இடி மின்னலும்…கண்மணியும்….

பிப்ரவரி 24, 2009 at 6:01 முப 39 பின்னூட்டங்கள்

                  நேற்று  திடீரென்று பயங்கர இடி இடித்து , மின்னல் வெட்டியது. மழை என்னமோ அரசியல்வாதியின் போலிக்கண்ணீர் மாதிரி படபடவென்று ஐந்தாறு துளி தான் போட்டது. ஆனால் கண்மணி  அந்த சத்தத்தில் கொஞ்சம் பயந்து போனாள்.

 “அம்மா என்ன சத்தம்”

“இடி சத்தம் கண்மணி. பயப்படாதம்மா, பாரு மழை பெய்கிறது”

ம்…..” என்று வெளியே சிறிது நேரம் பார்த்தவள்,
 திடீரென்று வேகமாக  “அம்மா….அப்பா எங்கம்மா போயிருக்காங்க?”

“அப்பா ஆபீஸ் போயிருக்காங்க…”

“அபீஸ்ல என்ன பண்ணுவாங்க?”

“வேலை பாப்பாங்க…என்னம்மணி திடீரென்று கேட்கிறாய்!”  என்றேன் ஆச்சரியத்துடன்.

            அவளோ அதேமாதிரி முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு “இல்லம்மா….அப்பா….ஆபீஸ்ல கதவை மூடி வச்சிட்டு தானே வேலைபாப்பாங்க?”

ஆமா கண்மணி……” கண்மணியின் பயம் என்னவென்று புரிந்து….”அப்பா பத்திரமா இருப்பாங்க…” என்ற பிறகு தான் அவளுக்கு நிம்மதி வந்தது.

        அதன் பிறகு தான் நார்மலாகி வழக்கம் போல், இடி ஏன்? எப்படி? எங்கிருந்து வருகிறது…… என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு….அப்பப்பா…..

            கண்மணி அப்பா வந்தவுடன் இதைக் கூறினேன், அவர் ஒரு புன்சிரிப்புடன் கண்மணியை அள்ளி அணைத்து கொண்டார். கண்மணிக்கு வாயெல்லாம் பல்லுதான். நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும்  நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்.

Advertisements

Entry filed under: கண்மணியின் பூங்கா.

வீட்டுக்குள்ள நடந்தது கலர் பண்ணத் தெரியுமா?

39 பின்னூட்டங்கள் Add your own

 • 1. Bhuvanesh  |  6:08 முப இல் பிப்ரவரி 24, 2009

  Me the first

 • 2. Bhuvanesh  |  6:09 முப இல் பிப்ரவரி 24, 2009

  ஐ.. நான் தன் பஸ்ட்!!

 • 3. Bhuvanesh  |  6:12 முப இல் பிப்ரவரி 24, 2009

  // நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்

  உங்களுக்காக நானும் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுட்டேன்..

 • 4. Bhuvanesh  |  6:15 முப இல் பிப்ரவரி 24, 2009

  எங்க ரொம்ப நாளா காணோம்?? சொல்லாம இப்படி அபீட் ஆகாதீங்க!!

 • 5. குந்தவை  |  6:31 முப இல் பிப்ரவரி 24, 2009

  Yes, You are first Thampi.

 • 6. குந்தவை  |  6:33 முப இல் பிப்ரவரி 24, 2009

  //உங்களுக்காக நானும் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுட்டேன்..

  நன்றி தம்பி. இப்படி ஒரு பாசமுள்ள தம்பி இருக்கும் போது வேறு என்ன வேணும்?

 • 7. குந்தவை  |  6:38 முப இல் பிப்ரவரி 24, 2009

  //எங்க ரொம்ப நாளா காணோம்?? சொல்லாம இப்படி அபீட் ஆகாதீங்க!!

  நான் வேலை செய்யிற இடத்தில் ‘நீங்க அநியாத்துக்கு வேலை செய்றீங்க’ என்று net connection ஐ புடுங்கி விட்டுட்டாங்க. 😦

 • 8. Bhuvanesh  |  6:41 முப இல் பிப்ரவரி 24, 2009

  //நான் வேலை செய்யிற இடத்தில் ‘நீங்க அநியாத்துக்கு வேலை செய்றீங்க’ என்று net connection ஐ புடுங்கி விட்டுட்டாங்க.

  இது மனித உரிமை மீறல்.. நம் தொழிலாளிகளின் உரிமை பிரச்சனைனு போராட்டம் நடத்தலாமா??

 • 9. குந்தவை  |  6:55 முப இல் பிப்ரவரி 24, 2009

  //இது மனித உரிமை மீறல்.. நம் தொழிலாளிகளின் உரிமை பிரச்சனைனு போராட்டம் நடத்தலாமா??

  போராட்டம் நடத்தலாமே. ஆனா உண்ணாவிரதப் போராட்டம் மட்டும் வேண்டாம்…. என்னால சாப்பிடாமல் எல்லாம் இருக்கமுடியாது..

 • 10. Sriram  |  7:03 முப இல் பிப்ரவரி 24, 2009

  //அபீஸ்ல என்ன பண்ணுவாங்க?”

  “வேலை பாப்பாங்க…என்னம்மணி திடீரென்று கேட்கிறாய்!” என்றேன் ஆச்சரியத்துடன்.//

  அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் என்று ஆச்சரிய பட்டீர்களா இல்லை கண்மணி கேட்டதற்காக ஆச்சரிய பட்டீர்களா?

 • 11. அ.மு.செய்யது  |  7:03 முப இல் பிப்ரவரி 24, 2009

  அழகான குட்டிக் கதை…

  வெகுவாக ரசித்தேன்..

 • 12. குந்தவை  |  7:46 முப இல் பிப்ரவரி 24, 2009

  //அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார் என்று ஆச்சரிய பட்டீர்களா இல்லை கண்மணி கேட்டதற்காக ஆச்சரிய பட்டீர்களா?

  ஹ..ஹா…கண்மணி கேட்டதற்கு தான் ஆச்சர்யப்பட்டேன்.
  பாவம் அவர் பாட்டுக்கு வேலை பாத்துட்டு இருக்கார்… அவரை சொல்லுவேனா?
  ஒரு வீட்டுல , ஒருத்தராவது பொறுப்பா இருக்கவேண்டாமா?

 • 13. குந்தவை  |  7:48 முப இல் பிப்ரவரி 24, 2009

  //அழகான குட்டிக் கதை…

  கதையில்லீங்க…. வீட்டுல நடந்தது.

  //வெகுவாக ரசித்தேன்..

  ரசித்தமைக்கு நன்றி.

 • 14. மோகன்  |  8:24 முப இல் பிப்ரவரி 24, 2009

  // நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன். //

  அப்ளிகேசன் போட தேவை இல்லை அக்கா. எப்போதும் பாசமும் அக்கறையும் இருக்கும் 🙂

 • 15. மோகன்  |  8:25 முப இல் பிப்ரவரி 24, 2009

  // போராட்டம் நடத்தலாமே. ஆனா உண்ணாவிரதப் போராட்டம் மட்டும் வேண்டாம்…. என்னால சாப்பிடாமல் எல்லாம் இருக்கமுடியாது.. //

  ஆகா

 • 16. நிஜமாநல்லவன்  |  8:50 முப இல் பிப்ரவரி 24, 2009

  /இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்./

  நாங்களும் ஒரு அப்ப்ளிகேஷன் போட்டுட்டோம் நீங்க எல்லோரும் எப்பவும் பாசமா இருக்கணும் என்று!

 • 17. நிஜமாநல்லவன்  |  8:52 முப இல் பிப்ரவரி 24, 2009

  /மழை என்னமோ அரசியல்வாதியின் போலிக்கண்ணீர் மாதிரி படபடவென்று ஐந்தாறு துளி தான் போட்டது./

  அட அரசியல்வாதிங்க கண்ணுல ஐந்தாறு துளி வருதா….கண்ணீரே வராம தானே அழுவாங்க…:)

 • 18. நிஜமாநல்லவன்  |  8:54 முப இல் பிப்ரவரி 24, 2009

  /அதன் பிறகு தான் நார்மலாகி வழக்கம் போல், இடி ஏன்? எப்படி? எங்கிருந்து வருகிறது…… என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு….அப்பப்பா…./

  ரொம்ப சாமர்த்தியமா ஒரு விஷயத்தை மறைச்சிட்டீங்க அக்கா….கண்மணி கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியா பதில் சொன்னீங்களா இல்லையா???

 • 19. Mukundan  |  12:10 பிப இல் பிப்ரவரி 24, 2009

  // நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்//

  நானும் உங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனோ வேண்டிகொள்கிறேன் 🙂

 • 20. Mukundan  |  12:10 பிப இல் பிப்ரவரி 24, 2009

  // நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்//

  நானும் உங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன் 🙂

 • 21. Vijay  |  12:59 பிப இல் பிப்ரவரி 24, 2009

  கண்மணிக்கு சுத்திப் போடுங்க. இம்புட்டுப் பேர் கண்ணும் பட்டுடப் போகுது 🙂

 • 22. குந்தவை  |  1:11 பிப இல் பிப்ரவரி 24, 2009

  //அப்ளிகேசன் போட தேவை இல்லை அக்கா. எப்போதும் பாசமும் அக்கறையும் இருக்கும்

  Thank U for ur blessing thampi.

 • 23. குந்தவை  |  1:12 பிப இல் பிப்ரவரி 24, 2009

  //ஆகா

  he…he..

 • 24. குந்தவை  |  1:15 பிப இல் பிப்ரவரி 24, 2009

  //நாங்களும் ஒரு அப்ப்ளிகேஷன் போட்டுட்டோம் நீங்க எல்லோரும் எப்பவும் பாசமா இருக்கணும் என்று!

  Thank U

 • 25. குந்தவை  |  1:25 பிப இல் பிப்ரவரி 24, 2009

  //அட அரசியல்வாதிங்க கண்ணுல ஐந்தாறு துளி வருதா….கண்ணீரே வராம தானே அழுவாங்க…:)

  இல்லாத வாய்க்காலுக்கு பாலம் கட்டுவது மாதிரி….
  அடக் கடவுளே, இது வேறயா…

 • 26. குந்தவை  |  1:27 பிப இல் பிப்ரவரி 24, 2009

  //ரொம்ப சாமர்த்தியமா ஒரு விஷயத்தை மறைச்சிட்டீங்க அக்கா….கண்மணி கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியா பதில் சொன்னீங்களா இல்லையா???

  இப்படியா போட்டு உடைக்கிறது!… நல்லாயிருங்க…

 • 27. குந்தவை  |  1:29 பிப இல் பிப்ரவரி 24, 2009

  //நானும் உங்களுக்காக எல்லாம் வல்ல இறைவனோ வேண்டிகொள்கிறேன்

  ரெம்ப நன்றிங்கோ

 • 28. குந்தவை  |  1:31 பிப இல் பிப்ரவரி 24, 2009

  //கண்மணிக்கு சுத்திப் போடுங்க. இம்புட்டுப் பேர் கண்ணும் பட்டுடப் போகுது

  🙂

 • 29. ஜமால்  |  2:08 முப இல் மார்ச் 1, 2009

  நாங்களும் எங்கள் பிரார்த்தனையுடன்

  \\நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்.\\

 • 30. குந்தவை  |  5:36 முப இல் மார்ச் 1, 2009

  //நாங்களும் எங்கள் பிரார்த்தனையுடன்
  ஜமால், பிரார்த்தனையுடன் வந்திருக்கீங்க, வாங்க

 • 31. prabu  |  5:04 பிப இல் மார்ச் 1, 2009

  31

 • 32. prabu  |  5:04 பிப இல் மார்ச் 1, 2009

  ///
  அரசியல்வாதியின் போலிக்கண்ணீர் மாதிரி படபடவென்று ஐந்தாறு துளி தான் போட்டது
  /////

  அடடா!!!!!!

 • 33. prabu  |  5:06 பிப இல் மார்ச் 1, 2009

  //
  அதன் பிறகு தான் நார்மலாகி வழக்கம் போல், இடி ஏன்? எப்படி? எங்கிருந்து வருகிறது…… என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு….அப்பப்பா…..
  ////

  பாப்பா என்னை மாதிரி அறிவு…………….

 • 34. prabu  |  5:07 பிப இல் மார்ச் 1, 2009

  ///
  நான் இந்த பாசமும் அக்கரையும் எப்போதும் நிலைக்க கடவுளிடம் ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுக்கொண்டேன்.
  ////

  ஆகட்டும் ஆகட்டும் ( அஹம் பிரம்மாஸ்மி )

 • 35. prabu  |  5:07 பிப இல் மார்ச் 1, 2009

  வாழ்த்துக்கள்

 • 36. Janu  |  11:57 முப இல் மார்ச் 3, 2009

  Dear kunthavai..

  Me the 36th.. 😦

  I do pray for you and your lovely family .. May god bless you all with everlasting happiness, mirth and joy…

  do pass my hugs to kanmani..

  நேற்று திடீரென்று பயங்கர இடி இடித்து , மின்னல் வெட்டியது. மழை என்னமோ அரசியல்வாதியின் போலிக்கண்ணீர் மாதிரி படபடவென்று ஐந்தாறு துளி தான் போட்டது.

  …I thoroughly enjoyed these lines.. :D..

  expecting more pathivugal..

  cheers,
  janu

 • 37. Bhuvanesh  |  2:49 பிப இல் மார்ச் 9, 2009

  Akka, Romba naalaa aalai kaanom ?

 • 38. குந்தவை  |  4:30 முப இல் மார்ச் 11, 2009

  Thank U for your prayers and hugs Janu.
  ரசித்தமைக்கு நன்றி.

 • 39. குந்தவை  |  4:32 முப இல் மார்ச் 11, 2009

  //பாப்பா என்னை மாதிரி அறிவு…………….

  முடியல….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


அண்மைய பதிவுகள்

பக்கங்கள்

Blog Stats

 • 37,455 hits
பிப்ரவரி 2009
தி செ பு விய வெ ஞா
« ஜன   மார்ச் »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

%d bloggers like this: