வீட்டுக்குள்ள நடந்தது

பிப்ரவரி 9, 2009 at 6:20 முப 36 பின்னூட்டங்கள்

             இந்த காலத்தில் காலேஜ்ல கூட சுலபமா புகுந்துரலாம், LKG அட்மிஷன்  கிடைப்பது  தான்  பெரிய  குதிரை  கொம்பாக இருக்கிறது.
           எனக்கு பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆசை,  அதனால் பக்கத்தில் உள்ள எல்லாப்  பள்ளிக் கூடத்திற்கும் படையெடுத்து….. interview   attend  பண்ணி…..யப்பா ஒரு வழியா இடம் பிடிச்சாச்சு.
           ஆனால்  இன்னும் மழலையிலே மிழற்றிக் கொண்டிருக்கும் கண்மணியை  பள்ளிக் கூடத்திற்கு அனுப்ப கஷ்டமாகத்தான் இருக்கின்றது.   
           ஒரே ஆறுதல் அந்த பள்ளிக் கூடத்தில் வீட்டு பாடம் எல்லாம் கிடையாது.  

***************************************************************
           நேற்று எனக்கும் என் வீட்டு காரருக்கும் பயங்கரமான வாக்குவாதம். என்ன விஷயம் என்று கேட்காதீர்கள் ( வழக்கம் போல உப்பு பெறாத விஷயத்துக்கு தான்).
எனக்கு கடைசியில் பயங்கர கோபம் வந்து
  “பாருங்க அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பெரிய ராட்சசி தான் மனைவியா வருவா

     அவர்: “ஏம்மா எல்லாரும் அடுத்த ஜென்மத்தில் இன்னும் நல்ல  மனிதர்களா பிறக்கனும்ன்னு வேண்டுவாங்க, நீ ஏன் இப்படி அடுத்த ஜென்மத்தில் ராட்சசியா பிறக்கனும்ன்னு வேண்டிக்கிற?” 
      நான்:  blank….

Advertisements

Entry filed under: ரசித்தவை.

குழந்தையின் நேரம் இடி மின்னலும்…கண்மணியும்….

36 பின்னூட்டங்கள் Add your own

 • 1. VIjay Kumar  |  8:34 முப இல் பிப்ரவரி 9, 2009

  \\அவர்: “ஏம்மா எல்லாரும் அடுத்த ஜென்மத்தில் இன்னும் நல்ல மனிதர்களா பிறக்கனும்ன்னு வேண்டுவாங்க, நீ ஏன் இப்படி அடுத்த ஜென்மத்தில் ராட்சசியா பிறக்கனும்ன்னு வேண்டிக்கிற?” \\

  உங்க கணவர் ரொம்ப நல்லவருங்க. என் மனைவி இப்படிச் சொல்லியிருந்தால், வேணாம்……. விட்டுடுங்க:-)

  கண்மணியை ஸ்கூலுக்கு அனுப்பப் போறீங்களா. இந்த ஜெனரேஷன் குழந்தைங்கள்லாம், சமத்தா ஸ்கூல் போகுதுங்க. பெற்றோர்கள் தான் ரொம்ப கவலைப் படறோம். கண்மணியை ஸ்கூல் உனிஃபார்மில் ஒரு ஃபோடோ புடிச்சு போடுங்க.

 • 2. குந்தவை  |  9:19 முப இல் பிப்ரவரி 9, 2009

  வாங்கய்யா….
  //உங்க கணவர் ரொம்ப நல்லவருங்க.
  ஏன் சொல்லமாட்டீங்க…

  //கண்மணியை ஸ்கூலுக்கு அனுப்பப் போறீங்களா. இந்த ஜெனரேஷன் குழந்தைங்கள்லாம், சமத்தா ஸ்கூல் போகுதுங்க. பெற்றோர்கள் தான் ரொம்ப கவலைப் படறோம்.

  அது சரிதான், play school க்கு அனுப்புரதுக்கே எனக்கு இஷ்டமில்லை, ஆனா அவளோட அட்டகாசம் தாங்க முடியாமல் அனுப்பிநேன். இப்பவும் அம்மணி எல்லார் கிட்டேயும் ‘நான் big school க்கு போகப்போறேன்’ என்று சொல்லிக்கொண்டு நடக்கிறாள். April லில் தான் பள்ளிக்கூடத்திர்க்கு செல்வாள், கண்டிப்பாக photo பிடித்து போடுகிறேன்.

 • 3. பிரபு  |  9:47 முப இல் பிப்ரவரி 9, 2009

  //
  இந்த காலத்தில் காலேஜ்ல கூட சுலபமா புகுந்துரலாம், LKG அட்மிஷன் கிடைப்பது தான் பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது.
  ///

  நீங்க சேர்வதற்க்கு கேட்டீங்களா????

  /////
  அவர்: “ஏம்மா எல்லாரும் அடுத்த ஜென்மத்தில் இன்னும் நல்ல மனிதர்களா பிறக்கனும்ன்னு வேண்டுவாங்க, நீ ஏன் இப்படி அடுத்த ஜென்மத்தில் ராட்சசியா பிறக்கனும்ன்னு வேண்டிக்கிற?”
  ////

  ஆனாலும் அந்த மனுசனுக்கு துணிச்சல் அதிகம்

  எல்லாம் தலையெழுத்து பாவம்

 • 4. குந்தவை  |  10:20 முப இல் பிப்ரவரி 9, 2009

  //நீங்க சேர்வதற்க்கு கேட்டீங்களா????

  எனக்கு சேருவதற்கு ஆசை தான்…..பையை துக்கிட்டு இருபது கண்மணிகளுடன் இருக்க யாருக்கு கசக்கும்? ஆனா யாரு சேத்துப்பா? (ம… வேணும்ன்னா முதியோர் பள்ளிக்கூடத்தில் சேர்த்து கொள்வார்கள்)

  //ஆனாலும் அந்த மனுசனுக்கு துணிச்சல் அதிகம
  ஹா….ஹா…. அவர்கிட்ட சொல்றேன்.

 • 5. Mukundan  |  11:02 முப இல் பிப்ரவரி 9, 2009

  // அவர்: “ஏம்மா எல்லாரும் அடுத்த ஜென்மத்தில் இன்னும் நல்ல மனிதர்களா பிறக்கனும்ன்னு வேண்டுவாங்க, நீ ஏன் இப்படி அடுத்த ஜென்மத்தில் ராட்சசியா பிறக்கனும்ன்னு வேண்டிக்கிற?”
  //

  அப்படி நினச்சு தான் வேண்டினேன்னு சொன்னீங்களா :))))

 • 6. jeno  |  11:30 முப இல் பிப்ரவரி 9, 2009

  உங்கள் கணவருக்கு உங்க மேலே எவ்வளவு அன்பு. அடுத்த ஜென்மத்திலையும் நீங்கதான் மனைவியா வரனும்ன்னு நினைச்சிட்டு இருக்கிறவர்கிட்ட சும்மா சண்டை போடாதீங்க.

 • 7. Sriram  |  11:53 முப இல் பிப்ரவரி 9, 2009

  // ஏம்மா எல்லாரும் அடுத்த ஜென்மத்தில் இன்னும் நல்ல மனிதர்களா பிறக்கனும்ன்னு வேண்டுவாங்க, நீ ஏன் இப்படி அடுத்த ஜென்மத்தில் ராட்சசியா பிறக்கனும்ன்னு வேண்டிக்கிற //

  அக்கோவ்… அண்ணன் ரொம்ப நல்ல ஆளுங்க…
  தூற்றுவோரையும் (உங்கள தான் ) போற்றும் குணம் அவருக்கு…

 • 8. Sriram  |  11:57 முப இல் பிப்ரவரி 9, 2009

  விருமாண்டி படத்துல ஒரு வசனம் வரும் பாருங்க..
  “மன்னிக்க தெரிஞ்சவன் மனுஷன்
  மன்னிக்க கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன் ” என்று…
  நீங்களும் பெரிய மனுஷன் ஆயிடுங்க அக்கா…(முழிக்காதீங்க…அண்ணன் கிட்ட மனிப்பு கேட்டுடுங்கன்னு சொன்னேன்…)

  அப்புறம் இந்த ஸ்கூல் சமாசாரத்தை கேட்கும் போது, ‘குங்குமப் போட்டு கவுண்டர்’ என்ற படத்தில் சத்யராஜும், கவுண்ட மணியும் அடிக்கிற லூட்டிகள் தான் எனக்கு உடனே ஞாபகத்துக்கு வந்தது…. அது போல நீங்க எவ்வளோ நாழி கியூ ல நின்னீங்க…

 • 9. பிரபு  |  12:34 முப இல் பிப்ரவரி 10, 2009

  ////
  எனக்கு சேருவதற்கு ஆசை தான்…..
  ///
  ஆத்தீ………………..

 • 10. குந்தவை  |  4:17 முப இல் பிப்ரவரி 10, 2009

  //அப்படி நினச்சு தான் வேண்டினேன்னு சொன்னீங்களா )))

  வாங்க அண்ணாச்சி…..இது எந்த ஊருக் குசும்பு?

 • 11. குந்தவை  |  4:22 முப இல் பிப்ரவரி 10, 2009

  //உங்கள் கணவருக்கு உங்க மேலே எவ்வளவு அன்பு. அடுத்த ஜென்மத்திலையும் நீங்கதான் மனைவியா வரனும்ன்னு நினைச்சிட்டு இருக்கிறவர்கிட்ட சும்மா சண்டை போடாதீங்க.

  என்ன செய்ய….. இப்படி அடிக்கடி சண்டை போடும் போது தானே அன்பு வெளிப்படுது…..அதுக்காகவாவது அடிக்கடி குடுமி பிடி சண்டை போடத்தான் வேண்டும்.

 • 12. குந்தவை  |  4:29 முப இல் பிப்ரவரி 10, 2009

  //அக்கோவ்… அண்ணன் ரொம்ப நல்ல ஆளுங்க…
  தூற்றுவோரையும் (உங்கள தான் ) போற்றும் குணம் அவருக்கு…

  பாருங்க என் வீட்டுக்காரரை நல்லவர் வல்லவருன்னு பிரகணபடுத்துவதற்கு எவ்வளவு கஷ்டபட்டிருக்கேன்……நான் எவ்வளவு நல்ல பொண்ணு….

 • 13. குந்தவை  |  4:39 முப இல் பிப்ரவரி 10, 2009

  //முழிக்காதீங்க…அண்ணன் கிட்ட மனிப்பு கேட்டுடுங்கன்னு சொன்னேன்…
  என்ன இது…..வீட்டுகாரர் கிட்ட எல்லாம் மன்னிப்பு கேப்பாங்களா? இது மாதிரி எல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது?

  //நீங்க எவ்வளோ நாழி கியூ ல நின்னீங்க…
  பாவம், கண்மணி அப்பா தான் போய் நின்னாங்க….ஆனா ஒருத்தர் ஒரு பேப்பரில் எல்லாருடைய பெயரையும் வரிசைப்படி எழுதி வைத்ததால், க்யுவில் நிற்காமல் காருல போய் உக்காந்து கொண்டார்கள் .

 • 14. Bhuvanesh  |  5:09 முப இல் பிப்ரவரி 10, 2009

  //”பாருங்க அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பெரிய ராட்சசி தான் மனைவியா வருவா”

  உண்மைய சொல்லுங்க, நீங்க இப்படி தானே சொன்னீங்க “பாருங்க அடுத்த ஜென்மத்திலையும் உங்களுக்கு பெரிய ராட்சசி தான் மனைவியா வருவா”

 • 15. குந்தவை  |  5:48 முப இல் பிப்ரவரி 10, 2009

  //உண்மைய சொல்லுங்க, நீங்க இப்படி தானே சொன்னீங்க “பாருங்க அடுத்த ஜென்மத்திலையும் உங்களுக்கு பெரிய ராட்சசி தான் மனைவியா வருவா”

  இப்படி ஒரு நல்ல பொண்ணுக்கு…..இப்படி ஒரு வில்லன் தம்பியா? அடக் கடவுளே….
  இருந்தாலும் உங்களுக்கு ரெம்ப தங்கமான மனசு தம்பி…..எமன், ராட்சசி…. என்று எனக்கு நிறைய பெயரை வைத்திருக்கிறீர்கள்…

 • 16. Bhuvanesh  |  6:18 முப இல் பிப்ரவரி 10, 2009

  //இப்படி ஒரு நல்ல பொண்ணுக்கு…..இப்படி ஒரு வில்லன் தம்பியா? அடக் கடவுளே….
  இருந்தாலும் உங்களுக்கு ரெம்ப தங்கமான மனசு தம்பி…..எமன், ராட்சசி…. என்று எனக்கு நிறைய பெயரை வைத்திருக்கிறீர்கள்…

  அக்கா, ஒரு தங்கமான தம்பியை பார்த்து இப்படி சொல்லறீங்களே?? நான் மத்தவங்க உங்களை சொல்லறதை சுட்டி காட்டுனேன் அவ்வளவுதான்!!

 • 17. Carter  |  6:27 முப இல் பிப்ரவரி 10, 2009

  பாவம் தான் மனிதன் இந்த ஜென்மத்தில் வாழ எப்படியெல்லாம் மறைமுகமாக பேச வேண்டி உள்ளது

 • 18. குந்தவை  |  6:58 முப இல் பிப்ரவரி 10, 2009

  //பாவம் தான் மனிதன் இந்த ஜென்மத்தில் வாழ எப்படியெல்லாம் மறைமுகமாக பேச வேண்டி உள்ளது

  ஹா……ஹா…. ரெம்ப நொந்துபோயிடீங்க போல….
  இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம்…..
  மேடு பள்ளம் இல்லாவிட்டால் வாழ்க்கை ரசிக்காது.

 • 19. குந்தவை  |  7:03 முப இல் பிப்ரவரி 10, 2009

  // நான் மத்தவங்க உங்களை சொல்லறதை சுட்டி காட்டுனேன் அவ்வளவுதான்!!

  ஆகா…..புல்லரிக்குது தம்பி….. உங்க அன்பு யாருக்கு வரும்… வாழ்க உங்கள் பாசம்…….

 • 20. graceravi  |  9:13 முப இல் பிப்ரவரி 10, 2009

  ஜாடிக்கேத்த மூடி பேசாம சரண்டர் ஆகிடுங்க என்ன நான் சொல்லறது சரிதானே

 • 21. குந்தவை  |  9:36 முப இல் பிப்ரவரி 10, 2009

  //ஜாடிக்கேத்த மூடி பேசாம சரண்டர் ஆகிடுங்க என்ன நான் சொல்லறது சரிதானே
  அது தான் ஏற்கனவே சரண்டர் ஆகியாச்சே….புதுசா சொல்றீங்க….

 • 22. Bhuvanesh  |  9:46 முப இல் பிப்ரவரி 10, 2009

  //அது தான் ஏற்கனவே சரண்டர் ஆகியாச்சே….புதுசா சொல்றீங்க….

  மச்சான் எப்போ அக்கா சரண்டர் ஆனாரு?? என்கிட்டே சொல்லவே இல்ல ??

 • 23. குந்தவை  |  10:19 முப இல் பிப்ரவரி 10, 2009

  நான் அவர்கிட்டேயும் அவர் என்கிட்டேயும் சரண்டர் ஆனதுனால தானே தம்பி அடுத்த ஜென்மத்திலேயும் சேர்ந்தே சண்டை போடுவோம் என்று முடிவு பண்ணியிருக்கோம். (ஹீ…ஹீ….புல்லரிக்குதா…..)

 • 24. Sriram  |  1:01 பிப இல் பிப்ரவரி 10, 2009

  Mudiyala…

 • 25. மோகன்  |  1:55 பிப இல் பிப்ரவரி 11, 2009

  // பாருங்க அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு பெரிய ராட்சசி தான் மனைவியா வருவா //

  அதென்னது அடுத்த ஜென்மத்துல?

 • 26. குந்தவை  |  4:26 முப இல் பிப்ரவரி 12, 2009

  வாங்க சார், என்ன கொஞ்ச நாள் காணாம போயிட்டீங்க.
  //அதென்னது அடுத்த ஜென்மத்துல?

  இதில் மறைந்திருக்கும் நுண்ணரசியலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

 • 27. வல்லபன்  |  9:49 முப இல் பிப்ரவரி 12, 2009

  //நேற்று எனக்கும் என் வீட்டு காரருக்கும் பயங்கரமான வாக்குவாதம்//
  வாக்குவாதத்தை முதலில் தொடங்கியது நீங்களா? அவரா? அவருடைய பதிலை பார்த்தால், அவர் தொடங்கி இருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

  //பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆசை//

  போன வாரம் என்னுடைய வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா. என் நன்பணின் குழந்தை அங்கே படிப்பதால், அவருடன்
  விழாவை காண சென்றேன். நாங்கள் பள்ளியை அடைந்த நேரம், விழா தொடங்கி இருந்தது.

  விழா மேடை முன் இருந்த கூட்டத்தை விட, இன்னொரு இடத்தில் வெகு கூட்டம். ஸெக்யூரிடீயை விசாரித்த போது, அவன் சொன்னது

  ‘ ஸார் அங்கே LKG,UKG Application தராங்க ஸார்.’

  ம்…நாட்டு நெலம இப்படி இருக்குன்னு …நொந்து கொண்டோம்…

 • 28. குந்தவை  |  10:03 முப இல் பிப்ரவரி 12, 2009

  //வாக்குவாதத்தை முதலில் தொடங்கியது நீங்களா?

  இப்படி எல்லாம் ரெம்ப யோசிக்காதீங்க…. அதுவும் கல்யாணம் ஆனா பிறகு கண்டிப்பாக யோசிக்க கூடாது.

  உண்மை என்னன்னா யாரு விவாதத்தை ஆரம்பித்தது, எப்படி ஆரம்பித்ததுன்னு எனக்கே மறந்து போச்சு. ஹி.. ஹி…..

  //ம்…நாட்டு நெலம இப்படி இருக்குன்னு …நொந்து கொண்டோம்…

  இது இப்ப சாதாரண விஷயமா போச்சுங்க…

 • 29. நிஜமாநல்லவன்  |  12:24 பிப இல் பிப்ரவரி 18, 2009

  /ஏம்மா எல்லாரும் அடுத்த ஜென்மத்தில் இன்னும் நல்ல மனிதர்களா பிறக்கனும்ன்னு வேண்டுவாங்க, நீ ஏன் இப்படி அடுத்த ஜென்மத்தில் ராட்சசியா பிறக்கனும்ன்னு வேண்டிக்கிற?” /

  ஹா…ஹா…ஹா….

 • 30. Janu  |  1:20 முப இல் பிப்ரவரி 19, 2009

  அன்புள்ள குந்தவைக்கு,
  ஹிஹி ..எதாச்சும் நல்ல பொண்ணாட்டம் சொல்லணும்னு தான் பார்க்கிறேன் ஹிஹி.. இத தவிர எதுவுமே வர மாட்டேங்குது ..ஹிஹி.. அவர் என்கிட்டே சொல்றதை சொல்லனும்னா…. ஹிஹி .. ஆனாலும் உங்களுக்கு ரொம்பதான் தைரியம் குந்தவை..ஹிஹி ..அப்பாடி ஒரு வழியா எதையோ சொல்லிட்டேன்.. 😉

 • 31. குந்தவை  |  6:00 முப இல் பிப்ரவரி 21, 2009

  Thank U for ஹா…ஹா…ஹா….

  ஹா…ஹா…ஹா….

 • 32. குந்தவை  |  6:02 முப இல் பிப்ரவரி 21, 2009

  ha…ha…
  //எதாச்சும் நல்ல பொண்ணாட்டம் சொல்லணும்னு தான் பார்க்கிறேன்

  It’s Ok. I understood. he… he…..

 • 33. தேவா.  |  12:16 பிப இல் பிப்ரவரி 23, 2009

  இந்த காலத்தில் காலேஜ்ல கூட சுலபமா புகுந்துரலாம், LKG அட்மிஷன் கிடைப்பது தான் பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது.//

  ஆமா! பெயில் ஆனாக்கூட காலேஜ் கிடைக்கும். எல் கே ஜி கிடைக்காது!

 • 34. தேவா.  |  12:18 பிப இல் பிப்ரவரி 23, 2009

  சண்டை நல்லா இருக்கு!
  அவரு பெரிய ராட்சசியெல்லாம் தாங்குவார்ன்னு நினைக்கிறேன்!!!
  இஃகி இஃகி!!

 • 35. குந்தவை  |  6:46 முப இல் பிப்ரவரி 24, 2009

  //ஆமா! பெயில் ஆனாக்கூட காலேஜ் கிடைக்கும். எல் கே ஜி கிடைக்காது!

  ஆகா….

 • 36. குந்தவை  |  6:48 முப இல் பிப்ரவரி 24, 2009

  //இஃகி இஃகி!!

  நாங்க சீரியஸா சண்டை போடும் போது என்ன சிரிப்பு வேண்டிகிடக்கு?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
பிப்ரவரி 2009
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: