையாய் இருக்கிறது.
  For me also.

  //அந்த அம்மா இதற்கு என்றாவது வருந்துவார்.
  May be.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
பிப்ரவரி 2009
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: